காதலன் நல்லவனா?
Page 1 of 1
காதலன் நல்லவனா?
உருகி உருகி காதலை வெளிப்படுத்தி விட்டு உறவுக்குப் பிறகு வேறு பெண்ணைத் தேடிச் செல்லும் ஆண்களும் இருக்கிறார்கள். காதலில் இப்படி இடையூறுகளை சந்திக்காமல் இருக்க என்ன வழி? உண்மையான காதலை கண்டு பிடிப்பது எப்படி? அதற்கு சில எளிய வழிகள்...
`நீ இல்லாம என்னால வாழவே முடியாது. நீ தான் என் உயிர்' என்று டயலாக் விடுபவர்களிடம் உஷாராக இருங்கள். அதிகமாக உணர்ச்சிவசப்படுவது ஈர்ப்பின் அறிகுறி தான். புரிதலுடன் பழகியபின் வருவதே காதல். காதலிப்பவர் கொடுக்கும் தகவல்கள் உண்மையானதா என்பதை வைத்து அவரது காதலையும் உண்மையா? இல்லையா? என்று அறியலாம்.
வேலை பார்க்கும் இடம், வீட்டு முகவரியை சொல்லாதவர்களும், தவறான தகவல் தருபவர்களும் ஏமாற்றுப் பேர்வழிகளாக இருப்பார்கள். உங்கள் காதலர் நண்பர்கள், தோழிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறாரா? என்று பாருங்கள். அதுபோல நீங்களும் அவரை உங்கள் தோழிகளுக்கு அறிமுகப்படுத்தி வையுங்கள்.
பிறருக்குத் தெரிந்து காதல் செய்வது ஒருவிதத்தில் பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தும். அதிக அளவிலான ஏமாற்றத்தையும் தடுக்கும். அதேபோல அவரோடு நீங்கள் பழகுவது உங்கள் வீட்டிற்கு பட்டும் படாமலும் தெரிந்திருந்தால் இன்னும் நல்லது. பெற்றோரும் அவரைப் பற்றிய விஷயங்களில் `உஷார்' காட்டுவார்கள்.
காதலர் உரிமையுடன் உங்களிடம் கோபப்படுகிறாரா? திட்டுகிறாரா? சில நேரங்களில் கைநீட்டி அடிக்கவும் செய்கிறாரா? அவை உரிமை எடுத்துக் கொண்டு செய்யும் காரியமாக மட்டும் எண்ணிவிடாதீர்கள். உங்கள் மீதுள்ள நம்பிக்கைக் குறைவும், தன்னம்பிக்கை இல்லாததன் வெளிப்பாடும் கூட இம்மாதிரி கோபமாக வெளிப்படும். இதுபோன்ற குணம் உடையவர்களுடன் நீண்டகாலம் சேர்ந்து வாழ முடியாது.
எனவே கோபத்தின் காரணத்தையும், அவரது நடவடிக்கைகளையும் கவனமாக கவனியுங்கள். `நாம தான் ஒருவருக்கொருவர் புரிஞ்சிக்கிட்டோமே, தொட்டுப் பேசக்கூடாதா?' என்று பீடிகை போடுவதும், உறவை வற்புறுத்துவதும் உண்மையான காதலாக இருக்க முடியாது. எல்லை மீறாத காதல் நூலிழை இடைவெளியில் தான் இருக்கிறது. மேற்கண்ட விஷயங்களை வைத்து உண்மையான காதலை கண்டு பிடிக்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சனீஸ்வரன் நல்லவனா, கெட்டவனா?
» காதலன் பொறாமைப்படுறானா?.. மனம்விட்டுப் பேசுங்க!!!
» சனீஸ்வரன் நல்லவனா, கெட்டவனா?
» காதலன் காதலன்
» காதலிப்பதற்காக காத்திருக்கிறேன்! காதலன்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum