2009ல் தமிழ் திரையுலகம்: மறக்க முடியாத அடிகள்
Page 1 of 1

புத்தாண்டு பிறக்கப் போகும் இந்தத் தருணத்தில் தமிழ் சினிமா பற்றிய ஒரு பின்னோக்கிய பார்வையாக சில விஷயங்களை இங்கே பதிவு செய்கிறோம்.
இந்த ஆண்டும் வழக்கம் போல கோடம்பாக்கம் வெற்றிகளை விட தோல்விகளையே அதிகம் சந்தித்தது. ஆனால் பிற ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் வெற்றிப் படங்கள் இந்த ஆண்டு அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு படத் தயாரிப்பின் அளவு அதிகரித்துவிட்டதும்கூட காரணமாக இருக்கலாம்.
இந்த ஆண்டு தமிழ் சினிமா சந்தித்த சில தோல்விகளிலிருந்து ஆரம்பிக்கலாம்…
2009ல் மட்டும் தோல்விப் படங்களால் தமிழ் சினிவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ரூ 150 கோடிக்கு மேல்.
வில்லு:
ஆண்டின் முதல் தோல்வியே விஜய் படத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது. வெற்றிப் படங்களைப் பட்டியல் போடுவதுதான் சிரமம். காரணம் அவற்றின் சொற்ப எண்ணிக்கை. தோல்விப் படங்களுக்கென்ன… ஏராளமாய் கிடக்கிறது!
இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே மாபெரும் தோல்விப்படம் என்ற பெயரினைச் சம்பாதித்துக் கொண்டது விஜய் நடித்த வில்லு. இந்திப் படத்தின் தழுவலாக வந்த இந்தப் படத்தை பிரபு தேவா இயக்கியிருந்தார்.
ஐங்கரன் தயாரித்த இந்தப் படம் ஒட்டுமொத்தமாக பெரும் இழப்பைத் தந்தது.
தோரணை:
விஷாலுக்கு செமத்தியான சறுக்கலாக அமைந்த படம் தோரணை. ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என இதில் அவர் வைத்த அகலக் கால்தான் இந்த சறுக்கலுக்குக் காரணம்.
ஆனந்தத் தாண்டவம்:
சுஜாதாவின் நாவலைப் படமாக்குகிறார்கள் என்பதால் பெரும் எதிர்பார்ப்போடு இந்தப் படத்துக்குப் போனார்கள். ஆனால் சரியான அறுவையாக எடுத்து வைத்திருந்தார் காந்தி கிருஷ்ணா. நாயகி வேடத்தில் நடித்த தமன்னா, சற்றும் பொருத்தமில்லாமல் எரிச்சலூட்ட, படம் பப்படமாகிவிட்டது. நஷ்டம் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு.
சர்வம்:
பில்லா ரீமேக்கில் வெற்றியை ருசித்த விஷ்ணுவர்தன் தந்த மிகப்பெரிய தோல்விப் படம் இந்த சர்வம். இந்தப் படத்துக்குப் பிறகுதான் எழ முடியாத அடி வாங்கியது ஐங்கரன் நிறுவனம்.
பொக்கிஷம்:
ரூ.10 கோடி பட்ஜெட்டில் சேரன் எழுதிய லவ் லெட்டர் இந்தப் படம். கொஞ்சம் கூட சுவாரஸ்யமே இல்லாத
ஒரு லவ் லெட்டருக்கு இவ்வளவு செலவா என்ற கடுப்பில் ரசிகர்கள் கிழித்துப் போட்ட லெட்டர் இது!
1977:
சரத் குமாரின் இந்தப் படத்துக்கு பட்ஜெட் ரூ 15 கோடி. குழந்தைத்தனமான கிராபிக்ஸ், அதைவிட மோசமான திரைக்கதை எல்லாம் சேர்ந்து இந்தப் படத்தை தயாரித்து இயக்கிய தினேஷை கடனாளியாக்கியதுதான் மிச்சம்.
மரியாதை:
விக்ரமனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் சுக்கு நூறாக உடைத்தெறிந்த படம். விஜய்காந்த் இனியும் நடிக்க வேண்டுமா என ரசிகர்கள் கேட்கும் அளவுக்குப் போன நிலைமை, இந்தப் படத்தால்.
யோகி:
அமீர் முதல்முறையாக நாயகன் வேஷம் போட்ட படம் இது. ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கும், இந்தப் படத்தை அமீர்- சுப்பிரமணிய சிவா கொடுத்த விதத்துக்கும் சரியான மேட்ச் இல்லாததால் தோல்வியைத் தழுவிய படம். ஆனாலும் ஒரு நடிகராக இந்தப் படத்தில் ஜெயித்தார் அமீர்.
ஜெகன்மோகினி:
70களில் வந்த சூப்பர் ஹிட் ஜெகன் மோகினியை, ப்ளாப் மோகினியாக என்.கே.விஸ்வநாதன் காட்டிய படம் இது. இசைக்கு இளையராஜா, மசாலாவுக்கு நமீதா என இருந்தும், நல்ல திரைக்கதை இல்லாததால் தோற்றுப் போன படம் இது.
ஆதவன்:
தயாரிப்பாளர் தரப்பில் நல்ல லாபம் என்றும், விநியோகஸ்தர்கள் தரப்பில் சுமார் என்றும், ரசிகர்கள் தரப்பில் மொக்கை என்றும் விதவிதமான விமர்சனங்களைக் கிளப்பிய உதயநிதியின் படம் இது. அளவுக்கதிகமான எதிர்பார்ப்பே வினையாகிப் போனது இந்தப் படத்திலும்.
இந்த 10 படங்கள்தானா தோல்வி அடைந்தவை என்றால்… இல்லை. தீ, நினைத்தாலே இனிக்கும், பெருமாள், வெடிகுண்டு முருகேசன்… என இந்தப் பட்டியல் மிகப் பெரியது. இங்கே நாம் தந்திருப்பவை, பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பி டமாரென்று உடைந்த சில சோப்புக் குமிழிகள்தான்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மறக்க முடியாத மனிதர்கள்
» மறக்க முடியாத திருமதி செல்வம்
» மறக்க முடியாத மனிதர்கள்
» மறக்க முடியாத மனிதர்கள்
» மறக்க முடியாத மனிதர்கள்
» மறக்க முடியாத திருமதி செல்வம்
» மறக்க முடியாத மனிதர்கள்
» மறக்க முடியாத மனிதர்கள்
» மறக்க முடியாத மனிதர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum