தேர்தல் 2009
Page 1 of 1
தேர்தல் 2009
விலைரூ.50
ஆசிரியர் : ப.திருமா வேலன்
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: அரசியல்
ISBN எண்: 978-81-8476-201-3
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
பதிருமாவேலன்
அக்னி நட்சத்திர காய்ச்சலுக்கு இணையாக அனல் வீசிக் கொண்டிருக்கிறது 2009 தேர்தல் களத்தில்! இமயம் முதல் குமரி வரையில், கையில் மைக் பிடித்து, தொண்டை வலிக்கக் குரல் எழுப்பி, வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டும், எதிர்க்கட்சிகள் மீது புழுதிவாரி இறைத்துக் கொண்டும் இருக்கிறார்கள் அரசியல்வாதிகள்! நாடு தழுவிய வாக்காளர்கள் முகத்தில் மென் புன்னகையுடன் இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்!
மே-16 அன்று ஓட்டுகள் எண்ணப்பட்டதும், ஆட்சி அமைக்கும் உரிமை யாருக்கு வசப்படும் என்பதைக் கணிக்க முடியாத நிலை இப்போது! எதுவும் நடக்கலாம்; எப்படியும் நடக்கலாம் என்பதே பொதுவான அபிப்பிராயம்!
2009 தேர்தல் களம் குறித்த கணிப்புகள் மற்றும் ஆருடங்களைத் தவிர்த்து, ஆரம்பத்திலிருந்து இந்திய அரசியலையும், அரசியல் கட்சிகளையும் அலசும் விதமாக உள்ளே எட்டு கட்டுரைகளையும் எளிமையான நடையில் அமைத்திருக்கிறார் நூலாசிரியர் ப.திருமாவேலன். முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவில் ஆரம்பித்து, இன்றைய பிரதமர் மன்மோகன் சிங் வரை இந்தியாவின் பிரதமர்கள் பற்றியும், அவர்கள் அரியணை ஏறிய காலகட்டங்களில் நிலவிய அரசியல் பின்னணிகள் பற்றியும் துல்லியமாகப் பேசும் நூல் இது.
15வது நாடாளுமன்றத்துக்கு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கப் போகும் வாக்காளர்களில், முதல்முறை ஓட்டுச் சாவடிக்குள் நுழைபவர்களும் கணிசமாக இருக்கிறார்கள். இவர்களுக்குக் கடந்தகால அரசியல் வரலாற்றைத் தெரிந்துகொள்ள
இந்த நூல் பயனுள்ள கையேடாக உதவும். மற்றவர்களுக்குக் கடந்தகால நினைவலைகளைக் கிளறிவிடும்!

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சுஜாதா - நினைவுப்புனைவு 2009
» தமிழக தேர்தல் களம் தேர்தல் கண்ணோட்டம்; தமிழக பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள்
» தேர்தல் சுதந்திரமாக நடைபெற மக்களின் பங்களிப்பு அவசியம் தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் பேச்சு
» தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியி
» இயர்புக் 2009

Permissions in this forum:
You cannot reply to topics in this forum