விரதம் இருக்க வேண்டிய விதிமுறைகள்
Page 1 of 1
விரதம் இருக்க வேண்டிய விதிமுறைகள்
எல்லா விரதங்களுக்கும் போலவே சிவராத்திரிக்கும் சில விதிகள் இருக்கு. மற்ற பண்டிகைகளைப் போல கிடையாது சிவராத்திரி. கொஞ்சம் கடுமையாகத்தான் விரதம் இருக்க வேண்டும். மற்ற பண்டிகைகள் எல்லாமே விரதத்துலயும் வழிபாட்டுலயும் ஆரம்பிச்சு விருந்தில் முடியும். ஆனால் சிவராத்திரி அப்படி இல்லை.
மனிதர்களுக்கு ரொம்ப முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக் காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்க மாகும். உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறை யுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்.
`சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது மிகவும் நல்லது. அவ்வாறு இருக்க இயலாதவர்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பால், பழங்கள் மட்டுமே சாப் பிட்டு விரதமிருக்கலாம் அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கை உப்பில்லாமல் வேக வைத்து உண்ணலாம் அல்லது சத்துமாவை வெல்லத்துடன் கலந்து ஒரே ஒருவேளை மட்டும் உண்ணலாம்.
விரதம் இருப்பவர்கள் சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறைகளையும் ஓதலாம். சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாள்களில் நூறு முறை பஞ்சாட்சரம் ஜபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.
அதே போல் தான் லிங்கபுராணம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், திருவாசகம் ஆகியவற்றைப் படித்தாலும் கேட்டாலும் பலன்கள் மற்ற நாள்களை விட அதிகமாகவே கிடைக்கும். சிவராத்திரி விரதத்தின் மகிமையை, சிவன் நந்திக்கு உபதேசித்தார்.
அதனைக் கேட்ட நந்தி அதை அனைத்துத் தேவர்களுக்கும் கூறினார். அந் தத் தேவர்கள் அனைத்து முனிவர்களுக்கும் ரிஷி களுக்கும் அதனைக் கூறினார். சிவராத்திரி தினத்தன்று மன சுத்தியோட `ஓம் நமச் சிவாய' என்று உச்சரிச்சுக்கிட்டு இருந்தாலே போதும் எல்லா பலன்களும் கிடைக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விரதம் இருக்க வேண்டிய விதிமுறைகள்
» விரதம் இருக்க வேண்டிய சில விதிமுறைகள்!
» விரதம் இருக்கும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய 21 விதிமுறைகள்
» விரதம் இருக்கும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய 21 விதிமுறைகள்!
» விரதம் இருக்கும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய 21 விதிமுறைகள்!
» விரதம் இருக்க வேண்டிய சில விதிமுறைகள்!
» விரதம் இருக்கும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய 21 விதிமுறைகள்
» விரதம் இருக்கும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய 21 விதிமுறைகள்!
» விரதம் இருக்கும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய 21 விதிமுறைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum