தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சேலம்-தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-வது நாளாக பஸ் போக்குவரத்து பாதிப்பு

Go down

 சேலம்-தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-வது நாளாக பஸ் போக்குவரத்து பாதிப்பு  Empty சேலம்-தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-வது நாளாக பஸ் போக்குவரத்து பாதிப்பு

Post  ishwarya Thu May 02, 2013 2:39 pm

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதையடுத்த பல இடங்களில் பஸ்சுக்கு தீ வைப்பு, பஸ்கள் உடைப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து பல இடங்களில் பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. ஒரு சில இடங்களில் இரவு நேரத்தில் நிறுத்தப்படுகிறது. சில இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள தேவரள்ளி பகுதியை சேர்ந்த சக்திவேல் (28), விக்னேஸ்வரன் (22) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் போச்ச ம்பள்ளியில் இருந்து வெளியூர்களுக்கு ஒரு சில பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.

நேற்று மாலை 6 மணி முதல் பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இன்று காலையும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பஸ் நிலையத்திற்குள் எந்த பஸ்சும் வரவில்லை. இதனால் போச்சம்பள்ளி பஸ்நிலையம் வெறிச்சோடியது.

காலையில் வெளியூர் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் வழக்கம்போல் பஸ்நிலையத்திற்கு வந்தனர். ஆனால் பஸ்கள் ஏதும் இல்லாததால் அவர்கள் வீட்டிற்கே சென்று விட்டனர். பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் போச்சம்பள்ளி பஸ்நிலையம் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடியது. நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு மத்தூர் வழியாக செல்லும் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படுகிறது. 10 பஸ்கள் சேர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அவை இயக்கப்பட்டு வருகிறது. மேச்சேரியில் இருந்து ஒரு சில பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

இதேபோல் நங்கவள்ளி-ஜலகண்டாபுரம் பகுதியிலும் பஸ்கள் இயக்கப்படவில்லை. மேச்சேரியில் இருந்து தர்மபுரிக்கு இரவு முழுவதும் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடியது.

மேட்டூரில் 2- வது நாளாக கிராமபுரங்களுக்கு செல்லும் பஸ்கள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. மேட்டூர்-சேலம், மேட்டூர்-ஈரோடு ஆகிய வழித்தடங்களில் மட்டும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறது. கிராம பகுதிகளுக்கு பஸ்கள் ஏதும் இயக்கப்படாததால் மேட்டூர் உழவர் சந்தைக்கு காய்கறிகள் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. பஸ்கள் செல்லாத வழித்தடங்களில் சரக்கு வாகனம், மற்றும் வாடகை கார் ஆகியவற்றின் மூலம் பயணிகள் தங்கள் கிராமங்களுக்கு சென்று வருகிறார்கள்.

மத்தூர் பகுதியில் இருந்து தர்மபுரி, திருப்பத்தூர், போச்சம்பள்ளி செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் ஊத்தங்கரை, பெங்களூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி செல்லும் பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. மத்தூர் பகுதியில் இருந்து கிராம புரங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் மத்தூர் பஸ்நிலையம் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடியது.

இதேபோல் ஊத்தங்கரையில் இருந்து திருப்பத்தூர், அரூர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டது. இங்கிருந்து கிராம பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. ஊத்தங்கரையில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் உப்பாளப்பட்டி என்ற ஊரில் ஒரு புளிய மரத்துக்கு தீ வைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் 2-வது நாளாக இரவு நேரங்களில் பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. மேலும் நேற்று இரவு தர்மபுரி செந்தில்நகர், அரசு போக்குவரத்து கழக பணிமனை, ஆகிய 2 இடங்களில் அரசு பஸ்களின் கண்ணாடிகளை உடைத்தனர். இதேபோல் பல இடங்களில் தனியார் பஸ்சின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டது.

தர்மபுரி கிருஷ்ணாபுரம், அல்லியூர், சோகத்தூர் ஆகிய இடங்களில் ரோட்டோரம் உள்ள புளிய மரங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதில் பணந்தோப்பு என்ற பகுதியில் சாலையோரம் இருந்த புளியமரத்தை வெட்டி நடுரோட்டில் போட்டனர். பின்னர் போலீசார் சென்று அதை அகற்றினர். தர்மபுரியில் இருந்து நேற்று இரவு சென்னை செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டது. அந்த பஸ்கள் இன்று காலை போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
tamil matrimony_INNER_468x60.gif

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சேலம் மாவட்டத்தில் மாவு பூச்சி
» சேலம் மாவட்டத்தில் மீண்டும் `தலை' தூக்கிய ஆபாச நடனங்கள்
» ரஜினி பட ஷூட்டிங்கால் போக்குவரத்து பாதிப்பு – மக்கள் அவதி
» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு
» தர்மபுரி கலவரத்தை படமாக்கவில்லை: டைரக்டர் ராதாமோகன் மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum