பிரசவ கால விடுப்பு எடுக்க சில யோசனைகள்...
Page 1 of 1
பிரசவ கால விடுப்பு எடுக்க சில யோசனைகள்...
கர்ப்ப காலத்தில் பெண்கள் பலவற்றிற்கும் தயார் செய்து கொள்ள வேண்டும். அதிலும் முக்கியமாக வேலைக்குச் செல்லும் பெண்களின் அலுவலகங்களில் பிரசவத்திற்காக அளிக்கப்படும் மகப்பேறு விடுப்புகளை எப்படி, எந்த நேரம் எடுத்தால், சௌகரியமாக இருக்கும் என்பதை மருத்துவரிடம் ஆலோசித்து, அதன்படி அந்த விடுப்புகளை உபயோகிக்க வேண்டும்.
* உங்கள் பேறுகால விடுப்பை எடுக்க எத்தனை வாரங்கள் அளிக்கப்படுகிறது என தெரிந்து கொள்ளவும். பின் அவற்றை வைத்தும், குழந்தையுடன் சிறிது நாட்கள் இருக்குமாறும் விடுப்பு எடுத்தல் நல்லது.
அதிலும் பிரசவத்திற்கு ஒரு வாரம் அல்லது மூன்று நாட்கள் இருக்கும் சமயத்தில் விடுப்பு எடுக்கலாம் என்று யோசித்து, அதற்கேற்றாற் போல் விண்ணப்பித்தால், எந்த சிக்கல்களும் ஏற்படாமல் இருக்கும். மகப்பேறு விடுப்பு ஒரு மூன்று மாத காலம் இருக்கும். நீங்கள் நீண்ட நாள் விடுப்பை விண்ணப்பிக்க நினைத்தால், அந்த விடுப்பிற்கு சம்பளம் உண்டா இல்லையா என்று யோசித்து, அதற்கு தகுந்தவாறு விண்ணப்பிப்பது குறித்து தீர்மானிக்க வேண்டும்.
* ஆரம்ப காலத்தில் இருந்து சேமித்து வைத்துள்ள விடுமுறைகளை பிரசவ நேரத்தில் உபயோகித்து கொள்ள, அலுவலகத்தில் அனுமதி உண்டா என்று அறிந்திருத்தல் நல்லது. இதனால் சேமித்த விடுமுறை நாட்கள், பிரசவத்திற்குப் பின் குழந்தையுடன் சில நாட்கள் இருக்க உபயோகப்படும்.
மகப்பேறு விடுப்பிற்காக கையெழுத்து வாங்க செல்லும் போது, குழந்தை பிறந்த பிறகு எப்பொழுது வேலைக்கு திரும்புவதாக உள்ளீர் என்று முதலாளியிடம் தெரிவிப்பது நல்லது. இதனால் பிரசவத்தின் நல்ல செய்தியை அவரிடம் கூறும் பொழுது, அப்போது தேவையான விடுமுறை கோரிக்கைகளையும் சேர்த்து சொன்னால், எந்த வகை பிரச்சினையுமின்றி விடுமுறை காலங்கள் சுமுகமாக அமையும்.
* விடுமுறைக்கு செல்லும் முன் உங்களின் அனைத்து வேலைகளையும் சரியான நபருக்கு சொல்லி கொடுத்தால், விடுமுறை காலங்களில் எந்த ஒரு வேலை டென்ஷனும் இருக்காது. முக்கியமாக எல்லா தகவல்களையும் அவருக்கு தெரிவித்தல் அவசியம்.
அப்படி வேலையை பற்றி உங்களிடம் அவர் தொடர்பு கொள்வதற்கு ஏற்ற சமயத்தையும் அவருக்கு முன்னரே தெரிவித்தல் நல்லது. இதனால் மீண்டும் வேலைக்கு வரும் போது எந்த ஒரு விபரீதத்தையும் ஏற்படுத்தாமல் தடுக்கும்.
* மகப்பேறு விடுப்பில் செல்லும் முன் அலுவலகத்தில் உள்ள பொருள்களை பத்திரபடுத்தி, மேஜையை சுத்தமாகவும், முடிந்தவரை நேர்த்தியாகவும் செய்து செல்வது நல்லது. இவற்றால் விடுமுறை முடிந்து வருகையில் பொருட்கள் காணவில்லை என்று வேதனைப்பட தேவையில்லை.
அதிலும் அலுவலக வேலைகளான தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டிய விஷயங்கள், மின்னஞ்சல் அனுப்புவது, மற்றும் இதர தற்காலிக வேலைகளை முடித்து சென்றால் எளிதாக இருக்கும். இல்லையேல் அது தேவையற்ற டென்ஷன்களில் கொண்டு போய் நிறுத்தும். மேலும் உங்களுடன் வேலை செய்பவர், நீங்கள் வேலைகளை சரியாக முடிக்காமல் சென்றதாக குறை கூற வாய்ப்புள்ளது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பிரசவ கால விடுப்பு எப்ப எடுத்தா நல்லது?
» பிரசவ கால விடுப்பு எப்ப எடுத்தா நல்லது?
» பசி எடுக்க
» பசி எடுக்க
» பசி எடுக்க
» பிரசவ கால விடுப்பு எப்ப எடுத்தா நல்லது?
» பசி எடுக்க
» பசி எடுக்க
» பசி எடுக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum