பிரச்சனை மும்பையில் பிரளயம் பெப்சியில்
Page 1 of 1
பிரச்சனை மும்பையில் பிரளயம் பெப்சியில்
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுகிற கிராமத்து பழமொழிதான் இதுவும்.
FILE
தென்னிந்தியாவைச் சேர்ந்த அதிலும் குறிப்பாக தமிழ் திரையுலகைச் சேர்ந்த சண்டைக் கலைஞர்கள்தான் மற்ற மொழிப் படங்களில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். கட்டுமஸ்தான அடியாட்களுக்கு இன்றும் தமிழ் சினிமாதான் முதலிடம். ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸில் அதிகமும் நம்மாட்கள்தான். நம்மூர் பெப்சி விஜயன் சல்மான் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு தொடர்ச்சியாக ஸ்டண்ட் மாஸ்டராக இருந்து வருகிறார்.
சல்மானின் மென்டல் படத்தில் வழக்கம் போல நம்மாட்கள்தான் அதிகம். மும்பை ஆட்களுக்கு அதில் கோபம். தென்னிந்திய ஆட்களை குறைக்க வேண்டும் என்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் படப்பிடிப்பே பல நாட்களுக்கு ரத்தானதாம். இந்தப் பிரச்சனையை தமிழ் சினிமாவின் சண்டைக் கலைஞர்கள் தொடர்ச்சியாக எல்லா மொழிகளிலும் சந்தித்து வருகிறார்கள். இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று ஸ்டண்ட் நடிகர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழ் என்றில்லை எந்த மொழிப் படங்களின் சண்டைக் காட்சிகளிலும் அவர்கள் பங்கேற்க மாட்டார்கள்.
இந்த சங்கத்தின் தலைவர் பெப்சி விஜயன் அளித்த பேட்டியில் பெப்சியின் இந்நாள் தலைவர் அமீரை ஒரு பிடிபிடித்தார். பெப்சி எங்களின் பிரச்சனையை கண்டு கொள்ளவேயில்லை, அதனால் அமீர் பதவி விலக வேண்டும் என விஜயன் கோரிக்கை வைத்தார்.
விஜயனுக்கு பெப்சி என்ற அடைமொழி கிடைக்க காரணம் அவரும் ஒரு காலத்தில் பெப்சி தலைவராக இருந்ததால்தான். ஆதிபகவன் படத்தில் ஸ்டண்ட் அமைத்தவரின் பெயரை கீழே தள்ளி, ஸ்டண்ட் கோரியோகிராஃபர் என்று முந்திரிக் கொட்டையாக தனது பெயரை முதலில் போட்டுக் கொண்டார் அமீர். அதில் ஸ்டண்ட் கலைஞர்கள் அனைவருக்கும் அவர் மீது கோபம். இப்போது வாகாக சிக்கியிருக்கிறார். வறுக்காமல் விட மாட்டார்கள்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரச்சனை மும்பையில் பிரளயம் பெப்சியில்
» மும்பையில் தொடங்கும் அஜீத் படம்
» மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 புதுவீடு!
» மும்பையில் முகாமிடும் கோடம்பாக்கம்
» மும்பையில் ‘கட்டவிழ்த்த’ திரிஷா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum