கொலு வைப்பது எப்போது?
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
கொலு வைப்பது எப்போது?
இந்த ஆண்டு பிரதமை திதி முந்தின நாளே அதாவது 15-ந் தேதி திங்கட்கிழமை மாலை 6-27 மணிக்கு தொடங்கி விடுகிறது. எனவே அன்றே கொலுவுக்கான ஏற்பாடுகளை செய்து விடலாம். அன்று வீட்டை சுத்தம் செய்து வைத்து விடவும், மறுநாள் காலை செவ்வாய்க்கிழமை காலையில் பூஜையை தொடங்கி விடலாம்.
அன்று காலை 7-45 மணி முதல் 8-45 மணி வரை நல்ல நேரம். அதை விட்டால் மாலை 4-45 முதல் 5-45 மணி வரை நல்ல நேரம். காலையில் பூஜையை தொடங்கி இரவில் பதார்த்தங்கள் படைத்து வணங்கலாம். விழா கொண்டாடப்படும் ஒன்பது நாட்களில் முதல் மூன்று தினங்கள் துர்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வணங்குகிறார்கள்.
இந்த ஆண்டு எட்டு நாட்களே வருவதால் முதல் நாள் காலை, மாலை என்று இரண்டு பூஜைகளை நடத்தலாம். ஆயுத பூஜை நாளான 23-ந் தேதி செவ்வாய்கிழமை காலை 7-45 மணி முதல் 8-45 மணி வரை நல்ல நேரம். அதை விட்டால் 4-45 முதல் 5-45 மணி வரை நல்ல நேரம். இந்த நேரத்தில் ஆயுத பூஜை நடத்தலாம்.
10-45 மணி வரையிலும், 7-30 மணி முதல் 8-30 மணி வரை கவுரி நல்ல நேரம். அந்த நேரத்திலும் பூஜை நடத்தலாம். வீட்டில் கொலு வைக்க விரும்புபவர்கள் மரச்சட்டங்கள் மூலம் அடுக்குகள் அமைக்கலாம். இல்லை என்றால் சிறிய பெரிய அளவுகளில் பெஞ்சுகளை கொண்டு அமைக்கலாம். 3,5,7,9 என ஒற்றை படை எண்ணில்தான் அடுக்குகள் அமைக்க வேண்டும்.
இதில் சாமி சிலைகளையும், அழகான பொம்மைகளையும் வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு என்னென்ன அம்சங்கள் உண்டோ அவைகளையும் பொம்மைகளாக கொலுவில் வைக்கலாம். பொம்மைகளின் எண்ணிக்கையை ஒற்றைபடையில் வைக்க வேண்டும்.
நவராத்திரி நாட்களில் விரதம் இருந்து வழிபட்டால் பல்வேறு நன்ëமைகள் கிடைக்கப் பெறலாம். தடைபட்டு வந்த திருமணம் நடந்தேறும். நல்ல வரனாகவும் இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நல்ல வாழ்க்கை அமையும். எண்ணிய காரியம் இனிதே நிறைவேறும். செல்வம் பெருகும். வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்.
இந்த நாட்களில் முறைபடி பூஜை செய்து, நவராத்திரிக்கு மறுநாளான விஜய தசமி அன்று ஒரு காரியத்தை தொடங்கினால் அது வெற்றிகரமாக முடிந்து நன்மை பயக்கும். இவ்வளவு சிறப்பான நாளில் (விஜய தசமி) புதிய பயிற்சியை மேற்கொள்ளலாம். புதிய தொழிலை தொடங்கலாம். குழந்தைகளுக்கு முதன்முதலில் கல்வி கற்றுக்கொடுக்கலாம்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» கொலு வைக்க சில குறிப்புகள்
» கொலு வைப்பது எப்போது?
» கொலு டிப்ஸ்
» கொலு டிப்ஸ்
» கொலு வைப்பதற்கான விதிமுறைகள்
» கொலு வைப்பது எப்போது?
» கொலு டிப்ஸ்
» கொலு டிப்ஸ்
» கொலு வைப்பதற்கான விதிமுறைகள்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum