கர்ப்பிணிகள் பப்பாளி பழம் சாப்பிடலாமா?
Page 1 of 1
கர்ப்பிணிகள் பப்பாளி பழம் சாப்பிடலாமா?
கர்ப்பமாக இருக்கும் போது எந்த உணவை சாப்பிட்டாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதில் முக்கியமாக பப்பாளி பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்களும், முன்னோர்களும் சொல்வார்கள். கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி கருவை அழிப்பதை விட, பப்பாளியின் காயை சாப்பிட்டு வந்தால், கரு உருவாகாமல் தடுக்கலாம்.
ஏனெனில் பப்பாளியில் லாடெக்ஸ் என்னும் பொருள் உள்ளது. இது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதனை கர்ப்பத்தின் ஆரம்ப நிலையில் சாப்பிட்டால், அதில் உள்ள லாடெக்ஸ் நிச்சயம் கர்ப்பத்தை கலைத்துவிடும். அதுவே கர்ப்பமாக இருக்கும் போது சற்று தாமதமாக இந்த பப்பாளியை சாப்பிட்டால், குறை பிரசவத்தில் குழந்தை பிறக்கும்.
நிறைய பெண்களுக்கு பப்பாளி அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால் ஏற்படும் அலர்ஜிக்கு லாடெக்ஸ் அலர்ஜி என்று பெயர். இந்த அலர்ஜியால் பாதிக்கப்பட்ட பெண்கள், இதை பார்த்தாலே அவர்களுக்கு அந்த அலர்ஜி வேலை செய்ய ஆரம்பித்துவிடும். மேலும் இந்த அலர்ஜி உள்ள பெண்கள், வாழைப்பழம், கோதுமை மற்றும் ஆப்பிள் போன்றவற்றை கூட சாப்பிட முடியாத நிலையில் பாதிக்கப்படுவர்.
ஆகவே பப்பாளி பழமாக இருந்தாலும் சரி, காயாக இருந்தாலும் சரி, கர்ப்பிணிகள் இதை முற்றிலும் தவிர்ப்பது பாதுகாப்பானது. அதிலும் இந்த பப்பாளியை சாப்பிட வேண்டுமென்றால், உங்கள் மருந்துவரை அணுகி பின்னர் சாப்பிடுங்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பப்பாளி பழம், பப்பாளி காய் மற்றும் அதன் பாலின் மருத்துவ குணங்கள்
» கர்ப்பிணிகள் அன்னாசிப்பழம் சாப்பிடலாமா?
» கர்ப்பமாக இருக்கும் போது பப்பாளி சாப்பிடலாமா? கூடாதா?
» முழு மாத்திரையை இரண்டாக்கிச் சாப்பிடலாமா?
» கர்ப்பிணிகள் பப்பாளி உண்ணலாமா?
» கர்ப்பிணிகள் அன்னாசிப்பழம் சாப்பிடலாமா?
» கர்ப்பமாக இருக்கும் போது பப்பாளி சாப்பிடலாமா? கூடாதா?
» முழு மாத்திரையை இரண்டாக்கிச் சாப்பிடலாமா?
» கர்ப்பிணிகள் பப்பாளி உண்ணலாமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum