கருப்பை கோளாறை தடுக்கும் சத்தான உணவுகள்....
Page 1 of 1
கருப்பை கோளாறை தடுக்கும் சத்தான உணவுகள்....
கருப்பைதான் பெண்ணின் உடல் வலிமைக்கு ஆதாரமான ஹார்மோன்களை தருகிறது. பெண்ணின் சினைமுட்டைப்பையில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் பெண்தன்மையை தருகிறது. எலும்புகளை வலுவாக்குகிறது. மாதவிடாய் நிற்பதற்கு முன்பே கருப்பையை எடுத்துவிடும் பெண்களுக்கு தூக்கமின்மை, அடிக்கடி கோபம்,
சலிப்பு, மனஉளைச்சல் போன்றவை ஏற்படுகின்றன.
எனவே கருப்பையினை பாதுகாக்க சில ஆலோசனைகளை கூறுகின்றனர் மருத்துவ நிபுணர்கள். அடிக்கடி அபார்சன், அடிக்கடி குழந்தைப்பேறு, மாதவிலக்கின் போது அதிக உதிரப்போக்கு, நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் போன்றவைகளினால் கருப்பை பாதிக்கப்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.
பரம்பரை காரணமாகவும் கருப்பை பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. கருப்பையை பாதுகாக்க நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும். உணவில் கூடுமானவரை உப்பை குறைக்கவேண்டும். அரிசி சாதத்தை குறைத்து காய்கறி, கீரைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
ஆட்டு ஈரலை எடுத்து சூப் வைத்து குடித்தால் கர்ப்பப்பை பலப்படும். முருங்கைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் கருப்பைக்கு நன்மை தரும். கருப்பை கோளாறுகள் வராமல் தடுக்க அசோகமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம். அருகம்புல் வேருடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.
அசோகமரப்பட்டை, மாதுளம் பழத்தை காய வைத்து பொடி செய்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் மூன்று சிட்டிகை அளவுக்கு தண்ணீரில் கலந்து குடித்தால் கருப்பை கோளாறுகள் குணமாகும். ஆலமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை வீக்கம் குணமாகும்.
பத்து கிராம் இம்பூறல் வேர்ப்பட்டையுடன் ஒரு கிராம் பெருங்காயம் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மாதவிலக்கு கோளாறு சரியாகும். கரிசலாங்கண்ணி கீரைச்சாறு 30 மில்லியுடன் பருப்பு கீரைசாறு 30 மில்லி எடுத்து இரண்டையும் ஒன்றாக கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் ஆரம்பநிலை புற்றுநோய் குணமாகும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சத்தான உணவு கருப்பை கோளாறை தடுக்கும்
» ரத்தத்தை சுத்தமாக்கும் சத்தான உணவுகள்!
» சத்தான உணவுகள் சந்ததியை உருவாக்கும்...
» தேர்வு பயத்தை நீக்கும் சத்தான உணவுகள்
» பெண்கள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள்
» ரத்தத்தை சுத்தமாக்கும் சத்தான உணவுகள்!
» சத்தான உணவுகள் சந்ததியை உருவாக்கும்...
» தேர்வு பயத்தை நீக்கும் சத்தான உணவுகள்
» பெண்கள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum