தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒரு முஸ்லிம் பெண்ணின் வாக்குறுதி! (கவிதை)

Go down

ஒரு முஸ்லிம் பெண்ணின் வாக்குறுதி! (கவிதை) Empty ஒரு முஸ்லிம் பெண்ணின் வாக்குறுதி! (கவிதை)

Post  ishwarya Thu May 02, 2013 12:16 pm

நான் வாக்குறுதி வழங்குகிறேன் -
என் தாயின் பெயரால்,
என் மகளின் பெயரால்,
என் சகோதரியின் பெயரால்,

இன்னும்,
பிரெஞ்ச் நீதிமன்றில்
பரிதாபமாய்க் கொல்லப்பட்ட
பெயர் தெரியா முஸ்லிம் பெண்ணின் பெயரால்,
இன்னும்,
ஒக்ஸ்போர்ட் வளாகத்திலும்
தேம்ஸ் நதியின் ஓரத்திலும்
வெனிசின் படகிலும்
பைசா கோபுரமருகிலும்

இன்னும்,
தெருக்களிலும் சந்துகளிலும்
சொந்த வீடுகளிலும் கூட
தம் ஆடை குறித்த அச்சத்தில்
ஒடுங்கி, ஒதுங்கி நிற்கும்
முஸ்லிம் மங்கையரின் பெயரால்
நான் வாக்குறுதி வழங்குகிறேன்!

நான் வாதிட விரும்பவில்லை,
அழகை மறைத்தல் பற்றியோ
மறைத்தலின் அழகு பற்றியோ
உங்களுடன் வாதிடுதல்
அர்த்தமற்றது என்பதால்.

என் தலை மூடும் சேலைத் தலைப்பு
நெஞ்சை மறைக்கும் முந்தானை
பாதம் தழுவும் ஆடையின் கீழ்முனை
சற்றே அசையினும்,
என் உடல் பதறிக் கூசுதலை
அறியமாட்டீர் ஒருபோதும்.

எனக்குப் புரியவில்லை –
என் உடல் மறைப்பு உங்களை ஏன் காயப்படுத்துகிறது?!
என் ஆடை அகற்றுவதில் உங்களுக்கேன் இத்துணை ஆர்வம்?
! அருட்சகோதரிகளும் பிக்குணிகளும்
இன்னும்
அத்தனை மதங்களின்
உத்தமப் பெண்களும்
ஆடையால் தம்மை முழுதாய் மறைக்கையில்
ஏழைப் பெண் என் உடை மட்டும்
ஏன் உங்களை வருத்துகிறது?!

ஒருவேளை –
உங்கள் பெண்களின் உடல் பார்த்து
அலுத்து விட்டதா உங்களுக்கு?
எங்கள் உடல் பார்க்கும் ஆவல்
அழுத்துகிறதா உங்களை?

இருப்பின் -
என் தலைமை ஆண்மையிழந்திருக்க,
என் அரசு மௌனமாயிருக்க,
என்னைச் சுற்றிலும் ஆன்மா இழந்தவர்களாய் ஆண்களிருக்க,

என் இனத்துப் பெண்களினதும்
இன்னமும் பிறவா என் பெண் சந்ததியினதும்
என்றைக்குமான காப்புறுதிக்காய்
நான் வாக்குறுதி வழங்குகிறேன்:

மறைத்துள்ள என் ஆடைகளை அகற்றவும்
மேலும் நீங்கள் நிர்ப்பந்திப்பின்,
என் நிர்வாணம் காட்டவும்
நான் உடன்படுகிறேன்!

- அஷ்ரபா நூர்தீன்
Written By News Center 2 at Friday, March 22, 2013
3 comments:

S. Hameeth, March 23, 2013 at 12:48 PM

உன் ஒற்றை நிர்வாணத்தால்
அந்த மொட்டைத் தலைகள்
முழு திருப்தி கொண்டிடுவரோ...?

பெற்றவளினதும்-கூடப்
பிறந்தவளினதும்
பிறப்புறுப்பை ரசித்துப் பார்க்கும்-மனப்
பிறழ்வு கொண்டவனன்றி வேறெவனும்
அன்னியப் பெண்களின் ஆடைகளை
அவிழ்த்துப் பார்க்க நினைக்க மாட்டான்!

ஆடை உன் உரிமை..அதில் கை வைப்பவனின்
ஆவி குடிக்க நீ ஆர்த்தெழுவதை விட்டு
அவிழ்த்துக் காட்டுவேன் என்று அறைகூவுகிறாயே
அசிங்கமாக இல்லை..?

என் முந்தானை விலக்கின் காறி
உமிழ்வேன் உன் முகத்தில் என நீ
உரைக்க வேண்டாமா...?

என்னுடையில் கை வைத்தால்
உன்னுயிரைக் குடிப்பேன் என நீ
ஓங்காரமிட வேண்டாமா...?

உடை உருவ நினைப்போனின்
குடல் உருவி மாலையிட்டு - அவன்
குருதியிலே கால் நனைத்து-
தடையகற்றித் தரணியிலே- உன்
தன்மானம் காக்க வேண்டாமா...?

மானமிழந்து-மார்க்கமிழந்து வாழ்தலை விட
ஈனர்களின் ஈரற்குலையைக் கடித்து
இரத்தம் துப்பும் போரில்
இறப்பது மேல் பெண்ணே..!

படை திரட்டு; போராடு; பகைவர்
களை பிடுங்கு வேரோடு!
உடை குறைக்கச் சொல்வோரின்
உதிரத்தினில் நீராடு!
உயிரைவிட மானமே
உயர்ந்ததென நீயாடு!

நெருப்பாய் எழு;
நீசரை எரி!
அறுத்தே அவர் தலை
ஆற்றினில் எறி!!

இனவெறி நரிகளின்
இதயம் பிள; இரத்தம் கொப்புளி!
ஆமாம்..
இனி நீ கொடும் புலி!
இப்புவி உனக்கினி!!









Anonymous, March 24, 2013 at 9:24 AM

அடி நிர்வாணம் காட்ட முனைபவளே!
துச்சாதனர்கள் இன்று உப்பரிகையில் நின்று
துச்சமாய் பெண்டிரின் நிர்வாணம் கண்டிட
உச்சாணி நிற்கின்றார் அதுகண்டு -பெண்ணே
உன் நிர்வாணம் காட்டிட நீமுனைவது தகுமோ?

தாய்க்கும் தன்னொடு பிறந்த தமியளுக்கும்
தரமேதன்ற றியா ஈனர்களின் குடல்கொய்து
நாயிழிசனம் இவனென்று காட்டவேண்டாமோ
நாதியிலாமற் செய்திட வேண்டாமோ நீ?

அசிங்கம் இவன் உன்னாடையில் கைவைக்க
அசிங்கம் நீ திறந்து காட்டலாமா உனைநீ
அசிங்கம் களைந்திட சிங்கமாய் மாறிநீ
அவனைக் கடித்துக் குதறு கரும்புலியாய் மாறி!

மறைத்தலின் அழகினை சொல்ல மறுக்கிறாய்
மறுதலிப்பதில் எனக்கிலை பிரச்சினை பெண்ணே
மறைத்தலை நீக்க முயல்வானின் குடலுரித்து
மலையாய் உன்கழுத்தில் நீயிட வேண்டாமோ?

நேயமே இலாத இனவாதம் பேசியலையும்
நீசர்களை மறைத்த விரலால் ஊண்டிக் கிழிநீ
கையாவைத்தாய் நீ எனக்கேட்டு காரித்துப்பு
காடையனை காரிகை நீயழித்தாய் எனக்காட்டு!

பேதமையால் நீசொன்னவை போதும்பேதைநீ
பொறுத்தது போதும் பொங்கியெழு - மாறாய்
பிடைவை நீக்கி நிர்வாணம் காட்ட முயலாதே
பிண்டமா நீ ? யுத்தத்தில் இறங்கு வேங்கைநீ!

இனியாரும் வாராதே இதுதான் கதிஎனக்காட்டு
இழிச்ச வாயர் நாமிலை எனக்காட்டு
கனிமொழி பேசுவம் கத்தியையும் ஏந்துவம்
காரிகையர் நாமெனக் காட்டு உனைக்காட்டாது!

ஆண்மை பற்றிப் பேசாதேயவன் ஆண்மை
அழித்திடு வீரவேங்கையாய் மாறி - நிர்வாணம்
கண்டிட வந்தாயோ பார்நிர்வாணம் உனதென
காட்டிக் காறித்துப்பு காடையரை அழிநீ!

உண்மை யறியாது மேலாடை நீக்க வந்தாயோ
உன்தாயும் பெண்ணே யெனக்காட்டு கீறி
மண்ணைக் கவ்விடச் செய்திடு - மாறாய்
மறைக்கும் உன்நிர்வாணம் காட்டாதே - சீச்சீ!

பாவையர் அழகு மறைத்தலில் எனக்காட்டு
பெறுமதி மறைத்தலில் எனப்புகட்டு பார்க்கு
தேவையிலாது காமப்பசியுடன் வந்திட நாம்
தரணியில் வேரறுத்திடுவம் நீசர்களை யென்பாய்!

எல்லாமும் சொல் அழித்தொழி பாரினின்று
ஏதிலாரை குதறி அவன் இரத்தம்தோய்த்து
எல்லாரும் வாருங்கள் இனியும் மேலாடைநீக்க
என்று கத்து போராவேசத்துடன் அழிந்திடஅநீதி!

-பஹ்மியா மணாளன்


முதலில் அஷ்ரபா நூர்தீன் அவர்களின் கவிதையினை கருத்தூன்றி வாசித்து விட்டு உங்கள் கருத்துக்களை மீள் பதிவு செய்வது மிக நன்றாக இருக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum