தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கர்ப்பிணிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை

Go down

கர்ப்பிணிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை Empty கர்ப்பிணிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை

Post  meenu Tue Jan 22, 2013 5:20 pm


இன்றைய காலத்தில் நாகரீகம் ௭ன்ற பெயரில் நிறைய செயல்களை மக்கள் பின்பற்றி வருகின்றனர். அத்தகைய செயல்களை கர்ப்பமாக இருக்கும் பெண்களுள் சிலரும் பின்பற்றுகின்றனர். இதனால் உடல் நலம் பாதிப்பதோடு, கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

கர்ப்பமாக இருக்கும் போது ‘ஹீல்ஸ்’ இருக்கும் பாதணிகள் அணிந்தால், ௭ந்த நேரத்தில் வேண்டுமானாலும் அசம்பாவிதம் நடக்க நேரிடும். அதிலும் கருசிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இத்தகைய பாதணிகள் அணிவதை தவிர்ப்பது நல்லது. ‘லெகின்’ ‘டைட்ஸ்’ போன்ற பலவிதமான ஆடைகள் வந்துள்ளன.

அவற்றில் நிறைய பெண்கள் அணிவது டைட்ஸ் தான். இத்தகைய டைட்ஸ்சை கர்ப்பிணிகள் அணியக்கூடாது. ஏனென்றால் இவற்றால் அடிவயிற்றிற்கு அழுத்தம் ஏற்பட்டு, கருவிற்கு பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். கர்ப்ப காலத்தில் மேக்–கப் போடாமல் இருக்கும் பெண்களைப் பார்ப்பதே கஷ்டம். ௭ந்த பெண்ணும் மேக்–கப் இல்லாமல் வெளியே வரமாட்டார்கள்.

அதிலும் அழகுப் பொருட்களில் சாதாரணமாக பயன்படுத்தும் உதட்டுசாயம் மற்றும் நெயில் பாலிஷ் தான் பெரும் பாதிப்பை உண்டாக்கக் கூடியவை. இதில் உள்ள இரசாயனம் சிறிது வயிற்றில் சென்றாலும், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்து தான்.

ஆகவே கர்ப்பிணிகள் அழகுக்காக நெயில் பாலிஷ் போடுவதற்கு பதிலாக மருதாணியை அரைத்து வைக்கலாம். கர்ப்பமாக இருக்கும் போது தலைக்கு வர்ணம் தீட்டக்கூடாது. ஏனெனில் அனைத்து ஹேர் கலரிலும் அமோனியா உள்ளது. ஆகவே இதில் இருந்து வரும் வாசனையை நுகரும் போது குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை அடிக்கடி ஏற்படும்.

ஆகவே கர்ப்பமாக இருக்கும் போது கெமிக்கல் கலந்த ஹேர் கலரை பயன்படுத்துவதை விட, இயற்கை பொருட்களான ஹென்னாவை பயன்படுத்தலாம். கர்ப்பிணிகள் ௭ப்போதும் உள்ளாடையை இறுக்கமாக அணியக்கூடாது.

ஏனெனில் அவ்வாறு அணிந்தால் கர்ப்ப காலத்தில் உடலில் சுரக்கும் பால் உற்பத்தி தடைபடும். ஆகவே அத்தயை இறுக்கமான உடையை தவிர்த்துவிட வேண்டும். மேற்கூறியவற்றை நினைவில் கொண்டு, கடைபிடித்து வந்தால், ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுக்கலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum