தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெலிகமவில் இனவாதமே இல்லையே......? - கவலைப்படுகிறது பொதுபல சேனா!

Go down

வெலிகமவில் இனவாதமே இல்லையே......? - கவலைப்படுகிறது பொதுபல சேனா! Empty வெலிகமவில் இனவாதமே இல்லையே......? - கவலைப்படுகிறது பொதுபல சேனா!

Post  ishwarya Tue Apr 30, 2013 5:11 pm

நேற்று (03) பிற்பகல் 2 மணியளவில் நடைபெறவிருந்த பொதுபல சேனா இயக்கத்தினரின் அடிப்படைவாதத்திற்கெதிரான கூட்டம், பிற்பகல் 3.40 மணியளவிலேயே ஆரம்பமானது.

ஏறக்குறைய 150 பார்வையாளர்களும், 20 பௌத்த மதகுருமார்களும் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தனர். ஆங்காங்கு நின்று ஒருசிலர்பொதுபல சேனாக் கூட்டத்தை அவதானித்தனர். கூடவே முஸ்லிம்களில் பலரும் அந்தக் கூட்டத்தை அவதானித்ததைக் காணக்கூடியதாகவிருந்தது.

தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னரேயே முஸ்லிம் அடிப்படைவாதிகளைத் திட்டித்தீர்த்தது பொதுபல சேனா இயக்கம்.

தேசிய கீதத்தின் பின்னர் உரையாற்றிய பொது பல சேனாவின் ஆதரவாளர்களுள் ஒருவர்,

‘வெலிகமையில் இனவாதம் கிடையாது. முஸ்லிம் கடைகளுக்கு நாங்கள் செல்கிறோம். எங்களது பௌத்த சிங்களக் கடைகளுக்கு முஸ்லிம்கள் வருகிறார்கள். இது எந்தவொரு இனத்தையோ, இயக்கத்தையோ, அரசியல் கட்சியையோ தாக்கக் கூடிய கூட்டமல்ல. எங்கள் உரிமைகள் பற்றியும், எங்கள் இருப்புப் பற்றியும் பேசுகின்ற கூட்டம். இங்குள்ள முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். நகரபிதா ஒரு முஸ்லிமாக இருந்த போதும் அவர் தனது பணியைச் சிறப்பாகச் செய்துவருகின்றார்.

நாங்கள் அப்படியான முஸ்லிம்கள் பற்றிப் பேசவரவில்லை. அடிப்படைவாத முஸ்லிம்களாக இருக்கக்கூடியவர்கள் பற்றித்தான் பேசவிருக்கிறோம். வெலிகமையில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள். அவர்களுடன் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளும் இருக்கிறார்கள். இன்று வெலிகமையில் கிறிஸ்தவ சக்திகள் அதிகரித்துவருகின்றன.

ஒருவர் தான் விரும்பிய மதத்தை பூரணமாக பின்பற்றும் உரிமையுண்டு. பௌத்தன் ஒருவர் இஸ்லாமியனாக மாறுவதற்கோ, கிறிஸ்வனாக மாறுவதற்கோ உரிமையுண்டு. ஆனால், அவர்களை வலுக்கட்டாயப்படுத்த முடியாது. இன்று அதுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அவர்களுக்கெதிராக நாங்கள் கிளர்ந்தெழ வேண்டும்’ என்று குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து உரையாற்றிய இளம் ஆதரவாளர் ஒருவர்,

‘வெட்கமாக இருக்கிறது...வெட்கமாக இருக்கிறது... ஏன் தெரியுமா, நாங்கள் முழு பௌத்தர்களுக்குமாகக் குரல்கொடுக்கும் போது, இங்கு (வெலிகமையிலு) ள்ள பௌத்தர்களில் பெரும்பாலானோர் எங்களுக்கு ஆதரவு தர மறுக்கிறார்கள். சிங்களக் கடைகளில் எங்களுக்கு ஆதரவு வழங்குமாறு போய் ஏறி இறங்குகையில் எங்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. இங்கு இனவாதத்தை ஏற்படுத்த வேண்டாம் என்கிறார்கள். என்றாலும். சில வியாபார நிலையங்கள் ஆதரவு நல்கின.

பௌத்த விகாரைகளுக்குச் சென்று, அங்குள்ள விகாராதிபதிகளைச் சந்தித்து இதுபற்றிக் கதைத்து கூட்டத்திற்கு வருகைதருமாறு அழைக்கையில், அவர்களும் எங்கள் மனம் குளிரும் வண்ணம் பதில் தரவில்லை.

நாங்கள் முழு வெலிகமையிலும் ஒலிபெருக்கிகளை இணைப்பதற்கு அனுமதி கேட்டபோது பொலிஸார் எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. நாங்கள் தற்போது கூடியுள்ள இந்த குறுகிய இடத்திற்குள் மட்டுமே ஒலிபெருக்கியை இணைக்க அனுமதி தந்தார்கள். அத்துடன் நில்லாது, இனவாதம் பற்றிப் பேச வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்கள். பௌத்த தேசத்தில் பிறந்து, பௌத்தனாய்ப் பிறந்து, பெரும்பான்மை இனத்தவனாய் நின்று எங்களுக்குப் பேசமுடியவில்லை..... இதனை என்னென்று சொல்வது? என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

பாகிஸ்தான் ஆரம்பத்தில் முழுமையாக பௌத்த நாடாகவிருந்தது. பிற்காலத்தில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் அதனைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அங்கிருந்த சிலைகளை அகற்றினார்கள். எல்லோரையும் முஸ்லிம்களாக மாற்றிக்கொண்டார்கள். பாரிய பல்கலைக்கழகத்தையும் தங்களுக்குரியதாக மாற்றிக் கொண்டார்கள்.

நாங்கள் ஆரம்பத்தில் தமிழ் தீவிரவாதிகளால் உடைமைகளை இழந்தோம். எங்கள் இருப்புக்களை அவர்களுடைய உரிமைகளாக்கிக் கொண்டார்கள். எங்கள் உயிர்களைத் தியாகம் செய்தோம். என்றாலும் அவர்களுடைய சிந்தனைகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

இன்று முஸ்லிம் அடிப்படைவாதிகள் உணவு வகைகளில் தங்கள் மத உணவுகளைத் திணிக்கிறார்கள். ஆண்டுகள் சில சென்றதும் இந்நாட்டில் அதிகமானோர் முஸ்லிம்களாகவே இருப்பர். அவர்கள் எல்லா இடங்களிலும் உள்ள நிலங்களை அதிக விலைகொடுத்து வாங்குவார்கள். பௌத்தர்கள் கையாலாகாதவர்களாக மாறிவிடுவார்கள். அந்நிலைமை மாற வேண்டுமென்றால் எங்களுடன் நீங்கள் எல்லோரும் கைகோர்க்க வேண்டும்.’ என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சி முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு எதிராக வந்தபோதும், சனமின்மை, வெலிகம சிங்கள - முஸ்லிம்களின் ஒருமைப்பாடு என்பவற்றைக் கண்ணாறக் கண்ட பொதுபல சேனாவினர், கிறிஸ்தவ அடிப்படைவாதம் என்றொன்று வெலிகமையில் இருப்பதாக மடக்கி மடக்கிக் குறிப்பிட்டனர்.

எதுஎவ்வாறாயினும், வெலிகமயில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளின் அளவுக்கேற்ப அங்கு பார்வையாளர்கள் இருக்கவில்லை என்பதும், பொது பல சேனாவின் கூட்டம் நினைத்த வண்ணம் வெற்றிபெறவில்லை என்பதுமே உண்மை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹலாலை ஒழிக்கக் கோரும் பொதுபல சேனா
» பொதுபல சேனா இரண்டாகப் பிளவுறுகிறது...! பாரியதொரு மாற்றம் மிகவிரைவிலேயே...
» குர்ஆனை இழிந்துரைத்த பொதுபல சேனா, ராவண பலய முக்கிய உறுப்பினர்கள் நால்வருக்கெதிராக சட்டநடிக்கை எடுக்கப்படும்! - அஸாத் ஸாலி
»  வாழ்க பொதுபல சேனாவின் சேவைகள். வளர்க பொதுபல சேனாவின் ஆர்ப்பாட்டங்கள். – யஹியா வாஸித் –
» நாயகிகளுக்கு முக்கியத்துவமே இல்லையே: பாவனா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum