ஆண்களுக்கு பெண்கள் லிப்ட் தரலாமா
Page 1 of 1
ஆண்களுக்கு பெண்கள் லிப்ட் தரலாமா
பெண்கள் இயல்பாகவே இரக்கம், கருணை, அடுத்தவர்களுக்கு உதவவேண்டும் என்ற அக்கறை கொண்டவர்கள். அது பாராட்ட வேண்டிய விஷயம்தான். ஆனால் அதுவே அவர்களுக்கு ஆபத்தாகிவிடக்கூடாது. வீட்டிலும் சரி, வெளியிலும் சரி தங்களை சுற்றி நடக்கும் செயல்களை பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு தேவை.
அவர்களை மையப்படுத்தி நடக்கும் ஆபத்துகளை புரிந்துக்கொண்டு, தங்களை பாதுகாக்க வேண்டும். எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியான பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. பல கோணங்களில் இருந்து புதிது புதிதாக பிரச்சினைகள் முளைக்கும்போது முந்தைய அனுபவங்கள் அதற்கு பயன்படுவதில்லை.
மூளையை உஷார் நிலையில் வைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் கூட சில நேரங்களில் ஏமாற்றப்பட்டு விடுகிறார்கள். பெண்கள் இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது, வழியில் நிற்கும் ஆண்கள் `லிப்ட்' கேட்டால் தரலாமா, கூடாதா என்ற கேள்வி எழும். அதற்கு சரியான பதில் எது?
சில பெண்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பார்ப்போம். அனுபமா நன்றாக பைக் ஓட்டுவாள். அந்த பயணம் அவள் வேலைக்கு சவுகரியமாக இருந்தது.
இரவு, பகல் பாராமல் எங்கு வேண்டுமானாலும் சென்று வர, அவளுக்கு பைக் ஒரு நல்ல நண்பனாக இருந்தது. அன்று அவள் சாலையில் பயணப்பட்டுக் கொண்டிருந்தபோது, காலில் அடிபட்ட ஒரு இளைஞன் நொண்டிக்கொண்டே வந்து லிப்ட் கேட்டான். தன்னை மருத்துவமனையில் இறக்கிவிடுமாறு, வலியோடு கேட்டான். முடியாது என்று சொல்ல அவளுக்கு மனம் வராததால் லிப்ட் கொடுத்தாள்.
அவன் சொன்ன மருத்துவமனையை நோக்கி வண்டி விரைந்தது. அந்த இடம் வந்ததும் நன்றி சொல்லிவிட்டு இறங்கிக் கொண்டான். மருத்துவமனையை நோக்கி நடந்த அவனைப் பார்த்து அனுபமா அதிர்ந்து போனாள். அவனுக்கு காலில் அடி எதுவும் இல்லை. ராஜநடை போட்டு நடந்து சென்றுகொண்டிருந்தான். அவளுக்கு ஆத்திரம் வந்தது.
ஆனால் அவனிடம் சண்டை போட நேரமில்லை. தூரத்தில் சென்ற அவன், அவளை திரும்பிப் பார்த்து கிண்டலாக சிரித்தான். அப்படியே ஓடிப்போய் அவனை அறையலாமா? என்று அவளுக்கு தோன்றியது. ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு கிளம்பிப்போய்விட்டாள்.
தன்னை ஏமாற்றிய அந்த இளைஞனை பற்றி தோழிகள் எல்லோரிடமும் திட்டி தீர்த்தாள். இது போன்ற சம்பவங்களால், உண்மையிலே ஆபத்தில் இருப்பவர்களை கூட பெண்கள் சந்தேக கண்ணோடு பார்க்கிறார்கள். பிரியா, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையே வெறிச்சோடி கிடந்தது.
திடீரென்று கையில் பெரிய பேக்குடன் வந்து நின்ற இளைஞன் ஒருவன், அவளது வண்டியை நிறுத்தி லிப்ட் கேட்டான். `நான் அவசரமாக ரெயிலை பிடிக்க வேண்டும். ரெயிலுக்கு நேரமாகிவிட்டது. என் பைக் ரிப்பரா போயிடுச்சி... பிளீஸ்..'' என்றான். அவளும் அந்த இளைஞனை ஏற்றிக்கொண்டு தட்டுத் தடுமாறி, ரெயில் நிலையத்தை நோக்கி வண்டியை ஓட்டினாள்.
நிலையம் வந்ததும் அவன் பவ்யமாக இறங்கி கொண்டான். நன்றியுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு விடை பெற்றான். (அந்த வாலிபன் நாகரீகமானவன்தானே என்பவர்கள், அடுத்த காட்சிக்கு வாருங்கள்) சில நாட்கள் கழித்து அதே இளைஞன், அதே பையுடன் நின்று இன்னொரு பெண்ணிடம் லிப்ட் கேட்டுக் கொண்டிருந்தான்.
அதிர்ச்சியடைந்த பிரியா அருகில் செல்வதற்குள் அவன் அந்த புது பெண்ணோடு வண்டியில் ஏறி புறப்பட்டு விட்டான். சென்றவன் சும்மா போகவில்லை. கொஞ்சம் தூரம் போனதும் திரும்பி பார்த்து பிரியாவுக்கு டாடா காட்டி விட்டு கேலியாக சிரித்தான். அடுத்த சில நாட்களில் பிரியா ஹெல்மெட் மாட்டியிருந்தாள்.
அந்த இளைஞன் அடையாளம் தெரியாமல் அவளிடம், அதே பழைய பல்லவியை பாடி லிப்ட் கேட்க, பிரியா மறுப்பு எதுவும் சொல்லாமல் அவனை ஏற்றிக்கொண்டாள். போகிற வழியில் இருந்த பெண் போலீஸ் நிலையத்தில் கொண்டுபோய் வண்டியை நிறுத்தி, அவன் எப்படிப்பட்டவன் என்பதை கூறிவிட்டு சென்றுவிட்டாள். அங்கு அவனை பெண் போலீசார், `கவனித்து' அனுப்பினார்கள்.
நகர வாழ்க்கையின் பரபரப்பை பெண்கள் எதிர்கொள்ள தங்களது சொந்த இரு சக்கர வாகனங்களை நம்பி இருக்கிறார்கள். ஆனால் பாதுகாப்பாக அவர்களால் பயணிக்க முடியவில்லை. மோட்டார் சைக்கிளில் பயணிப்பது வசதியானதுதான். ஆனால் பயணம் சுகமாக இருக்க பாதுகாப்பு அவசியமானது. மற்றவர்களுக்கு உதவுவது தவறல்ல. ஆனால் உதவி செய்வதாக நினைத்து உபத்திரவத்திற்கும், ஏமாற்றத்திற்கும் உள்ளாகிவிடக்கூடாது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குழந்தைகளுக்கு தரலாமா சத்து மாவு
» ஆண்களுக்கு ஏன் 'அது' பிடிக்குது தெரியுமா...!
» அழும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது
» மடிக்கணினி பயன்படுத்தும் ஆண்களுக்கு ஒர் எச்சரிக்கை
» ஆண்களுக்கு காதல் இன்று பொழுதுபோக்கே!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum