ராமதாசுக்கு இன்று ரத்தக்கொதிப்பு அதிகமானது: டாக்டர்கள் தீவிர சிகிச்சை
Page 1 of 1

திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறை வளாகத்தில் உள்ள டாக்டர்கள் இன்சுலின் ஊசி போட்டு கண்காணித்து வருகிறார்கள். இதற்கிடையே டாக்டர் ராமதாஸ் மீது கடந்த 25-ந்தேதி மாமல்லபுரத்தில் நடந்த மாநாட்டில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பேசியது, வன்முறையை தூண்டும் வகையில் பேசியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதேபோல் கடந்த ஆண்டு மே மாதம் 5-ந் தேதி மாமல்லபுரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பேசியதாவும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பிடிவாரண்டு உத்தரவினை மாமல்லபுரம் போலீசார் நேற்று இரவு திருச்சி சிறையில் உள்ள டாக்டர் ராமதாசிடம் அளித்தனர். இதன் தொடர்ச்சியாக அவரை திருக்கழுக்குன்றம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த அவரை அழைத்து செல்வதற்காக இன்று காலை போலீசார் வந்தனர்.
ஆனால் இன்று காலை டாக்டர் ராமதாஸ் மிகவும் சோர்வாக காணப்பட்டார். மேலும் தலைசுற்றல் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். உடனே சிறை டாக்டர் ராஜ்குமார் மற்றும் மருத்துவ குழுவினர் டாக்டர் ராமதாசை பரிசோதித்தனர். அப்போது அவருக்கு ரத்தக்கொதிப்பு அதிகமாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் உரிய மருந்துகள் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சி சிறைத்துறை டி.ஐ.ஜி. துரைசாமி தெரிவித்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினி
» நடிகர் டெல்லி கணேஷுக்கு மாரடைப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
» அறுவை சிகிச்சை மூலம் பேச்சு திறனை மீண்டும் பெற்ற சிறுவன்: வேலூர் அரசு டாக்டர்கள் சாதனை
» கவுண்டமணிக்கு இன்று இதய அறுவைச் சிகிச்சை!
» ரத்தக்கொதிப்பு அறிவோம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum