நிலக்கரி ஊழல்: 6-ந்தேதிக்குள் புதிய அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Page 1 of 1

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இதையொட்டி சி.பி.ஐ. அறிக்கை ஒன்றை தயார் செய்து கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தது.
இந்த நிலையில் சி.பி.ஐ. அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் முன்பு சட்ட மந்திரி அஸ்வினிகுமாரிடம் காட்டப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டு சி.பி.ஐ. இயக்குனரை நேரில் வரவழைத்து விசாரித்தது.
அப்போது சி.பி.ஐ. இயக்குனர், நிலக்கரி ஊழல் அறிக்கையை சட்ட மந்திரியிடம் காட்டியதை ஒப்புக் கொண்டார். இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் மத்திய அரசு கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது.
இந்த நிலையில் நிலக்கரி ஊழல் தொடர்பான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மத்திய அரசு மீதும், சி.பி.ஐ. மீதும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
நீதிபதிகள் கூறியதாவது:-
நிலக்கரி ஊழல் தொடர்பாக சீலிடப்பட்ட கவரில் ஒரு அறிக்கையை சி.பி.ஐ. கொடுத்தது. பிறகு அந்த அறிக்கை விவரங்களை அரசிடம் பகிர்ந்து கொண்டதாக சி.பி.ஐ. கூறியுள்ளது. சி.பி.ஐ.யின் இந்த செயல் மூலம் ஒட்டு மொத்த நடவடிக்கையிலும் அதிர்வு ஏற்பட்டுள்ளது.
சி.பி.ஐ.யின் நடவடிக்கைகள் கோர்ட்டை இருளில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் சி.பி.ஐ. மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் செய்து விட்டது. சி.பி.ஐ.க்கும் அரசுக்கும் உள்ள தொடர்பு கவலை தருகிறது. அரசின் பிடியில் சி.பி.ஐ. இருப்பதையே இது காட்டுகிறது.
அரசியல் தலையீடுகளில் இருந்து சி.பி.ஐ.யை விடு விப்பதே இனி எங்களது முதல் நடவடிக்கையாக இருக்கும். சி.பி.ஐ. அமைப்பு யார் தலையீடும் இல்லாமல் தனித்தன்மையுடன் செயல் பட வேண்டும். அது உறுதி செய்யப்படும். சி.பி.ஐ.யை சேர்ந்தவர்கள் யாருக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல.
அரசியல் வாதிகளிடம் இருந்து அவர்கள் உத்தரவை பெற வேண்டிய அவசியம் இல்லை. நிலக்கரி ஊழல் தொடர்பான வரைவு அறிக்கையில் அரசு பல திருத்தங்களை செய்துள்ளது. அந்த திருத்தங்கள் என்னென்ன என்பதை சி.பி.ஐ. இயக்குனர் தெளிவுபட கூற வேண்டும்.
மேலும் வரைவு அறிக்கையில் திருத்தங்கள் செய்ய உத்தரவிட்டது யார் என்பதையும் சி.பி.ஐ. கூற வேண்டும். இது தொடர்பாக மேலும் சில உத்தரவுகளை நாங்கள் பிறப்பிக்க விரும்புகிறோம். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த ஊழல்கள் தொடர்பாக சி.பி.ஐ. புதிய அறிக்கை ஒன்றை தயார் செய்ய வேண்டும்.
அந்த புதிய அறிக்கையை வரும் 6-ந்தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அதில் நாங்கள் கேட்டுள்ள எல்லா கேள்விகளுக்கும் உரிய பதில் சொல்லப்பட்டிருக்க வேண்டும். இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணை 8-ந்தேதி நடைபெறும்.
இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நிலக்கரி சுரங்க ஊழல்: சி.பி.ஐ. அறிக்கையை வாகன்வாதி திருத்தினார்

» சி .பி.ஐ. அறிக்கையை திருத்தியதற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்: மத்திய சட்ட மந்திரி அஸ்வினிகுமார் விலகல்?
» தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
» மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ‘‘குட்கா தடை அமல் பற்றி விளக்கம் அளியுங்கள்’’

Permissions in this forum:
You cannot reply to topics in this forum