ஆண், பெண் நட்பின் அதிசயம்!
Page 1 of 1
ஆண், பெண் நட்பின் அதிசயம்!
பெண் ஒருவருக்கு ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள் என்றாலே, அந்தப் பெண் மீது சிலர் கேலிப் பார்வையை வீசுவார்கள். `இது எதில் போய் முடியுமோ!' என்ற கிசுகிசுப்பு சொல்லும் உதிர்க்கப்படும். இந்த சமூகம் பழைய காலத்தில் ஒரு விஷயத்தை முரண்பாடானது என்று கருதுகிறது என வைத்துக்கொள்வோம்.
இப்போது காலம் தலைகீழாக மாறினாலும், தன் பழைய கருத்தை அவ்வளவு எளிதாக மாற்றிக்கொள்ளாது. ஆண்- பெண் நட்பு விஷயத்தில் பழைய பார்வையை தான் இன்றும் சமூகம் வீசிக்கொண்டிருக்கிறது. இந்த சமூகத்தில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். காலத்தின் போக்கிற்கு ஏற்ப தங்களை பக்குவப்படுத்தி, தங்கள் கருத்துக்களில் புதிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளும் மனிதர்கள் ஒருபுறம்.
எந்த நிலையிலும் தங்களை மாற்றிக்கொள்ளத் தெரியாத பழைமை விரும்பி மனிதர்கள் இன்னொரு புறம். இவர்களைக்கொண்ட சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைய சூழலில் பெண்கள் வெளி இடங்களுக்கு சென்று வேலை பார்ப்பது அவசியமாகி விட்டது. அதுபோல் பெண்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் சக ஆண் நண்பர்களிடம் நட்பு பாராட்டுவதும் அவசியமாகிறது.
தம்முடன் இருப்பவர்களிடம் தாம் காட்டும் நட்பு தான் அலுவலக பணிகளை நிறைவாக செய்து முடிக்க உதவுகிறது. மனித நாகரீகம் என்பது ஒரு நல்ல நட்பை கண்ணியத்துடன் பாதுகாப்பதில்தான் இருக்கிறது. அலுவலக ஆண் நட்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆண் நண்பர்களால் பெண்களுக்கு சாதகமா, பாதகமா என்று ஆராயும்போது `அது நட்பின் தன்மையை பொறுத்தது' என்று பதில் வரும்.
அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு உடன் பணிபுரியும் அனைவரும் முக்கியம். இதில் ஆண், பெண் என்று தனித்தனியாக பிரித்து பார்க்க முடியாது. பார்க்கவும் கூடாது. அலுவலக பொறுப்புகள் யாருக்கும் அதிகமாகவோ, குறைவாகவோ இருக்க போவதில்லை. எல்லோரும் சேர்ந்து உழைக்கும் உழைப்பால்தான் பணி முழுமை பெறும்.
ஒரு பெண்ணை சுற்றி இருக்கும் நல்ல நட்பு, அந்தப் பெண் மேன்மையடைய உதவும். ஆண் ஒருவரின் நட்புடன்கூடிய அனுசரணை ஒரு பெண்ணிற்கு பாதுகாப்பாகவும் இருக்கும். எல்லோரும் நட்புடன் பழகும்போது அந்த அலுவலக சூழல் நன்றாக இருக்கும். நல்ல நட்பையும், நேசத்தையும் நேர்மையாக பகிர்ந்து கொள்ள தெரிந்த ஒரு ஆணின் நட்பு ஒரு பெண்ணிற்கு பக்கபலமாக இருக்க கூடுமானால் அது பெரிய பாக்கியமாக கருதப்படும்.
அந்த இடத்தில் இருவரின் அறிவாற்றலும் முழுமையாக வெளிக்கொணரப்பட்டு வெற்றியை தரும். அவர்கள் ஒருங்கிணைந்து செய்யும் பணி பலராலும் பாராட்டப்படும். ஒரு அலுவலகம் என்பது உழைப்பால் மட்டுமல்ல, உயர்ந்த எண்ணங்களாலும் உருவாக்கப்பட வேண்டும். நல்ல நட்புகள் நல்ல எண்ண அலைகளை அந்த இடத்தில் மலரச் செய்யும்.
குழந்தை பருவத்திலேயே கோ- எஜுகேஷனில் படிப்பதால், அங்கேயே ஆண்- பெண் நட்பு விதைக்கப்பட்டு விடுகிறது. அங்கேயே சிறந்த நட்பிற்குரிய பண்பை போதித்து விடுகிறார்கள். அந்த பண்பை பின்பற்றினாலே, எதிர்காலத்திலும் நல்ல நட்பிற்கு அடையாளமாகி விட முடியும்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நட்பின் இலக்கணம்
» நட்பின் பெருமை
» அறிவியல் அதிசயம்
» அதிசயம் ஆனால் உண்மை
» ஐதரேய உபநிஷதம் (மிஞ்சும் அதிசயம்)
» நட்பின் பெருமை
» அறிவியல் அதிசயம்
» அதிசயம் ஆனால் உண்மை
» ஐதரேய உபநிஷதம் (மிஞ்சும் அதிசயம்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum