தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆதவன்

Go down

ஆதவன்                                     Empty ஆதவன்

Post  ishwarya Mon Apr 29, 2013 11:32 am

‘ஈனப்பிறவிகளான’ வில்லன் கோஷ்டியுடன் வளர்ந்து தப்பு தண்டா பண்ணுகிற ஹீரோ, நீதிபதியை கொல்ல துப்பாக்கியோடு அவரது வீட்டுக்குள் நுழைகிறான். போகிற இடத்தில் சிறுவயதில் ஓடிப்போன மகனே நாம்தான் என்பதை அறிந்து அதே நீதிபதியை காப்பாற்றவும் துடிக்கிறான். ஆனால் விடாமல் துரத்துகிறது ஈனப்பிறவி கோஷ்டி. அவர்களிடமிருந்து அப்பாவை காப்பாற்றினானா என்பது க்ளைமாக்ஸ்.

நல்லவேளை, போகிற இடத்தில் வடிவேலு மாதிரி ஒரு வேலைக்காரர் இருந்தார். இல்லையென்றால்…? படத்தின் மூவாயிரத்து சொச்சம் மீட்டரிலும் வைகைப்புயலின் ராஜ்ஜியம்தான் கொடிகட்டி பறக்கிறது. (மிச்சத்தை ஸ்டண்ட் இயக்குனரும் நடன இயக்குனரும் கவனித்துக் கொள்கிறார்கள்) தனது மச்சான் சத்யனுக்கு பதிலாக வீட்டுக்குள் நுழைந்துவிடும் ஹீரோவை வெளியேற்ற இவர் பாடுபடுவதும், அது நடக்காமல் போகும் போதெல்லாம் அரற்றி அழுவதுமாக செம களேபரம். அதிலும், சரோஜாதேவியை அவர் கிண்டலடிக்கும் போதெல்லாம் தில்லானா பாடுகிறது தியேட்டர். ஒவ்வொரு முறை ஹீரோ நீதிபதியை கொல்லப் போகும்போதெல்லாம் பதறுகிற வடிவேலு, ஒருகட்டத்தில் தானே கொலை செய்ய ஐடியா கொடுத்துவிட்டு நாக்கை கடித்துக் கொள்கிறாரே, செம கிளாப்ஸ்…

கைகுலுக்க வேண்டிய இன்னொருவர் நம்ம சரோஜாதேவிதான். ‘அன்று வந்ததும் அதே நிலா’ பாட்டுக்கு அவர் காட்டும் அபிநயம், காலம் கடந்து கம்பீரமாக நிற்கும் அதிசயம்!

“சுட்ட பிறகு தலை எனக்குதான்” என்ற ஒரு டயலாக்கை சொல்லி சொல்லியே தியேட்டரை உலுக்கி எடுக்கிறார் மனேபாலா.

சந்தையிலே விற்கிற சர்பத் மாதிரியே கலர் கலராக வந்து போகிறார் நயன்தாரா. அவருக்கு போடப்பட்டிருக்கும் ஆயில் மேக்கப், ஆயுளுக்கும் மறக்காது சாமீய்…

அட! மறுபிறவி எடுத்திருக்கிறார் ஆனந்தபாபு. அந்த ஆட்டமும், ஃபைட்டுக்கான பலமும் கொஞ்சம் ஆச்சர்யப்படவே வைக்கிறது. முகத்தில் மட்டும் பொலிவு மிஸ்சிங். கரெக்ட் பண்ணுங்க, கலக்கலாம்…

ஊரெல்லாம் பேசப்பட்ட அந்த பத்து வயசு கெட்டப், செல்போன் ஸ்கிரீனில் பொறுத்தப்பட்ட சினிமா ஸ்கோப் படம். ஏமாற்றம்!

துள்ளாட்டம் போட்டிருக்கிறது ஹாரிஸ் ஜெயராஜின் இசை. அதிலும் ‘மாசி மாசி’ பாடல் இந்த வருடத்தின் சூப்பர் ஹிட்டாக அமையலாம். எக்கச்சக்க செலவு. எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரா.கணேஷ்.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் அழுவதில்லை!

-ஆர்.எஸ்.அந்தணன்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum