இன்டர்வியூவில் வெற்றி பெற....
Page 1 of 1
இன்டர்வியூவில் வெற்றி பெற....
இன்டர்வியூவிற்கு செல்லும் இடத்தில் உங்கள் வாகனத்தை நிறுத்தும்போதே தன்னம்பிக்கைத் தோற்றம் காட்டுங்கள். யாராவது உங்களைக் கவனித்துக்கொண்டிருக்கலாம். பலநேரங்களில், `பார்க்கிங்' பகுதியில் இருந்தே இன்டர்வியூ தொடங்கிவிடுகிறது. வரவேற்பறையில் உட்கார வேண்டாம். நின்று கொண்டிருங்கள்.
அது உங்களைத் தன்னம்பிக்கையானவராகக் காட்டும். நேர்முகத்துக்காக காத்திருக்கும்போது கையில் `லேப்டாப்' மாதிரி ஏதாவது ஒன்றில் ஆழ்ந்திருங்கள். நேர்முகத்துக்கு அழைக்கப்படுகையில், `இதோ ஒரு நொடியில் முடிச்சுடறேன்' என்று அணைத்துவிட்டு எழுந்து செல்லுங்கள். சும்மா `தேமே' என்று இருக்க வேண்டாம்.
நேர்முகத் தேர்வு அறை நோக்கிச் செல்கையில் ஒரே சீரான வேகத்தில் நடங்கள். வேகம் சீரற்று இருப்பதாகத் தோன்றினால், இன்டர்வி அறைக்கு முன் ஒரு கணம் நின்று நிதானப்படுத்திக் கொள்ளுங்கள். நேர்முகத் தேர்வாளர்களுடன் சரியான விதத்தில் கைகுலுக்குங்கள். அவர்களை நெருங்கும்போதே குலுக்குவதற்காகக் கையை உயர்த்துங்கள். தள்ளுவதைப் போல கையை நீட்டாதீர்கள்.
எதிராளியின் அதே அழுத்தத்தைக் கொடுங்கள். கையை நேரே வைத்திருங்கள். (கை கீழ்ப்புறமாகப் பார்த்த மாதிரி இருப்பது ஆதிக்கத்தையும், மேல்புறமாகப் பார்த்தவாறு இருப்பது தாழ்மையையும் காட்டும்.) உங்கள் நேர்முகத் தேர்வாளரை 45 டிகிரி கோணத்தில் பாருங்கள்.
நேருக்கு நேராகப் பார்ப்பது, மோதல் பாவத்தைக் காட்டும். கைகளைப் பற்றிக் கொண்டிருப்பது, உங்களின் பாதுகாப்பின்மையை எடுத்துக்காட்டும். கைகளை குறுக்காகப் போடுவது, நீங்கள் அமுக்கமானவர் என்பதன் அடையாளம். இரு கை விரல்களையும் ஒன்றோடு ஒன்று அழுத்தியவாறு பேசலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இன்டர்வியூவில் நீங்களும் வெற்றி பெறலாம்
» வெற்றி மேல் வெற்றி
» வெற்றி மீது வெற்றி வர
» வெற்றி மீது வெற்றி வர
» வெற்றி வெற்றி
» வெற்றி மேல் வெற்றி
» வெற்றி மீது வெற்றி வர
» வெற்றி மீது வெற்றி வர
» வெற்றி வெற்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum