யாழ். மாவட்ட மீனவர்கள் பிரச்சனையை தொடர்பில் இந்திய குழுவிடம் கூட்டமைப்பு பேச மறுத்தது ஏன்!
Page 1 of 1

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை வருகையின்போது யாழ்ப்பாணத்தில் அவர்களைச் சந்தித்துப்பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழக மீனவர்களின் அத்துமீறிய ட்ரோலர் மீன்பிடி காரணமாக யாழ். மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து எதுவும் பேசவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வந்திருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினர் சிவில் சமூகத்தினருடன் நடத்திய சந்திப்பில், ஓரிரு பொது நபர்கள் தவிர பெரும்பாலானவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர் களாகவே இருந்தனர்.
இந்தச் சந்திப்பில், மக்கள் எதிர்நோக் கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டபோது இலங்கை கடற்பரப்பில் வெளியார் அத்துமீறி ட்ரோலர் படகுகளில் மீன்பிடிப்பதால் உள்ளூர் மீனவ ர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்துப் பேசப்பட்டபோது, அது இந்திய மீனவர்களின் ட்ரோ லர்களா என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்படியில்லை என்றும் தென்னிலங்கைச் சிங்கள மீனவர்களின் ட்ரோலர் படகுகள் ஆலே உள்ளூர் தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ளனர்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தொடர்பாக தொடர்ச்சியாக உள்ளூர் மீனவர் அமைப்புக்கள் குரல் கொடுத்து வருகின்றன. இது தொடர்பாக உள்ளூர் அரசியல் கட்சிப் பிரமுகர்கள், அரசாங்க அதிபர், இந்திய துணைத் தூதுவர் உள்ளிட்ட பலரிடமும் அவர்கள் முறையிட்டுள்ளதுடன், ஜனாதிபதியின் கவனத்துக்கும் இந்த விவகாரம் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
எனினும், தமிழக மீனவர்களால் உள்ளூர் தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுவது குறித்து இதுவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்தவிதக் கருத்துக்களையும் வெளியிட்டிருக்கவில்லை. யாழ். வந்திருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினருடனான சந்திப்பின்போது அவர்களாகவே இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகுகளால் பிரச்சினையா என்று கேட்டபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அப்படியொன்றும் இல்லை என்பதுபோல் கூறியது, அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக, சந்திப்பில் கலந்துகொண்ட சிவில் சமூகப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் குடும்பத்தினர் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்ற காரணத்தினாலோ என்னவோ, தமிழக மீனவர்களால் யாழ் மீனவர்கள் பாதிக்கப்படுவது குறித்து இதுவரையில் எதுவுமே பேசிவராத கூட்டமைப்பினர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாமாகக் கேட்டபோதும் அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என்று கூறியது இங்குள்ள மக்கள் குறித்த அவர்களது அக்கறையற்ற தன்மையைக் காட்டுவதாக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அந்தப் பிரதிநிதி கூறினார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சிவில் சமூக சந்திப்பு என்று கூறப்பட்டபோதும், மீனவர் சமூகம், விவசாயிகள், உழைப்பாளர்கள், இடம்பெயர்ந்த மக்கள், போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களின் பிரதிநிதிகள் எவரும் சிவில் சமூகக்குழு என்ற சொல்லப்பட்ட குழுவில் இடம்பெறவில்லை என்பதையும் அந்தப் பிரதிநிதி எம்மிடம் சுட்டிக்காட்டினார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்திய குழு யாழ், கிளி. முல்லைக்கு விஜயம்!
» இலங்கை நாடாளுமன்றக் குழுவிடம் மீரா குமார் மன்னிப்பு - தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்தார்
» கமலுடன் நடிக்க மறுத்தது ஏன்? -ஸ்ருதிஹாசன்
» சிம்புவுடன் நடிக்க அமலாபால் மறுத்தது ஏன்?
» சச்சின் தான் ஓய்வு பெறுவது தொடர்பில் சமிக்கை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum