விநாயகரின் அருள் பெற வழிகள்
Page 1 of 1
விநாயகரின் அருள் பெற வழிகள்
மனதால் நினைத்தாலே ஓடி வந்து அருளும் முதன்மைக் கடவுள் விநாயகர். செவ்வாய் மற்றும் சனிக்கிழமை விநாயகருக்கு மிகவும் உகந்த நாட்கள். மஞ்சள் அரளி மலர் சாற்றி வணங்குதல் மிகவும் சிறந்தது. சதூர்த்தியன்று அருகம் புல்லை விநாயகருக்கு சாற்றி வழிபட்டால் வெற்றி என்பது உறுதி. அத்துடன் வலம்புரி விநாயகருடைய திருமேனியைச் சங்கடஹர சதுர்த்தியன்று அபிஷேக காலத்தில் வழிபடுமேயானால் நல்லருள் பெறுவது நிச்சயம்.
திருமணக்காலத்தை விரைவில் காண விரும்புபவர்கள் மஞ்சள் பிள்ளையாரை நாற்பத்தெட்டு நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடிவைத்து பூஜிக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள வறுமையை அறவே அகற்ற வேண்டுமாயின் வெள்ளெருக்குத்திரி போட்டு நெய் தீபம் அகலில் ஏற்றி தர வேண்டும். அதே நேரத்தில் பீடைகள் முற்றிலும் விலகுவதற்கு நவக்கிர தோஷமுள்ளவர்கள் விநாயகருக்குப் பின்புறம் நெய் தீபம் ஏற்றி வர வேண்டும்.
சகல சதுர்த்தி தினத்தில் குழந்தைகள் பெயரில் விநாயகர் சந்நிதியில் அர்ச்சனை செய்து பென்சில், நோட்டுகள் உறவினர் அல்லாத குழந்தைகளுக்கு இனிப்பும் தானம் தந்தால் வீட்டு குழந்தைகளுக்கு கல்விச் செல்வம் மிகுந்து வரும். குழந்தை வரம் வேண்டுவோர் சதூர்த்தியன்று அரிசி நெய்யைச் சாதமாக்கி பிள்ளையார் எறும்புப்புற்றில் பிள்ளையாக பாவித்து தூவினால் விநாயகரின் அருள் கிட்டும்.
நாக்கு பிறழாத குழந்தைகளுக்கு தமிழ் மாதத்தில் 3-வது செவ்வாயன்று விநாயகரை வழிபட்டு இனிப்பு, பழங்களை படைத்து தானமாகத் தந்தால் உடனே தகுந்த பலன் கிடைக்கும். இவ்வாறு பல்வேறு விதங்களில் செயல்பட்டால் விநாயகரின் அருளைப் பெறுவது மிகவும் சுலபம் என்பதை மனதில் கொண்டு விநாயகரை வழிபட்டு வந்தால் சுபிட்சம் எப்போதும் கிடைக்கும்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» ஒவ்வொரு தெய்வங்களுக்கும் வாகனங்கள் உள்ளது. அதில் தான் அவை பவனி வரும். பஞ்ச மூர்த்தி உலா சிவாலயங்களில் நடைபெறும் பொழுது, ஒரு சப்பரத்தின் மீது ரிஷப வாகனத்தை வைத்து சுவாமி, அம்மனை ஜோடித்து வைப்பர். மூஞ்சுறு வாகனத்தின் மீது விநாயகரின் உற்சவ விக்ரத்தை வைத்து
» விநாயகரிடம் அருள் பெறும் வழிகள்
» விநாயகரின் வடிவங்கள்
» விநாயகரின் வேறு பெயர்கள்
» மனஅழுத்தத்தைப் போக்கும் வழிகள்(டென்ஷனைப் போக்கம் வழிகள்)
» விநாயகரிடம் அருள் பெறும் வழிகள்
» விநாயகரின் வடிவங்கள்
» விநாயகரின் வேறு பெயர்கள்
» மனஅழுத்தத்தைப் போக்கும் வழிகள்(டென்ஷனைப் போக்கம் வழிகள்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum