மோதி விளையாடு
Page 1 of 1
மோதி விளையாடு
ஒரே நாள் ராத்திரிக்குள் ஓட்டாண்டியாக்கி தெருவோரம் வீசப்படுகிறார் வினய். அதுவரைக்கும் அனுபவித்த கோடீஸ்வர வாழ்க்கை அப்பளமாக நொறுங்கிப் போக, உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடவும் வேண்டியிருக்கிறது. ஓட்டாண்டியாக்கியது அப்பா. ஓட ஓட விரட்டுவது அப்பாவின் தொழில் முறை எதிரிகள். “ஏம்ப்பா இப்படியெல்லாம் நடக்குது?” என்று அப்பாவிடம் கேட்கும் வினய்க்கு கிடைக்கிற பதில், “அடேய், நான் உன்னோட அப்பாவே இல்லை. நீ என்னோட பினாமி மகன்” அப்பாவின் பதிலில் டப்பாவாகிப் போகிறார் வினய். கோடீஸ்வரர்களில் வாழ்க்கையில் நடக்கும் கோக்கு மாக்கான உறவுகள் பற்றிய கதை இது.
அந்த கோடீஸ்வர அப்பா கலாவன்மணி. வினய்யுடன் ஹவுஸ்மெட்டாக தங்கியிருக்கும் யுவாதான் அவரது ஒரே மகன். யுவாவின் உயிருக்கு ஆபத்து நேரக்கூடாது என்பதற்காகவே வெளியுலகத்திற்கு வினய்யை மகன் என்று சொல்லி வருகிறார் கலாபவன். போட்டுத்தள்ள வருபவர்கள், யுவாவை விட்டுவிட்டு வினய்யைதான் குறி வைப்பார்கள் என்பது மணியின் யூகம். எல்லாம் சரிதான். குறி தவறி இறந்தது யுவா ஆயிற்றே. இது புரியாத எதிரி கூட்டம் தொடர்ந்து வினய்க்கு குறி வைக்க, நான் உசிரோட இருக்கணும். அதுக்காகவாவது நான் உங்க பிள்ளை இல்லை என்று சொல்ல வற்புறுத்துகிறார் வினய். அவர் நினைத்தது நடந்ததா? க்ளைமாக்ஸ்.
வினய்க்கு மீண்டும் ஒரு ஜீவா மாதிரி கிடைத்திருக்கிறார் சரண். ஒவ்வொரு பிரேமையும் ஸ்டைலிஷ் ஆக உருவாக்கியிருப்பதும், காஜலுக்கும் இவருக்குமான காதலை ஜுகல் பந்தியாக பரிமாறியிருப்பதும், ஜீவ(£)னுள்ள டச்! தனது காரை விபத்துக்குள்ளாக்கிய காஜல் அந்த காருக்கான செலவை (சுமார் மூன்று லட்சம்) கழிக்க இவர் வீட்டில் வேலைக்காரியாக சேருகிறார். குலோப் ஜாமூனை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு விட்டத்தை பார்ப்பதா வேலை? உள்ளுக்குள் உருகினாலும் வெளியில் வெயிலாக கொதிக்கிறார் வினய். இவரை வெறுப்பேற்ற மயில்சாமியிடம் போனில் ஜொள்ளுகிறார் காஜல். (இது தியேட்டரையே கலகலப்பாக்கும் தனி ஆவர்த்தனம்)
காஜல் எண்பது லட்சம் கேட்கிறராமே? கொடுத்தாலும் தப்பில்லை. அவ்வளவு அழகு. துறுதுறுப்பு. கோடம்பாக்கத்தை தவிக்க விட்டுட்டு போயிராதம்மா…
அமுதமா நினைச்சுதான் தமிழ் பழகியிருக்கார் வினய். ஆனால், சுண்ணாம்பு அதிகமான வெற்றிலை பாக்காக மாறி நாக்கு, காதெல்லாம் ஒரே த(டி)ப்பு. ஆனாலும் விலகாத சாக்லெட் பாய் இமேஜ் ப்ளஸ்! இரண்டாவது ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் யுவா, துடிப்பான புது வரவு. வெல்கம் வாத்தியாரே!
ஒரு சீன் வந்தாலும், உலுக்கி எடுக்கும் மயில்சாமி இந்த படத்தில் ரகளை கட்டுகிறார். காஜல் அகர்வாலே தன்னை காதலிப்பதாக நினைத்து இவர் அடிக்கிற கூத்து, சரியான காமெடி ஃபெஸ்டிவெல். அதிலும் ஃபுல் மப்பில் ரயில் என்று நினைத்து மேல் பர்த்தில் படுத்துக் கொள்கிற அந்த காட்சி, உற்சாகம்ப்பா…! சந்தானத்தில் அலட்சிய பேச்சு ஒவ்வொன்றுக்கும் அதிரி புதிரியாகிறது தியேட்டர்.
“மொத்தத்துல உண்மையை சொல்லணும்னா நான் ஒரு பொய்” -வசனம் எஸ்.ராமகிருஷ்ணன் என்பதை உரக்கவே சொல்கின்றன ஒவ்வொரு வரிகளும். ஹரிஹரன்-லெஸ்லி பாடல்களில் எல்லாமே இனிமை.
இந்த மோதல் விளையாட்டில் சரணின் பலம் அம்பலம்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரபல நடிகர் திலகன் கார் மோதி இரு குழந்தைகள் பலி!
» ஓடி விளையாடு
» வாகனத்தை பன்றியின் மீது மோதி விட்டால் உடனடியாக விற்று விட வேண்டுமா
» நடிகர் சோஹைல் கான் கார் மோதி பெண் பலி – டிரைவர் கைது
» துப்பாக்கி நடிகையின் துள்ளி விளையாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum