எய்ட்ஸ் பாதிப்பு முக்கிய நகரங்களில் குறைந்துள்ளது
Page 1 of 1
எய்ட்ஸ் பாதிப்பு முக்கிய நகரங்களில் குறைந்துள்ளது
2006 ஆம் ஆண்டு 0.36 விழுக்காடாக இருந்த எச்.ஐ.வி. கிருமி பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்துள்ளதாகவும், மேலும் 6 முக்கிய நகரங்களில் எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
தேசிய எய்ட்ஸ் பாதுகாப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்ட செயல்பாடு குறித்து விவாதிக்க மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறையின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் குலாம் நபி ஆசாத் கலந்து பேசியதாவது :
எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகக்கூடிய மக்களை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. இதன் மூலம் தென் மாநிலங்களில் எச்ஐவி-ன் தாக்குதல் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இடம் பெயர்பவர்களும், லாரி ஓட்டுனர்களும் எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை வெற்றியடைந்துள்ளது. மொத்தமுள்ள 1.44 கோடி பேரில் தாய்மார்களாக்கூடிய 61 லட்சம் பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இது ஒருங்கிணைந்த ஆலோசனை, ஆய்வு மையங்கள் மூலம் நாடெங்கிலும் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது மக்களிடையே எய்ட்ஸ் விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் என்ற விழிப்புணர்வு ரயிலை கடந்த டிசம்பர் 2009 அன்று அறிமுகப்படுத்தியது. உலக அளவில் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திய முயற்சி இதுவாகும். தற்போது இந்த ரயில் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் வழியாக டெல்லி வந்தடைகிறது.
எச்ஐவி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கடந்த ஓராண்டில் 64 சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 89,000 புதிய நோயாளிகள் இலவசமாக எய்ட்ஸ் சிகிச்சை பெற்று வருகின்றனர். 21 சமூக பாதுகாப்பு மையங்களும் மற்றும் இதனுடன் இணைந்த நவீன எய்ட்ஸ் சிகிச்சை முறை வழங்கும் மையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்குத் தேவையான மருந்துகள் இந்திய நிறுவனங்களிடமிருந்து முதல் கட்டமாக ஆண்டொன்றுக்கு 800 அமெரிக்க டாலர் மதிப்பில் பெறப்பட்டுள்ளது. தற்போது மாதம் ஒன்றுக்கு 10 அமெரிக்க டாலர் மதிப்பிலான மருந்துகள் வாங்கப்படுகின்றன.
முன்னதாக 2006ஆம் ஆண்டு 0.36 சதவீதமாக இருந்த எச்ஐவி கிருமி தாக்குதல் தற்போது கணிசமாக குறைந்துள்ளது. 6 முக்கிய நகரங்களில் எய்ட்ஸ் கிருமி பாதிப்பு குறைந்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நோய் எதிர்ப்பு மருந்துகளை குறைக்கவும்
» குறை பிரசவமும் குழந்தை பாதிப்பும்
» குறை பிரசவமும் குழந்தை பாதிப்பும்
» சேற்றுப்புண்ணுக்கு சிறந்த மருந்து
» இதயத்திற்கு எதிரி என்றால் அது எண்ணெய்தான். எண்ணெயைக் குறைத்துக் கொண்டால், கூடுமான அளவு தவிர்த்துவிட்டால் இதயம் நம்மை வாழ்த்திக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் எண்ணையே இல்லா
» குறை பிரசவமும் குழந்தை பாதிப்பும்
» குறை பிரசவமும் குழந்தை பாதிப்பும்
» சேற்றுப்புண்ணுக்கு சிறந்த மருந்து
» இதயத்திற்கு எதிரி என்றால் அது எண்ணெய்தான். எண்ணெயைக் குறைத்துக் கொண்டால், கூடுமான அளவு தவிர்த்துவிட்டால் இதயம் நம்மை வாழ்த்திக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் எண்ணையே இல்லா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum