பெண்களை அதிகம் பாதிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்
Page 1 of 1

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றம் புரிபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்காக, சென்னை போலீசின் சைபர் கிரைம் பிரிவு இயங்கிவருகிறது. ஆணையர் திரிபாதி வழிகாட்டுதலின்படி, துணை ஆணையர் ராதிகாவின் கீழ் இந்த பிரிவு செயல்படுகிறது. டாக்டர் எம்.சுதாகர் கூடுதல் துணை ஆணையராக செயல்படுகிறார். 2003-ல் இந்த பிரிவு தொடங்கப்பட்டபோது 35 புகார்களே பதிவாகின.
வருடத்திற்கு வருடம் அதிகரித்து, 2007-ல் 702 ஆகவும், 2008-ல் 852 ஆகவும் உயர்ந்தது. கடந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கை- 1370. வருடத்திற்கு வருடம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதுபோல் தோன்றினாலும், வேகமாக உயர்ந்துகொண்டிருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையோடு அதை ஒப்பிட்டால் குற்றங்களின் எண்ணிக்கை குறைவுதான்.
ஆனாலும் இதையும் கட்டுப்படுத்தவேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். சைபர் கிரைமில் பதிவாகும் குற்றங்களில் மிரட்டுதல், ஆபாச படம் பிடித்தல், அவைகளை வெளியிடுதல் போன்றவை 5 சதவீதம் அளவிற்குதான் இருக்கும். அதில் பெரும்பாலும் பெண்கள் பாதிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள்.
ஆணும், பெண்ணும் நட்போடு பழகிக்கொண்டிருக்கும்போது தங்களை படம் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்குள் பிரச்சினை ஏற்படும்போது அந்த படங்களை பயன்படுத்தி இணையதளங்களில் தவறாக சித்தரிக்கிறார்கள். ஆபாச படங்களை வெளியிடுவதும், தவறாக சித்தரிப்பதும் கடுமையான குற்றங்கள்.
விளையாட்டாக படம் பிடிப்பது, பொழுதுபோக்காக அடுத்தவர்களை படம் பிடிப்பது எல்லாமே எதிர்காலத்தில் பிரச்சினைகளை உருவாக்கும்தன்மை கொண்டது என்பதால், எப்போதும் எல்லோரும் இதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒருவர் கெட்ட நோக்கமின்றி இன்னொருவரின் தனிப்பட்ட படங்களை எடுத்தாலும், வைத்திருந்தாலும் அது மற்றொருவர் கையில் கிடைக்கும்போது பிரச்சினைக்குரியதாக மாறக்கூடும்.
அதனால் அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயங்களை ஒருபோதும் யாரும் படம்பிடிக்கக்கூடாது. சைபர் கிரைம் குற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் உணரவேண்டும் சென்னையில் இத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகிறவர்கள் போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் உள்ள `குறை கேட்பு பிரிவில்' புகார் செய்யவேண்டும். புகாரின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களை அதிகம் பாதிக்கும் `ஹெர்னியா'!
» பெண்களை அதிகம் பாதிக்கும் கணுக்கால் வலி
» பெண்களை அதிகம் பாதிக்கும் `ஹெர்னியா'!
» பெண்களை அதிகம் பாதிக்கும் வெள்ளைப்படுதல்
» பெண்களை அதிகம் பாதிக்கும் முதுகு வலி பற்றிய சில குறிப்பு.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum