தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆசை துடிக்குது, அம்மா தடுக்குது

Go down

ஆசை துடிக்குது, அம்மா தடுக்குது Empty ஆசை துடிக்குது, அம்மா தடுக்குது

Post  ishwarya Mon Apr 29, 2013 12:13 pm

ரிட்டையர்ட்மெண்ட் என்பது பொல்லாதது. அமிதாப்பச்சன் ரிட்டையர்ட்மெண்ட் சமயத்தில் தனது கோபக்கார இளைஞன் இமேஜ் எடுபடாமல் வயதுக்கேற்ற வேடங்களில் நடித்து மீண்டும் தன்னை சூப்பர் ஸ்டாராக தக்க வைத்துக் கொண்டார்.

மூன்று வருடத்துக்கு ஒரு படம் நடிப்பதால் ரஜினிக்கு ரிட்டையர்ட்மெண்ட் வயதிலும் வசூல் அள்ளுகிறது. பாவம் மலையாள சூப்பர் ஸ்டார்கள். ஒருகாலத்தில் வித்தியாசமான வேடங்களில் நடித்து கலக்கிய மம்முட்டிக்கும் மோகன்லாலுக்கும் கையறு நிலை.

சமீப வருடங்களில் இருவரும் சொல்லிக் கொள்கிற எந்தப் படமும் தரவில்லை. மோகன்லாலின் ரெட் வைன், லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் இரண்டும் தோல்வி. மம்முட்டியின் காமத் அண்ட் காமத் படுதோல்வி. லேட்டஸ்ட் இமானுவேல் பரவாயில்லை என்றாலும் வசூல் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை.

கடவுளின் சொந்த தேசம் இளைஞர்களின் கையில். இதன் காரணமாக மோகன்லால் தமிழில் விஜய்யுடனும், கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடனும் நடிக்க தயாராகிவிட்டார். அமீர்கானின் சத்யமேவ ஜெயதே போன்றொதொரு ஷோ மம்முட்டியின் திட்டம். சானலும் தயார். ஆனால் தடுப்பது அம்மா. மலையாள சினிமாவின் நடிகர்கள் சங்கம். நடிகர்கள் யாரும் தொலைக்காட்சியில் ஷோ நடத்தக் கூடாது என அம்மா தடை விதத்திருக்கிறது.

சினிமாவில் நடிப்பதா, தொலைக்காட்சிக்கு தாவுவதா? மலையாள சூப்பர் ஸ்டார் குழப்பத்தில் இருக்கிறார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum