தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தேகம் யாவும்

Go down

தேகம்  யாவும் Empty தேகம் யாவும்

Post  oviya Wed May 01, 2013 6:23 pm

விலைரூ.50
ஆசிரியர் : அருண் சரண்யா
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பகுதி: கட்டுரைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
'அருண் சரண்யாவின் இந்தக் கதைகள் காட்டும் உலகம் நமக்கு மிகவும் நெருக்கமானது. நாம் வாழ்ந்து, நாம் அனுபவித்து, நாம் ரசித்துப் பழகிய உலகம்தான். ஆனால் நமது புலன்களுக்கு எட்டாத சில ருசிகளை இவரது கதைகள் எட்டிப்பிடித்துவிடுவதுதான் வித்தியாசம்.

ஆடம்பரங்களோ, ஜோடனைகளோ, உத்தி மயக்கங்களோ அறவே இல்லாத எழுத்து அருண் சரண்யாவினுடையது. சொல்ல வரும் விஷயத்தின் கூர்மை சற்றும் குறையாத விதத்தில் மொழியை மிக ஜாக்கிரதையாகக் கையாளக் கூடியவர். சிக்கனமான சொற்கள், சீரான கதையோட்டம். வாசகர்களுடன் மிக நேரடியாக உறவுகொள்ளும் கதைகள் இவை.

ஜி.எஸ். சுப்ரமணியன் என்கிற இயற்பெயர் கொண்ட அருண் சரண்யா, தமிழ் வாசகர்களுக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர். கட்டுரைகளுக்கு ஜி.எஸ்.எஸ்ஸாகவும், புனைவுக்கு அருண் சரண்யாவாகவும் கல்கியிலும் விகடனிலும் இவரை அடிக்கடிப் பார்க்கலாம். வங்கியில் பணிபுரிந்து விருப்ப ஓய்வில் வெளியேறி, பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சித் தொடர்களுக்கும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். இதுவரை பன்னிரண்டு நூல்கள் வெளியாகியிருக்கின்றன.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum