கர்ப்பகால பராமரிப்புகள்
Page 1 of 1
கர்ப்பகால பராமரிப்புகள்
தாய்மை பேறு ஒரு மகத்தான விஷயம். ஒரு பெண் கர்ப்பமுற்றிருக்கும் காலத்தில் செய்ய வேண்டியது செய்ய கூடாதது என்னென்ன என தெரிந்து கொண்டு பின்பற்றினால் நிச்சயம் தாயும் சேயும் நலமாக இருக்க முடியும்.
முதலில் செய்யவேண்டியது..... மாதந்தோறும் உங்கள் எடையை மருத்துவரிடம் சென்று பரிசோதிக்கவேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பரம்பரை நோய்கள் ஏதாவது உள்ளதாப என சோதித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அலர்ஜி, ஜலதோஷம், சளி மற்றும் பொதுவான பிரச்சினைகள் என எதற்காகவும் சுய வைத்தியம் செய்யக் கூடாது. 1-12 வாரங்களில் மார்னிங் சிக்னெஸ் அதாவது எழுந்திருக்கும் போதே அசதி, வாந்தி, வியர்வை இருக்கும். உடல் வெப்பம்அதிகரிக்கும். அடிக்கடி சிறுநீர் பிரியும். ஹார்மோன் சுரப்பியினால் அதிக கோபமோ, சந்தோஷமா ஏற்படலாம்.
முதுகு வலி....... 13-18 வாரங்களில் முதுகு, அடிவயிறு, தொடையில் வலி ஏற்படும். உள்ளங்கை, உள்ளங்கால்களில் அரிப்பு ஏற்படும். கை மரத்து போகலாம். குதிகால், கைவிரல்கள், முகத்தில் வீக்கம் ஏற்படும்.
சுகாதாரம்....... 29-40 வாரத்தில் முதல் 6 மாத அறிகுறிகள் தொடரலாம். மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்செரிப்பு உண்டாகும். இரவு தூக்கம் குறையும். இந்த காலங்களில் கர்ப்பிணிகள் சுத்தமான ஆடை, உணவு, இருப்பிடம் என சுகாதாரத்தை பேணுவது அவசியம்.
குறிப்பாக குழந்தையின் ஆரோக்கியத்துக்கு தேவையான புரதம், கால்சியம், இரும்பு சத்து, மற்றும் வைட்டமின்கள்கொண்ட உணவு எடுத்து கொள்ளவேண்டும். மேலும் பழங்கள், காய்கறிகள், நார்சத்து நிறைந்த உணவை உண்ண வேண்டும்.
உணவில் முக்கியமாக `டிகோசா ஹெக்சனாயிக் ஆசிட்'' என்ற கொழுப்பு சத்து இருப்பது அவசியம். இது கடல் உணவு, கடுகு எண்ணை, ஆலிவ் எண்ணை, வெந்தியம், வால்நட்ஸ், ப்லிக்ஸ் சீட்ஸ், மற்றும் சோயா பீன்சிலும் இந்த சத்து உள்ளது.
வேலை பார்க்கும் பெண்கள்..... வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால் முடிந்த அளவு வேலை பளுவை குறைத்து கொள்ளுங்கள். அதிக ஓய்வு தேவை. கர்ப்பம் பற்றி ஆரம்பத்திலேயே தெரிவித்து குழந்தை பெற்றபின் அதிக விடுமுறை எடுத்து கொள்ளுங்கள்.
இதனால் உங்கள் மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் அதிகரிக்கும். நீண்ட தூர பயணத்தை தவிருங்கள். இறுக்கமான ஆடையை தவிர்த்து பெரிய பருத்தி ஆடைகளை அணியுங்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கர்ப்பகால ஆரோக்கியம்
» கர்ப்பகால சந்தேகங்கள் – விளக்கங்கள்
» கர்ப்பகால தோல் நோய்கள்!
» கர்ப்பகால `படுக்கை'ஆய்வு
» கர்ப்பகால உணவு முறை
» கர்ப்பகால சந்தேகங்கள் – விளக்கங்கள்
» கர்ப்பகால தோல் நோய்கள்!
» கர்ப்பகால `படுக்கை'ஆய்வு
» கர்ப்பகால உணவு முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum