அழகர் மலை
Page 1 of 1
அழகர் மலை
அண்ணன் நெப்போலியன் பன்னீர் செம்புன்னா, தம்பி ஆர்.கே குவார்ட்டர் பாட்டில். அண்ணனுக்கு வணக்கத்தையும், தம்பிக்கு சுணக்கத்தையும் காட்டுது ஊர். கல்யாணத்தை பண்ணி வச்சா திருந்துவார்னு நினைச்சு கடைமடை வரைக்கும் போராடி பார்க்கிற நெப்போலியனுக்கு, “அந்த குடிகாரனுக்கா? ஆள விடுங்க சாமீய்” என்று ஓடிப்போகிறது ஊர். நாளொரு ஃபுல்லும், பொழுதொரு ஃபைட்டுமாக காலத்தையும், காரையும் ஓட்டும் ஆர்கேவுக்கு மனசில மருதாணிய தடவிட்டு போறாரு பானு. இவர்களின் கல்யாணத்தை நிறுத்த அந்த ஊரின் இன்னொரு பெரிய மனிதரான லால் முயல, வெட்டு, குத்து, ரத்தம், கத்திக்கு பிறகு ஆர்கே ஆசை நிறைவேறுகிறது.
கொதிக்கிற எண்ணையிலே தண்ணி தெளிச்ச மாதிரி, சுரீர்னு போகுது கதை. இதிலே வடிவேலு ஆர்கேவின் காமெடி கலாட்டா முக்கால் வாசி படத்தை முனகவே விடாமல் தள்ளிக் கொண்டு போவது தனி இன்ட்ரஸ்ட்!
கூசாமல் பாட்டிலை திறந்து டீக்கடை பெஞ்சை ‘பார்’ ஆக்கி விளையாடும் ‘மாமன் மச்சான்ஸ்’ வடிவேலு ஆர்கே காமெடி சரவெடி. பின்னாலேயே ஆர்கே துணைக்கு வருவதாக நினைத்து வடிவேலு எகிறுவதும், பின் அடிவாங்கி முனகுவதும், ஆயிரம் முறை பார்த்தாலும் தெவிட்டாத இன்பம். ஒவ்வொரு இடத்திலேயும் வடிவேலுவை சிக்க வைத்துவிட்டு ஆர்.கே எஸ்கேப் ஆவது, எரிகிற சிரிப்பில் இன்னும் ரெண்டு ஜோக்ஸ் கொள்ளி.
ஆர்கேவின் நடிப்பில் நிறையவே மெச்சூரிட்டி. அடிதடி, வெட்டு குத்தெல்லாம் ஸ்டண்ட் மாஸ்டர் புண்ணியத்தில் வந்துவிடும். காமெடி? அதற்கு தனி திறமை வேண்டும். ஆர்.கேவுக்கு நிறையவே இருக்கிறது. இந்த ஊரை விட்டு போவதற்குள் தனக்கு நல்ல செய்தி வேணும்னு நினைக்கிற பானு கண்ணை திறந்தால் ஆர்.கே. கட் பண்ணினா டூயட் என்று ரசிகர்களை படுக்க வச்சு ஜாம் தடவினாலும், ஆர்கே. பானு காதல் எபிசோட், இனிக்கும் தேன் கூடு! “ஒரு வார்த்தையில ஒரு குடிகாரன திருத்திட்டீங்களே…” என்று பானு ஆச்சர்யப்படுகையில் தியேட்டரே குபீர்.
நெப்போலியனுக்கு அற்புதமான கேரக்டர். தம்பிக்காக பஞ்சாயத்தார் காலில் அவர் விழுவது திருப்பம். இவரும் லாலும் ஏன் காவி வேட்டி கட்டியிருக்கிறார்கள் என்பதற்கு மணிவண்ணன் தருகிற விளக்கம், கொடூரம்ய்யா…
இசைஞானியின் இசையில் கருகமணியே… பாடலும், அவரது டைட்டில் பாடலும் இனிமையோ இனிமை. வெளிநாடு போக மாட்டேன். இந்த மக்கள் போதும் என்று அவர் பாடியது யதார்த்தமாக இருக்கலாம். ஆனால், அர்த்தங்களில் ஆழம்.
அழகர் மலை -சிரிப்பு ‘வலை

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தேனூரும் அழகர் விழாக்கட்டமைப்பும்
» அழகர் கோயில்
» தேனூரும் அழகர் விழாக்கட்டமைப்பும்
» அழகர் கோயில்
» அழகர் கிள்ளைவிடு தூது
» அழகர் கோயில்
» தேனூரும் அழகர் விழாக்கட்டமைப்பும்
» அழகர் கோயில்
» அழகர் கிள்ளைவிடு தூது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum