மகிழ்ச்சியான வாழ்வு தரும் மாசி மக விரதம்
Page 1 of 1
மகிழ்ச்சியான வாழ்வு தரும் மாசி மக விரதம்
'மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்' என்பது நம் முன்னோர் வாக்கு. ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மகத்தில் வரும் மகம் நட்சத்திரத்தை 'மாசி மகம்' என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் மகம் நட்சத்திரம் வரும் நாளில் விரதமிருந்து இறைவனை வழிபட்டால், இனிமையான வாழ்க்கை நமக்கு அமையும் என்பது நம்பிக்கை.
இந்த உலகத்தை படைப்பதற்காக உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் ஒரு கும்பத்தில் வைத்து அதை நீரில் மிதந்து வரச்செய்தனர். அப்போது இறைவன் அந்த கும்பத்தை அம்பால் எய்ய, கும்பத்தின் மூக்கு பகுதியான முன்னால் இருக்கும் கூம்பு போன்ற கோணப்பகுதி உடைந்து விழுந்தது. அந்த இடமே இப்போது கும்பகோணம் என்ற திருத்தலமாக கூறப்படுகிறது.
அங்கு மகாமக பெருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்த மகாமக விழா கொண்டாடப்படுகிறது. மற்ற ஆண்டுகளில் வரும் மாசி மாதங்களில் மகம் நட்சத்திரம் வரும் போது, நாம் தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் தித்திப்பான வாழ்க்கை அமையும்.
இது சிவனின் மைந்தனான முருகப்பெருமானுக்கும் உகந்த விரதமாகும். அன்றைய தினம் குழந்தையில்லாத தம்பதிகள் விரதமிருந்து அன்னதானம் செய்தால் தக்க விதத்தில் வாரிசுகள் உருவாகும். அந்த அற்புதமான திருநாள் 25-02-2013 திங்கள்கிழமை அன்று வருகிறது
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மகிழ்ச்சியான வாழ்வு தரும் மாசி மக விரதம்
» உடல்நலம் தரும் மாசி மகம்
» உடல்நலம் தரும் மாசி மகம்
» உடல் நலம் தரும் மாசி மகம்d
» மங்கல வாழ்வு தரும் தரிசனம்
» உடல்நலம் தரும் மாசி மகம்
» உடல்நலம் தரும் மாசி மகம்
» உடல் நலம் தரும் மாசி மகம்d
» மங்கல வாழ்வு தரும் தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum