பிரசவத்தின் போது பெண்கள் மரணம் இந்தியா முதலிடம்!
Page 1 of 1

உலக அளவில் பிரசவத்தின் போது மரணமடையும் பெண்கள் விகிதத்தில் 19% இந்தியாவிலேயே நிகழ்வதாக உலகச் சுகாதார மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா 19%-இல் முன்னிலை வகிக்க, நைஜீரியா 14% என்று இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்தியாவை விட ஏழை நாடு நைஜீரியா என்பது குறிப்பிடத்தக்கது.
2010ஆம் ஆண்டு உலகம் முழுதும் 287,000 பெண்கள் பிரசவத்தின் போது மரணமடைந்துள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் 56,000 பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நைஜீரியாவில் 40,000 பிரசவ சாவுகள் ஏற்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக சுகாதார, மருத்துவ முறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களாலும், பெண்கள் கல்வியறிவு அதிகரித்துள்ளதாலும் பிரசவ சாவுகள் குறைந்திருந்தது.
உலக பிரசவ சாவு விகிதம் 2010 ஆம் ஆண்டு ஒரு லட்சம் குழைந்தைகள் பிறப்பில் 210 பெண்கள் மரணமடைந்துள்ளனர் என்பதாக இருந்தது. 1990ஆம் ஆண்டு இந்த விகிதம் 400 மரணங்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் பிரசவத்தின் போது மரணமடைவது பெரும்பாலும் பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் மேலதிகமான ரத்தப் போக்கு, நோய்க்கிருமிகளின் தாக்கம், உயர் ரத்த அழுத்தம், பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகள் ஆகியவற்றாலேயே என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரசவத்தின் போது கணவரும் அவசியம்
» பெண்கள் தங்க நகை அணியும் போது கவனம் தேவை
» மரணச் சனி நடக்கும் போது மரணம் நிச்சயமா?
» மகப்பேறின்போது 5 லட்சம் பெண்கள் மரணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum