தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத உலகம்

Go down

 பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத உலகம்  Empty பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத உலகம்

Post  meenu Tue Jan 22, 2013 1:46 pm

வீட்டினுள் பெண்களைப் பூட்டி வைத்த காலம் இன்று மலையேறி விட்டது. இன்று சகல துறைகளிலும் ஆணுக்கு நிகராக மகளிர் வெற்றி காண்கின்றார்கள். ஏட்டுக் கல்வியுடன் நின்று விடாது அதன் மூலம் சிறந்த நல் தொழில் துறைகளில் தம்மை ஈடுபடுத்தி வெற்றி வாகை சூட மகளிர் முனைப்புக் காட்டுகின்றனர்.

மேலும் பெண்கள் தமது ஆளுமையை வளர்த்து முடிவெடுக்கும் தன்மை கொண்டோராகவும் மிளிர்கின்றனர். தரை, கடல், ஆகாயம் என துறைசார் ரீதியாக அதீத வளர்ச்சி பெற்றோராகவும் உலகின் சில நாடுகளது ஆட்சியாளர்களாகவும் விளங்குகின்றனர். ஆனால் சமீப காலமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாகச் சென்று உயிரிழந்தவர்களும், பாலியல் ரீதியான கொடுமைகட்கு உள்ளாகியவர்களும் கிராமப் புறங்களிலிருந்து சென்ற பெண்களாகவே உள்ளனர்.

இவர்களால் இவர்களைச் சார்ந்து வாழ்ந்த குடும்பங்கள் பணத்தையும் உறவையும் இழந்து வேதனையுடன் காலம் கடத்துகின்றன. வறுமையில் வாடும் கிராமியப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்ற சமூகத் தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

மேலும் பெண்களை போகப் பொருளாகக் காட்டி பணமீட்டும் தொழில்துறையாக தென்னிந்திய சினிமா மாறி விட்டது. ஆடைக் குறைப்பு, கவர்ச்சி உடை என சினிமாப் பாடல் காட்சிகள், பாலியல் உணர்வைத் தூண்டி பெண்களுக்கெதிரான வன்முறைகளைப் புரியக் காரணமாகின்றன. இவ்வாறான காட்சிகளைத் தடைசெய்ய சட்ட விதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum