காலியில் முத்தரப்பு இரகசிய பேச்சு அரசுக்கு எதிராக சதிவலையா?
Page 1 of 1
காலியில் முத்தரப்பு இரகசிய பேச்சு அரசுக்கு எதிராக சதிவலையா?
சர்வதேச சமூகப் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கிடையிலான மும்முனை இரகசியப் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேற்படி மூன்று தரப்பினருக்கும் கடந்தவார இறுதியில் மாலைப்பொழுதில் மிக இரகசியமாக இடம்பெற்றுள்ளதுடன் இந்தப் பேச்சுக்கள் நள்ளிரவுவரை நீடித்தது.
காலியில் உள்ள பிரபல விடுதியொன்றில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆகியோர் இணைந்து வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்துள்ளனர்.
கடந்த 23 ஆம் திகதி குறித்த விடுதிக்குச் சென்ற இவர்கள் நீண்ட கலந்துரையாடலை அவர்களுடன் நடத்தியுள்ளதுடன், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதுடன் இந்தப் பேச்சுவார்த்தையில் 25 வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த சந்திப்புக்குறித்து அரசாங்கம் இப்போது கூடிய கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இலங்கை அரசுக்கு எதிராக தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் செவ்வாய்கிழமை உண்ணாவிரதம்
» காலியில் வீடொன்றிலிருந்து மூன்று சடலங்கள் மீட்பு
» இரகசிய காதலிக்கு...
» மனித வாழ்க்கையில் இரகசிய உண்மைகள்
» முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு: விஸ்வரூபம் படம் விரைவில் வெளியாகிறது
» காலியில் வீடொன்றிலிருந்து மூன்று சடலங்கள் மீட்பு
» இரகசிய காதலிக்கு...
» மனித வாழ்க்கையில் இரகசிய உண்மைகள்
» முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு: விஸ்வரூபம் படம் விரைவில் வெளியாகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum