அர்ஜூனா விருதுக்கு விராட் கோலி பெயர் பரிந்துரை
Page 1 of 1

இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு அர்ஜூனா விருது, ராஜீவ் கேல் ரத்னா விருது, துரோணாச்சார்யா விருது மற்றும் தயான் சந்த் விருது வழங்கி அரசு கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு பரிந்துரைகள் பெறப்பட்டு வருகின்றன. பரிந்துரை கடிதம் அனுப்புவதற்கு இன்று கடைசி நாளாகும்.
இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு இளம் வீரர் விராட் கோலி பெயரை பி.சி.சி.ஐ. பரிந்துரை செய்துள்ளது. இதேபோல் தயான்சந்த் விருதுக்கு (வாழ்நாள் சாதனை) முன்னாள் கேப்டன் கவாஸ்கரின் பெயரை தேர்வு செய்து பரிந்துரைத்துள்ளது.
அர்ஜுனா விருதுக்காக கோலி பரிந்துரை செய்யப்பட்டதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த கோலி, அதன்பின்னர் ஒவ்வொரு போட்டியிலும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். ஆசியக் கோப்பை போட்டியில் துணை கேப்டனாக பதவி உயர்வும் பெற்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவருக்கு ஐ.சி.சி.-யின் சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் அவரை பி.சி.சி.ஐ. தேர்வு செய்திருக்கிறது.
நேற்று 2 பரிந்துரைகள் பெறப்பட்டன. கேல் ரத்னா விருதுக்கு மாற்றுத் திறனாளி வீரர் எச்.என்.கிரிஷாவும், இந்திய ஹாக்கி அணி தடுப்பாட்ட வீரர் சந்தீப் சிங்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். லண்டன் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற கிரிஷாவுக்கு, இந்த ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. எனவே, கேல் ரத்னா விருதுக்கான போட்டியில் அவர் முன்னணியில் இருக்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அர்ஜூனா விருதுக்கு விராட் கோலி பெயர் பரிந்துரை
» விராட் கோலி போன்று கணவர் அமையவேண்டும்: நடிகை அஞ்சலி மனம் திறந்த பேட்டி.
» விராட் கோலி போன்று கணவர் அமையவேண்டும்: நடிகை அஞ்சலி மனம் திறந்த பேட்டி
» பாம்பே ஜெயஸ்ரீ பெயர் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை
» விராட் கோலியை இயக்கும் பிரபுதேவா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum