தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தம்பிக்களுக்கு அல்லது தம்பிலாக்களுக்கு. - யஹியா வாஸித் –

Go down

தம்பிக்களுக்கு அல்லது தம்பிலாக்களுக்கு. - யஹியா வாஸித் – Empty தம்பிக்களுக்கு அல்லது தம்பிலாக்களுக்கு. - யஹியா வாஸித் –

Post  ishwarya Thu May 02, 2013 12:29 pm

விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை.
கெட்டுப் போபவன் விட்டுக் கொடுப்பதில்லை.

இதுவும் ஒரு சிங்க கூட்டத்தின் கதைதான் தம்பிகளே. ஆனால் ஜாலியான, கொஞ்சம் சாக்கிரதையான கதை தம்பிகளா. முதலும் பல தடவை சொன்ன கதைதான் ராசா. ஆனா இப்ப. இந்த காலத்துக்கு கொஞ்சம் பொருத்தமாக இருக்கும் என்பதால் மீண்டும் பட்டை தீட்டுறன் தம்பிகளா. காட்டுக்குள்ள ஆப்புர்ற அப்பாவி மிருகங்களை அடித்து திண்டுகொண்டிருக்கிற சிங்கத்துக்கு. அதுதான் சிங்க மகாராஜாக்களுக்கு சில நேரம் அரிப்பெடுப்பதுண்டு. அப்படி அரிப்பெடுத்து, எதிர்ப்படுற மிருகங்களிடம் போய் வம்பு பேசி. அப்புறம் குட்டிக்குட்டி மிருகங்களிடம் வாங்கி கட்டுவதுமுண்டு.

அப்படித்தான் அன்றொருநாள் ஒரு சிங்க மகாராஜாவுக்கு அரிப்பெடுத்து. அதன் உச்சக்கட்டமாக யார்ரா இந்த காட்டுக்கு ராஜா என்ற ஒரு பெரிய டவுட் அந்த சிங்க மகாராஜாவுக்கு வந்திருக்கின்றது. குகைக்குள்ள இருந்தவர் அப்படியே வெளியே வந்து. முழுக் காடே அதிர்ர மாதிரி கர்ஜித்துக்கொண்டு புறப்பட்டிருக்கின்றார். போகும் வழியில் ஒரு மான் வந்திருக்கின்றது. மானை அப்படியே வழிமறித்து, டேய் பையா யார்ரா இந்த காட்டுக்கு ராஜா என கேட்டிருக்கின்றார். மானும் அப்படியே நாலாக மடிந்து. தலைவா நீங்கதானே இந்த காட்டுக்கு ராஜா அதிலென்ன சந்தேகம் என சொல்லியுள்ளார். அந்த மானை அப்படியே முறைப்புடன் தட்டிக் கொடுத்த சிங்கம். ஓகே நீ போடா என சொல்லிக் கொண்டு பயணத்தை தொடர்ந்திருக்கின்றார்.

வழியில் இன்னுமொரு கரடி வந்திருக்கின்றது, கரடியை அப்படியே கழுத்தை அமுக்கி பிடித்து, டேய் யார்ரா இந்த காட்டுக்கு ராஜா என கேட்டிருக்கின்றார். ஐயோ, தலைவா நீங்கதானே இந்த காட்டுக்கு ராஜா, அதிலென்ன சந்தேகம் என கரடி தலையிலடித்துக் கொண்டு சொல்லியுள்ளது. சிங்க மகா ராஜாவும் அப்படியே கரடிப்பிள்ளையாரை வருடிக் கொடுத்து, ம்ம்ம் சரி போ என்று உறுமிவிட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்துள்ளார்.

அப்படியே எதிர்படுகின்ற ஒவ்வொரு மிருகத்தையும் மிரட்டி, யார்ரா இந்த காட்டுக்கு ராஜா என இவர் கேட்பதும், நீங்கதானே ராஜா, அதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லையே என பயத்துடன் மற்ற மிருகங்கள் சொல்வதும் என பயணம் போய்க் கொண்டிருந்த போது, யானை ஒன்று வழியில் ஏதோ ஒரு யோசனையில் நின்றிருக்கின்றது. நம்ம சிங்கப் பிள்ளையாரும், யானையின் அருகில் போய். அதன் முதுகில் தட்டி, அடோய் யார்ரா இந்த காட்டுக்கு ராஜா என கேட்டுள்ளார்.

நம்ம யானையாருக்கு இருந்த பிரச்சனைகளில், சிங்கத்தார் கேட்டதோ, முதுகில் தட்டியதோ ஒரு பொருட்டாக தெரியவில்லை. சிங்கத்தாருக்கு கோபம் தலைக்கேறி என்னடா இவன் நம்மை திரும்பியும் பார்க்கவில்லை என்ற திமிருடன், யானையாரை ஒரு உலுப்பு உலுப்பி, அடோய் யார்ரா இந்த காட்டுக்கு ராஜா என. ஒரு திமிருடன் கேட்டுள்ளார்.

யானை அப்படியே ஒரு விசருடன் திரும்பி. தனது தும்பிக்கையால் சிங்கத்தாரை ஒரு மடக்கு மடக்கி பிடித்து, அப்படியே சுருட்டி ஒரு வீச்சு வீசியுள்ளது. அப்படியே ஒரு 500 யார்தொலைவில் உள்ள மரத்தில் போய் மோதி. தலைகுப்புற விழுந்த சிங்கத்தார். தட்டுத்தடுமாறி எழும்பி. தனது குண்டியில் பட்ட மண்ணை தட்டிவிட்டுக் கொண்டு. யானையாரை பார்த்து. தெரியாவிட்டால் தெரியாது என்று சொல்ல வேண்டியதுதானே. அதற்குப் போய் எலும்பெல்லாம் நொறுங்கிற மாதிரி. சுருட்டி வீச வேண்டுமா என முனகிக்கொண்டு. அமைதியாக. குண்டியையும் வாயையும் மூடிக்கொண்டு தனது குகையை நோக்கி நடையை கட்டியுள்ளார் நம்ம சிங்க மகாராஜா.

இந்த சிங்கம் மட்டுமல்ல, அந்த காட்டில் பிறந்து வளர்ந்த நரிகளுக்கும், புலிகளுக்கும் அடிக்கடி இப்படி அரிப்பெடுப்பதுண்டு. அப்படி அரிப்பெடுத்து. அது உச்சக்கட்டத்துக்கு போய் உரசக்கூடாத இடத்துக்குப் போய் உரசி வாங்கிக்கட்டுவதுமுண்டு. இது கடந்த கால வரலாறு. கடந்த கால வரலாறு என்றால். கல்தோன்றி மண்தோன்தோன்றாக் காலத்துக்கு முன்தோன்றிய வரலாறுகள் அல்ல. முந்தா நாளுக்கு முதல் நாள். முந்தாநாள். நேத்து என எங்கிட கண்ணுக்கு முன்னாலேயே நடந்த வரலாறுகள்தான்.

இப்ப புதுசா நம்முட காட்டிலுள்ள அந்த காவியுடுத்த சிங்கங்களுக்கு அரிப்பெடுத்திருக்கின்றது. காவியுடுத்தால் மதம்தான் புடிக்கும் என்பார்கள். இப்படி மதம் ( வெறி ) பிடிக்கும் என்று இந்த மூன்றாவது சிறுபான்மையான கழுதைகழுக்கு யாரும் சொல்லலையே. ஆனால் இந்த கழுதைகள் இந்த பரந்த காட்டில் காலா காலமாக பொதி சுமக்கிற வேலைதான் பார்க்கின்றனவே தவிர, கொஞ்சம் முன்னேறி குதிரையாக மாறுவோம் என கிஞ்சித்தும் சிந்தித்ததில்லை. அப்படி யாராவது கடிவாளத்தை பிச்சுக் கொண்டு ஓடத்தொடங்கினால், எப்படி இந்த குதிரைக்கழுதைகழுக்கு ( இதைத்தான் கோவேறு கழுதை என்பார்களோ ) கடிவாளம் இடுவது என்பதை தெரிந்து வைத்திருக்கும் சிங்கங்கள் அப்பப்போ பெரிய, பெரிய பொதிகளாக இவர்களின் முதுகுகளில் கட்டி விடுவார்கள். பொதி நிறைய அழுக்கு துணிதான் இருக்கின்றது என்பதை புரியாத இந்த கழுதைகள், தாங்கழும் ஒரு சிங்கங்களாகவே ஒரு ஐந்தாண்டுக்கு வலம் வருவார்கள்.

அப்புறம் என்ன. சிங்கங்கள் என்ன சொன்னாலும் ஆமாப் போடுவதும், சிங்கங்கள் எப்படி கர்ஜித்தாலும் மௌனவிரதமிருப்பதுவுமே இந்த கழுதைகழுக்கு பழகிப் போயிடுச்சு. அட இந்த பொதிசுமக்கிர கழுதைகள், பின்னங்கால தூக்கி ரெண்டு உதை உதைக்கமாட்டாதா என காட்டிலுள்ள குட்டி கழுதைகளல்லாம் கனைப்பதுண்டு. ஹ்.....ஹ்ம்... பொதி சுமக்கிற கழுதைகள். தான் உண்டு, தன் பொதியுண்டு என வாளாவிருந்துவிடும். அப்புறம், அஞ்சி வருஷத்துக்கப்புறம் வந்து, இந்த கழுதைகளெல்லாம் இன்னொரு கதை சொல்லும், ஓ இதற்காக தானா அப்போது அமைதியாக இருந்தீர்கள் என குட்டிக்கழுதைகளெல்லாம் உச்சுக் கொட்டிவிட்டு, மீண்டும் ஒரு தரம் இவர்களை சிங்கத்தின் குகைக்கு அனுப்பி அழகு பார்ப்பார்கள் நமது தங்க தம்பிகள்.

கொஞ்சம் கழுதைத்தனமாக யோசிச்சுப் பார்த்தால், இதுவும் ஒரு வகையில சரியாத்தான் படுகிது. நாம இந்த காட்டுக்குள்ள தெரிஞ்சோ தெரியாமலோ பொறந்தவங்க அல்லது ஆபிரிக்க, லெமூரியாக் காடுகளுக்குள்ள இருந்து வழிதவறி வந்தவங்க. ஏற்கனவே இந்த காட்டுக்குள்ள, நான் பெரியவனா இல்ல நீ பெரியவனா என குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொண்டு சிங்கங்களும், நரிகளும், புலிகளும் படுகின்ற பாட்டை பார்க்கும் போது, இருக்கிற கொஞ்ச காலத்துக்கு கழுதையாகத்தான் வாழ்ந்துவிட்டு போய்விடுவோமா என எண்ணத் தோன்றுகின்றது தம்பிகளா.

என்னே ஒரு அழகான காடு இது. உலகத்தில இப்படி ஒரு காடு இருக்குமோ என எண்ணக் கூடியளவுக்கு சோலைகளும், சாலைகளும், ஆறுகளும், குளங்களும், காய்கனிகளும், பிணி தீர்க்கும் மூலிகைகளும் நிரம்பி வழிந்த இந்த காட்டுக்குள் கோட்டான்களும், சாத்தான்களும் குடிவந்து, சுரண்டுற மட்டும் சுரண்டிவிட்டு, போற போக்குல, இந்தா பிடி, இனி இந்த காடு முழுக்க உனக்குத்தான் என சிங்கங்களின் கைகளில் கொடுத்துவிட்டு போனதின் பலன்தான் இது வாப்பா.

1948 இலிருந்து 1983 வரை சிங்கங்களின் காலம். இந்த சிங்கங்கள் ஆங்காங்கே பதுங்கி பாய்ந்து, பிடிச்சி, கடிச்சி ஒரு ஜகஜால ஆட்சி நடாத்திக் கொண்டிருந்தன. வலி பொறுக்காத நரிகள், சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் என கூறிவிட்டு, புலியாக மாறி, இனி பசித்தாலும் புல்ல தின்ன மாட்டோம் என வெகுண்டெழுந்து, ஆட்டக்கடித்து, மாட்டக்கடித்து, ஆளைக்கடித்து, எதை எதையெல்லாமோ கடித்து, பக்கத்து காட்டிலிருந்து சமாதானத்துக்கு வந்த காண்டாமிருகங்களை கடித்து, அதுவும் போதாதென்று தாய் காண்டா மிருகத்தையே சிறிபெரும்புதூர் காட்டுக்குள்ள சென்று கொன்று, ஒரு காட்டுதர்பார் நடாத்தின.

இப்படியே மிருகத்தனமாக யோசித்தால், மிருகத்தனமாகத்தான் எழுதத் தோன்றும். தொடங்கிய பிரச்சனைக்கு வருவோம். இப்போது இந்த நாடு யாருக்கு சொந்தம் என்பதுதான் பிரச்சனை. இந்த உலகே எமக்குத்தான் சொந்தம் என்றும், சூரியனே எம்மைக் கேட்டுத்தான் எழும், விழும் என்று கணக்கு சொன்னவனே, இறுதியில் சர்வமும் சக்திமயம் என்பதை புரிந்து கொண்டு ஜகா வாங்கியது மட்டுமல்ல. இன்று மனித உரிமை என்ற பெயரில் உலகிற்கே இலக்கணமாகிக் கொண்டிருக்கின்றான். ஆனால் எறும்புக்கும் தீங்கிழைக்காதே என்று சொன்னவரின் வம்சத்தில் வந்தவன் ததிங்கிணத்தோம் பாடுகின்றார்கள் தம்பிகளே.

இது ஒரு டேண். டைம் சகோதரனே. தமிழர்களை அடக்கிட்டம். அவர்களது அண்டா காகசங்களையும். அபுல்கா காகசங்களையும் ஒடுக்கிட்டம். ஹ்ம். நீங்கென்ன ஒரு புடுங்கியா. ஒரு ஜுஜுபி அடக்கிடுவோம். என்ற ஒரு மமதை. இதுக்கு எதிராகப்போய் துண்டுப் பிரசுரங்கள் அடித்தும், வீதி ஓரங்களில் மீசையை முறுக்கிக் கொண்டு நின்றும் ஒன்றுமே கிழிக்க முடியாது நண்பனே.

இந்த நோய்க்கு வெயிட் அன்ட் சீ பார்மூலாதான் பாவிக்க வேண்டும் தம்பிகளே. ஆம் தம்பிகளே. பெத்தடின். புறூபன் என உடனடி டெப்லட்டுகள் கொடுக்காமல். நம்ம மூத்தப்பாமாரின் நாட்டு வைத்தியத்தினால் பதில் சொல்ல வேண்டும் நண்பனே. இது கொஞ்சம் காலம் எடுக்கும். ஆனால் சொல்லி அடிக்கலாம் நண்பனே. அப்படிப்பட்ட நாட்டு வைத்தியர்கள் நமது ஊர் முழுக்க நிரம்பிக் கிடக்கின்றார்கள் தம்பிகளே. அவனைத் தேடு சகோதரனே.

நம்மிடம் வாக்கு கொள்ளையடித்த நமது அரசியல்வாதிகள் மட்டும்தான் வலுவில்லாமல் இருக்கின்றார்கள் நண்பர்களே. நாம் நல்ல வலுவோடுதான் இருக்கின்றோம். சிறிலங்காவில். நாம் பிறந்த நாட்டில். நாம் துள்ளிவிளையாடிய மண்ணில். நாம் அன்றாடம் சுவாசித்த காற்றை. அடோய் தம்பிலா. நீ இங்கு இனி துள்ளி விளையாடக் கூடாது அல்லது மூச்சே விடக்கூடாது என்று நமது குரல்வளையைப் பிடித்து சொல்லியும். மொத்த சோனவனும் அமைதியாக இருக்கின்றானே. ஏன் என நீ யோசிக்வில்லையா. இது ஒரு யுத்தம் நண்பனே. இது ஒரு வோர்.

இதன் அர்த்தம் எதிரிக்கு புரியும். இது பயமல்ல. இது ஒரு பட்டை தீட்டல். இதை நாம் முன்னரே எதிர்பார்த்தோம் தம்பிகளே. முஸ்லீம் சகோதரயோ அபிட்ட புரியாணி தெனவா. அபிட்ட வட்டிலாப்பம் தெனவா. எயாலா அபிட்ட சந்த தென்ன நே. என்ற போதே எதிர்பார்த்தோம் தம்பிகளே. மாத்தற மாமாக்கள் நமக்கு பாலும். தெளிதேனும். திணைமாவும். கேப்பக் கூழும் தருவார்கள் என எதிர்பாத்தோம். ஆனால் இவ்வளவு விரைவாக தருவார்கள் என நினைக்கல தம்பிகளே.

நாம் முழு சிறலங்காவிலும் பரவிக்கிடக்கின்றோம் தம்பிகளே. வடகிழக்குக்கு வெளியே மூன்றில் ரெண்டு பகுதியினரான மூஸ்லீம்கள். நூறு வீதமான சிங்கள பாமர. பாட்டாளி மக்களுடன் தோளோடு தோள் கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நீ தீட்டும் ஒரு சிறு பொறியும். சின்னஞ்சிறு கூட்டங்களாக உள்ள நமது சகோதரர்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிடும். ஜாக்கிரதை சகோதரனே.

வக்கில்லாத நமது அரசியல்வாதி எவரையும் நம்பிவிடாதே. எல்லா யோக்கியர்களும். மதில்மேல் பூனைகளாக இருக்கின்றார்கள். எப்ப. எவர் பூனைக்கு மணிகட்டுவார் என கல்லுளி மங்கர்களாக பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் அந்த மாயவித்தைக்காறர்கள். யாராவது ஒருவர் மணிகட்டியவுடன். அந்த மணியை நாங்கள்தான் கட்டினோம் என கூறிக்கொண்டு சந்தைக்கு வருவார்கள். ஜாக்கிரதை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum