தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பங்குனி உத்திரத்தன்று விரத வழிபாடு முறை

Go down

பங்குனி உத்திரத்தன்று விரத வழிபாடு முறை Empty பங்குனி உத்திரத்தன்று விரத வழிபாடு முறை

Post  ishwarya Mon Apr 29, 2013 1:06 pm

பங்குனி உத்திரத்தன்று பகலில் ஒருவேளை மட்டும் சாப்பிடாமல் இருந்து, முருகனை வேண்டி விரதமிருந்து மாலையில் முருகனை வழிபட்டு, விரதத்தை பூர்த்தி செய்யலாம். தவிர, பெருமாள் கோயில்களுக்குச் சென்று சுவாமி, தாயாரையும், ஐயப்பன் மற்றும் கிராமதேவதையாக உள்ள சாஸ்தா கோயில்களுக்கும் சென்று வரலாம்.

மனமுருக பிரார்த்தித்தால் இறைவன் அருள் நிச்சயம் கிடைக்கும் என்பதே இந்த அனைத்து வழிபாடு களின் தாத்பர்யமாக இருக்கிறது. இவ்வாறு பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பங்குனி உத்திர தினத்தன்று விரதம் இருந்து வழிபடுவதும்,இல்லாதவர்களுக்கு தான,தர்மங்கள்,அன்னதான்ம் செய்வது,தண்ணீர்ப் பந்தல் அமைத்தல் போன்ற நற்காரியங்கள் செய்வதும் மிகவும் விசேஷமாக கூற்ப்படுகிற்து.

அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து,நற்செயல்கள் செய்வது எல்லா தடைகள்,தடங்கல்கள், துன்பங்கள்,இடர்ப்பாடுகளை நீக்கி வாழ்வில் வளமும் நலமும் சேர்த்து சகல ஜஸ்வர்யங்களையும் தரும். பங்குனி உத்திர விரதம் இருப்பதால் திருமணத்தடை நீங்கும். தம்பதியர் ஒற்றுமையாக இருப்பர். சிறந்த குழந்தைகள் பிறப்பர்.

மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. நாம் எவ்வாறு ஒரு சுப காரியத்தைச் செய்யும் போது நாள் நட்சத்திரம் பார்த்து செய்கிறோமோ அதுபோலத்தான் தெய்வங்களும் அவர்களது திருமணங்களை நல்ல நாட்களில் நடத்தி இருப்பர்.

அதன்படி, உத்திரத்திற்கு தெய்வங்களே சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு. அதாவது பார்வதி பரமேஸ்வரன், தெய்வயானை முருகன், ஆண்டாள் ரங்க மன்னார், மீனாட்சி சுந்தரேஸ்வரர் என பல தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில் தான் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

இதைவிடச் சிறப்பான மற்றொரு விஷயம், ராமாயணத்தில் வரும் தசரதச் சக்கரவர்த்தியின் நான்கு புதல்வர்களும் பங்குனி உத்திரத்தில்தான் தங்களது திருமண வாழ்க்கையில் நுழைந்துள்ளனர். தெய்வங்களின் திருமணம் மட்டுமல்லாது, பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் நடந்துள்ளது.

வள்ளியின் அவதாரமும், ஸ்ரீ ஐயப்பனின் அவதாரமும், அர்ஜூனன் தோன்றியதும் இந்த நந்நாளில்தான். தெய்வங்களெல்லாம் தேர்ந்தெடுத்து சிறப்பித்த இந்த பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று விரதம் இருப்பதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் உகந்த நாள் என்று கருதப்படுகிறது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum