மாணிக்க வீணை
Page 1 of 1
மாணிக்க வீணை
விலைரூ.100
ஆசிரியர் : சுவாமிநாத ஆத்ரேயா
வெளியீடு: பண்மொழி பதிப்பகம்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பண்பொழி பதிப்பகம், அடுக்க எண்.2, பெத்தலா ஹவுசிங், 12/59, வைத்தியர் அண்ணாமலை தெரு, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 320. விலை: ரூ.100)
இந்த நூலில் பத்துச் சிறுகதைகளும், ஒரு நாடகமும், எட்டுக் கட்டுரைகளும் உள்ளன. மணிக்கொடி கால எழுத்தாளரான சுவாமிநாத ஆத்ரேயா ஒரு படைப்பாளி என்பதைச் சிறுகதைகளும், நாடகமும் தெரிவிக்கின்றன. அவர் ஓர் ஆராய்ச்சியாளர் என்பதை அவரது இலக்கியக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.
இலக்கியக் கட்டுரைகளில் ஒன்றான `பிளாட்டிங் பேப்பர்' என்ற கட்டுரை தி.ஜானகிராமனைப் பற்றியது. `பிளாட்டிங் பேப்பர்' எப்படி இன்னொன்றில் உள்ளதை உறிஞ்சுகிறதோ அதைப் போல் தனது கூர்ந்த அறிவால் அனைத்தையும் உள்வாங்கி அரிய படைப்புகளை ஜானகிராமன் தந்துள்ளார் என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
`அமர வித்தை' என்னும் தலைப்பில் அமைந்துள்ளது கட்டுரையா, கதையா என்னும் சந்தேகத்தைத் தரும் வகையில் உள்ளது. அது, கட்டுரைப் பகுதியில் தரப்பட்டிருந்தாலும் சிறு
கதைக்கான அத்தனை அம்சங்களுடனும் இருப்பதைப் படிப்போர் அறிய முடியும்.
கடந்த 1953ல் `மாணிக்க வீணை' நூலாக முதலில் வெளிவரும்போது அ.சீனிவாச ராகவன் வழங்கியுள்ள அணிந்துரை இந்த நூலின் பின்னிணைப்பாக அமைந்து அழகு சேர்க்கிறது. அதைப் போன்றே சுவாமிநாத ஆத்ரேயாவின் பிற நூல்களுக்கு இதழ்கள் வெளியிட்டுள்ள மதிப்புரைகளும் அவரது எழுத்து வன்மைக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. இந்தத் தொகுப்பு நூலுக்கு, திருப்பூர் கிருஷ்ணன் வழங்கியுள்ள அணிந்துரை ஒரு திறனாய்வுரையாக அமைந்து நூலுக்குப் பெருமை சேர்க்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தமிழில் சிறுகதைகள் எவ்வாறு எழுதப்பட்டன என்பதை `மாணிக்க வீணை' நூலின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» வீணை வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
» வீணை பவானி
» மரகத வீணை மரகத வீணை
» மாணிக்கச்சித்தர் அருளிய மாணிக்க மரகதங்கள்
» துபாயில் மாணிக்க விநாயகம் பங்கேற்ற 'செம சிங்கர்' 2012

Permissions in this forum:
You cannot reply to topics in this forum