அதிகரித்த மாதவிடாய் போக்கு
Page 1 of 1
அதிகரித்த மாதவிடாய் போக்கு
பெண்களுக்கு அதிகரித்த மாதவிடாய் போக்கு உடல் சோர்வு அசதி, வெறுப்பு, இடுப்பு, வலி, உடல் வெளுப்பு, வீக்கம் ஆகியவை இந்த நோய்க்கான அறிகுறிகள். இதை பெரும்பாடு என்றும் அழைப்பார்கள்.
முறையற்ற கருக்கலைப்பு, கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவதில் ஏற்படும் ஒவ்வாமை, கருப்பை அழற்சி மற்றும் இடம் பெயர்தல் கரு உறுப்புகளில் கட்டிகள், கழவைகள், புற்றுநோய் ஏற்படுதல், அதிக ரத்தசோகை, நாளமில்லா சுரப்பிகளின் மாறுபட்ட செயல்திலை உள்ளிட்ட காரணங்களாலும் அதிகப்படியான மாதவிடாய் போக்கு ஏற்படலாம்.
சாதாரண நிலையை விட அதிகப்படியான மாதவிடாய் போக்கு காணப்பட்டால் கைப்பக்குவ மருந்தாக, நாவற்பட்டை குடிநீர் தயார் செய்து குடிக்கலாம். அதாவது 10 கிராம் நாவற்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து 200 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து 50 மில்லியாக வந்ததும் வடிகட்டி தினமும் 2 வேளை குடிக்க கொடுக்கலாம்.
10 கிராம் அசோகுப்பட்டையை இடித்து 200 மில்லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிநீராக தினமும் 2 வேளை குடிக்கலாம். அதிக மாதவிடாய் போக்கு இருந்தால் காரமான உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.
இளஞ்சூடான, காரம் குறைந்த உணவுகள், வாழைப்பூ உணவுகள் ஆகியவற்றை தாராளமாக சாப்பிடலாம். சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்பட்ட சிலாசத்துப் பற்பம் 200 மில்லி கிராம் எடுத்து 5 முதல் 10 மல்லி நெய் அல்லது வெண்ணெயில் கலந்து தினமும் 2 வேளை கொடுக்கலாம்.
குங்கிலிய பற்பம், படிகப் பூங்காவி செந்தூரம் ஆகியவையும் சிறந்த மருத்துப் பொருட்கள். வெண் பூசணி லேகியத்தை 5 முதல் 10 கிராம் அளவில் தினமும் 2 வேளையாக அரை தம்ளர் பாலுடன் கலந்து சாப்பிடலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மாதவிடாய் பிரச்சினைகளுக்கு....
» மாதவிடாய் சுழற்சி
» பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கு குறைய
» மாதவிடாய் வலி...
» மாதவிடாய் பிரச்சினைகளுக்கு
» மாதவிடாய் சுழற்சி
» பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கு குறைய
» மாதவிடாய் வலி...
» மாதவிடாய் பிரச்சினைகளுக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum