தீப தான விரதம்
Page 1 of 1
தீப தான விரதம்
தீப தான விரதம் : நல்லெண்ணெய் ஊற்றி சுடரொளி விளக்குத் தானம் செய்யின் சிறப்பான வாழ்வும், முக்தியும் பெறுவார். தீபத்திரியை தூண்டிய எலி : (கதை) மன்னன் சாருதர்மனின் மனைவி லலிதை. தினமும் அவள் விஷ்ணு ஆலயத்தில் தீபங்கள் ஏற்றி வந்தாள். மற்ற பெண்கள் அவளிடம் தீபதான விரதம் பற்றிக் கேட்க அவள் கூறலுற்றாள்.
மைத்திரேய முனிவர் சவ்வீரன் என்ற அரசனுக்குக் குருவாக இருந்தார். முனிவர் ஒருநாள் மன்னனிடம் விஷ்ணுவுக்கு ஓராலயம் எழுப்பவேண்டும் என்று கோரிட, அரசனும் உடனே அதற்காகப் பணியைத் தொடங்கினான். அந்த ஆலயத்தைச் சுற்றிலும் எலிகளும், பூனைகளும் இருந்தன. ஒரு எலி ஆலயக் கருவறையில் ஒரு வளையில் வசித்து வந்தது.
அது கீழே சிந்திக் கிடந்த படையல் பொருள்களை யாரும் இல்லாத சமயங்களில் இரவு நேரங்களில் தின்று வந்தது. ஒரு நாள் இரவு பூட்டப்பட்டிருந்த கருவறையில் ஒரு விளக்கில் எண்ணெய் குறைந்து சுடர் குறைந்தது. அப்போது அந்தச் சுண்டெலி தீபத்தின் திரியை வெளியில் தள்ளி ஒளிரச் செய்தது.
அதாவது ஆலயத்தில் அணைய இருந்த தீபத்தை ஒளிரச் செய்யும் கைங்கரியத்தைப் பலனேதும் வேண்டாமல் செய்தது. அதனால் அந்த எலி மரணமடைந்தவுடன் அடுத்த பிறவியில் விதர்ப்ப நாட்டு அரசன் குமாரத்தி லலிதையாகப் பிறந்தது என்று தன் முன் வரலாற்றைக் கூறினார். ஏகாதசி அன்று ஆலயத்தில் தீபம் ஏற்றுபவன் சொர்க்க வாசம் பெறுவான். அன்றிலிருந்து அனைவரும் ஆலயத்தில் தீபம் ஏற்றும் பணியைத் தொடங்கினர்.
பூக்கள்: தீபம் ஏற்றுவது போல ஸ்ரீஹரியை பலவித நறுமண மலர்கள் கொண்டு அர்ச்சித்து வழிபடலாம். பூசைக்குப் பயன்படும் மலர்களில் ஒவ்வொன்றிற்கும் ஒரு பலன் சொல்லப்படுகிறது. மாலதி மலர் மிகச்சிறந்தது. மருக்கொழுந்து ஆனந்த வாழ்வு தரும்.
மல்லிகை சகல பாவங்களையும் போக்கும். ஜாதி, மலயத்தி, குருக்கத்தி, அலரி, முட்செவ்வந்தி, தகனா, கர்ணீகாரம் ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்தால் வைகுந்த வாசம் அளிக்கும். தாமரை, கோதகி, குந்தம், அசோகம், திலகம், தருசமலர்கள் ஆகியன முக்தி அளிக்கும்.
சமீபத்திரன், பிருங்கராஜ புஷ்பம், தமாலம், கல்காரம், கருந்துளசி, பொன் துளசி ஆகியவற்றால் அர்ச்சிப்பவன் வைகுந்தத்தில் விஷ்ணுவின் பக்கத்திலேயே இருப்பான். கோகநதம், நூறுவில்லி மலர்மாலை, ரூபம், அர்ஜுனம், வகுளம், சிஞ்சுகம், மணி, கோகானம், சந்தியா, குசம், காசம் ஆகிய மலர்களின் அர்ச்சனை, பாபங்கள் நீக்கும், நெடுநாள் ஆனந்த வாழ்வு அளிக்கும், இறுதியில் மோக்ஷமும் தரும். இவை விஷ்ணு பூஜைக்கு உகந்தவை.
மணம் மிக்க பிரம்ம பத்மம், நிலத்தாமரை ஆகியவை கொண்டும் விஷ்ணுவை ஆராதிக்கலாம். தர்மராஜனை ஆராதிக்க உதவுபவை குதஜம், சால்மலி, சிலிசம் மந்தாரை, துஸ்துரம் ஆகியவை. பகவானைப் பல வண்ணமிகு, நறுமண மலர்களால் ஆராதிப்பதைக் காட்டிலும் சிறந்தது மானச புஷ்பங்கள் ஆகும். அதாவது, எட்டு வகை சிறந்த குணங்களே அந்த மானச மலர்கள்.
அவை : 1. ஜீவஹிம்சை செய்யாதிருத்தல். 2. தன் கட்டுப்பாடு. 3. உயிர்களிடம் அன்பு. 4. திருப்தியுடன் இருத்தல். 5. தெய்வ பக்தி. 6. பகவானைத் தியானித்தல். 7. வாய்மை. 8. பற்றற்றிருத்தல்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum