மாசிமக விரதம் இருப்பது எப்படி?
Page 1 of 1
மாசிமக விரதம் இருப்பது எப்படி?
மாசி மாதம் என்றதும் நம் நினைவுக்கு வருவது மக நட்சத்திரம்தான். இன்றுவருகிற திங்கட்கிழமை (25-ந்தேதி) மாசிமக நட்சத்திர தினமாகும். இந்த மாசி மக நட்சத்திரத்தன்று புனித நீர்நிலையில் நீராடினால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கும். உயர்ந்தவன் தாழ்ந்தவன், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரும் நீராடலாம்.
திருமணமானவர்கள் தங்கள் மனைவியுடன் நீராட வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. மாசி மக விரதம் மகிமையும் மாண்பும் மகத்துவமும் மிக்க ஒர் உன்னத உத்தம விரதமாகும். இந்த விரதம் அனுஷ்டிக்க விரும்புபவர்கள் காலை எழுந்து புண்ணிய நீராடி தோய்த்துலர்ந்த ஆடை தரித்து சிவ சிந்தனையுடன் சந்தியாவந்தனம் முடிந்து சிவாலய தரிசனத்துடன் ஆரம்பிக்கலாம்.
மதியம் ஒரு நேரம் மட்டும் சாப்பிட்டு, இரவு பால்பழம் அருந்தலாம். முழுநாளும் வேறு வேலைகளில் ஈடுபடாது தேவார திருவாசகங்களைப் பாடிய வண்ணம் காலங்கழிக்க வேண்டும். தூய சிந்தனை அவசியம். புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் மாசி மக விரதத்தை அனுஷ்டித்தால் புத்திரப்பேறு உண்டாகும் என்றுகூறப்படுகிறது.
அத்துடன், மதியம் உண்ணும் போது சிவனடியார் ஒருவருக்கு உணவு அளித்து உண்ணுதல் சாலச்சிறந்தது. மேலும் இந்தப் புண்ணிய புனித விரதம் பற்றிய பூர்வாங்க வரலாறு ஒன்றும் வழக்கிலிருக்கிறது. ஒருமுறை வருணபகவானுக்குப் பிரம்மகத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. அது அவரைச் கடலுக்கு உள்ளே கட்டிவைத்திருந்தது. இதையறிந்த தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.
அதனால் சிவபெருமான் திருவுள்ளம் மகிழ்ந்து எழுந்தருளி வந்து வருணபகவானின் கட்டையறுத்து அவரைப் பிரம்மகத்தி தோஷத்தினின்றும் விடுவித்தார். அந்த அருமையான நாள்தான் இந்த மாசி மகம். கடலில் இருந்து பிரமகத்தி தோஷத்தின்றும் விடுபட்ட வருணன் சிவபெருமானைப் பார்த்து ஐயனே தாங்கள் எனக்கு வரமளித்து பிரமகத்தி தோஷத்தினின்றும் விடுவித்து அபயமளித்த இந்த நல்ல நாளில் புனித நீராடித் தங்களை வழிபடும் சிவனடியார்கள் எல்லோரும் உலக பந்தத்திலிருந்து விடுபட்டு உய்வுபெற வேண்டும் என்று கூறிப் பணிந்து நின்றார்.
அது கேட்ட பரமசிவனும், அவ்வண்ணமே ஆகுக என வரம் அளித்து மறைந்தார். உலகிலேயே மிகச் சிறந்த இவ்விரதம் அனுஷ்டிப்பவர்கள் மாசி மகம் நன்னாளிலே தீர்த்தமாடிய பின்பு ஈர ஆடையுடன் சிவபெருமானை மும்முறை வலம் வந்து தம்முடைய வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்குமாறு பணிபுரிவார்கள்.
அது நிச்சயம் பூர்த்தியாகும். பிரகஸ்பதி எனப்படுகின்ற வியாழ பகவான் மக நட்சத்திரத்துடன் கூடிய கும்பராசிக்கும் செல்லும் போது மகாமகம் எனப்படுகின்ற புண்ணிய புனித தீர்த்த காலம் உண்டாகும். அதுவே மாம்மங்கம் எனப்படுகிறது. இந்தியாவிலே கும்பகோணத்தில் இந்த மாசிமக நன்னாள் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது.
கும்பமேளா என அழைக்கப்படும் இந்த சைவ விழா மனித வாழ்வில் பிரதான இடத்தை வகிக்கின்றது. பொதுவாக சிவபெருமானுக்குரிய விரதங்கள் அனுஷ்டிக்கப்படும் முறைகள் இறுக்கமாகவே இருக்கும். ஆனால் இந்த மாசி மக விரதம் மிகவும் இலகுவாக அனுஷ்டிக்கப்பெறும் ஒரு புனித நல்லவிரதம் ஆகும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சஷ்டி விரதம் இருப்பது எப்படி?
» சித்திரை விரதம் இருப்பது எப்படி?
» ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு விரதம் இருப்பது எப்படி?
» பங்குனி உத்திர விரதம் இருப்பது எப்படி?
» பங்குனி உத்திர விரதம் இருப்பது எப்படி?
» சித்திரை விரதம் இருப்பது எப்படி?
» ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு விரதம் இருப்பது எப்படி?
» பங்குனி உத்திர விரதம் இருப்பது எப்படி?
» பங்குனி உத்திர விரதம் இருப்பது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum