தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வவுனியா குருமன்காடு Gym Rider உடற் பயிற்சி நிலையத்தில் காமலீலை அரங்கேற்றம்

Go down

வவுனியா குருமன்காடு Gym Rider உடற் பயிற்சி நிலையத்தில் காமலீலை அரங்கேற்றம் Empty வவுனியா குருமன்காடு Gym Rider உடற் பயிற்சி நிலையத்தில் காமலீலை அரங்கேற்றம்

Post  ishwarya Tue Apr 30, 2013 1:09 pm

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் குருமன்காட்டில் வழமையாக நடைபெற்றுக் கொண்டிருந்த Gym Rider என்ற உடற் பயிற்சி நிலைம் ஆரம்பித்த 08 மாதங்களிலேயே திடீரென மூடப்பட்டது. அதற்கான காரணம் இரகசியாமாக மூடி மறைக்கப்பட்டது. நம்பி பணம் செலுத்தியோர் கைவிடப்பட்டனர். தற்போது அந்த உடற்பயிற்சி நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அதன் இரகசியங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

அந்த உடற்பயிற்சி நிலையத்தின் உரிமையாளரான நெளுக்குளம் சாம்பல்தோட்டத்தை சேர்ந்த குமாரசிங்கம் கோகுலன் (வயது 29) என்பவர் சில இளைஞர்களுடன் சேர்ந்து கலாச்சார சீர்கேட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Gym Rider என்ற அந்த உடற்பயிற்சி நிலையம் இரவு 10.00 மணிக்கு பின் மது அருந்தும் இடமாக பாவிக்கப்பட்டு வந்துள்ளது. காலப்போக்கில் உடற்பயிற்சி நிலையத்தின் உரிமையாளர் காலை 11.00 மணியளவில் அவ் நிலையத்துக்கு கீழ் இருந்த ஆங்கில வகுப்புக்கு வந்த ஒரு பெண்ணுடன் சல்லாபம் செய்ய முற்பட்ட வேளை கையும் மெய்யுமாக பிடிபட்டார். அதனைத் தொடர்ந்து அவ் இடத்தை நோக்கி விரைந்த இலங்கை பொலீசார் உரிமையாளரையும், பெண்ணையும் எச்சரித்துள்ளனர்.

இது மட்டுமல்லாது குறுகிய காலத்துள் பணக்காரராகும் நோக்குடன் சீட்டு பிடிப்பதாகக் கூறி பலரை ஏமாற்றியுள்ளார். இச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டோர் பலர். பல இலட்சங்களை சுருட்டிக்கொண்டு ஓட முற்பட்ட வேளையில் கடன்காரர்கள் விரைந்து Gym Rider நிலையத்திற்கு வந்து அங்குள்ள பெறுமதியான பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் அந்த வர்த்தக, சல்லாப நிலையம் மூடப்பட்டது.

இவ்வாறு கடன் கொடுத்தவர்களும், சீட்டால் பாதிக்கப்பட்டவர்களும் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் ஒருவர் இந்த விபரங்களை எமக்குத் தந்துள்ளார். சி.சுஜிகரன், S.பிரதாப், சி.தினா என்போர் போன்று பலர் இவரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத் தகவல்கள் எமக்குக் கிடைத்ததையடுத்து எமது ஊடகவியலாளர்கள் கு.கோகுலன் (29) பற்றி இவரது நண்பர்கள் பலரிடம் விசாரித்த போது எந்த வித தகவல்களையும் அளிக்கவில்லை. இருந்தும் அவரது நிலையத்தில் விசாரித்த போது அடுத்த அதிரடியான தகவல் வெளியாகியது.

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலம் தொடக்கம் யுத்த காலம் வரை அதாவது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (TRO) தடைசெய்யப்படும் வரை அங்கு கு.கோகுலன் வவுனியா மாவட்ட திட்ட கணக்காளராக பணிபுரிந்தார் என்று அறியப்பட்டுள்ளது. அத்துடன் இவர் பெண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றி காம லீலைகள் புரிந்த செய்திகளும் எமக்கு கிடைத்துள்ளது.

இத்தகைய சமூக விரோதிகள் வாழ இவ் வையகம் வழிவிட்டிருப்பது கவலைக்குரியதாகும். இத்தகைய காடையர்களுக்கு இலங்கை பொலிசும், சட்டமும் என்ன தண்டனை வழங்கப்போகிறது?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum