அதை’ தியேட்டரிலேயே விட்டு விடுங்கள்-அஜீத்
Page 1 of 1

படத்தின் தான் புகை பிடிக்கும் காட்சியை ரசிகர்கள் பின்பற்ற வேண்டாம் என நடிகர் அஜீத் மறைமுகமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அஜீத் நடித்துள்ள அசல் படம் நாளை வெளியாகிறது. இந்தப் படத்தில் அஜீத் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் உள்ளன. அதை எதிர்த்து பாமகவினர் போராட்டம் நடத்தினர்.
மேலும் இந்தப் போராட்டத்தையடுத்து அஜீத் புகை பிடிக்கும் காட்சி அடங்கிய பேனர்களை துணி போட்டு மறைத்துள்ளனர் திரையரங்கு உரிமையாளர்கள்.
இந்த விவகாரத்தில் அஜீ்த்துக்கு பாமக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி கடிதம் எழுத, அவருக்கு படத்தின் தயாரிப்பாளரான பிரபு பதில் கடிதமும் அனுப்பினார்.
இந் நிலையில் அஜீத், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லக்கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறேன். வாழ்வில் எதுவும் நிரந்தரம் இல்லை. சினிமா தவிர இன்னொரு வாழ்க்கையும் இருக்கிறது. அதனால் எந்த விஷயத்திலும் நான் ஒதுங்கியே செல்கிறேன்.
ரசிகர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்கிறேன். சினிமாவையும் நிஜ வாழ்க்கையையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். சினிமாவில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் பின்பற்ற வேண்டும்.
மற்றபடி அசல் படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. இயக்குனர் சரணுடன் சேர்ந்து பணியாற்றினேன். அவர் எனக்கு அங்கீகாரம் கொடுத்து டைட்டில் கார்டில் இணை இயக்குர் மற்றும் கதை, திரைக்கதை, வசனத்தில் ஒத்துழைப்பு என என் பெயரை போட்டுள்ளார். இதற்காக சரண் மற்றும் சிவாஜி புரொடக்ஷன்சுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
இதற்கு முன்பும் சில படங்களில் உதவி இயக்குநர் போல் வேலை செய்து இருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு ஈடுபாடுடன் செய்ததில்லை. ஆனால் இதை வைத்து நான் இயக்குநராக மாறுவேன் என்று எண்ண வேண்டாம். அப்படி எந்த திட்டமும் இல்லை.
நான் 48 படங்களில் நடித்துவிட்டேன். அசல் என்னுடைய 49-வது படம். மற்ற 48 தயாரிப்பாளர்களும் கவனித்ததை விட, சிவாஜி புரொடக்ஷன்ஸ் ராம்குமார், பிரபு இருவரும் ஒருபடி மேலாக என்னை நன்றாக கவனித்துக் கொண்டார்கள். அந்த குடும்பத்தின் நல்ல மனதுக்காக, அசல் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
இனி எனது ஒவ்வொரு படத்திலும் டைட்டில் கார்டிலும் ”நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துச்செல்லுங்கள், மற்றவற்றை தியேட்டரிலேயே விட்டு விடுங்கள்” என்ற வாசகம் இடம் பெறும்.
நடிகர்களுக்கு அரசியல் தேவையா?
எனக்கு அரசியலே வேண்டாம். நிம்மதியாக படங்களில் நடித்தால் போதும். என் படங்களை தேர்தலில் ஜெயித்தவர்களும் பார்க்க வேண்டும்… தோற்றவர்களும் பார்க்க வேண்டும். தேர்தலில் ஜெயித்தவர்கள் சந்தோஷத்துக்காகவும், தோற்றவர்கள் ஆறுதலுக்காகவும் பார்க்க வேண்டும்.
மகள் எப்படி இருக்கிறாள்?
அவளுக்கு இப்போது 2 வயதாகிறது. நன்றாக ஓடி ஆடி விளையாடுகிறாள். எனக்கு இப்பொழுதெல்லாம் பொழுதுபோவது, அவளால்தான்…, என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது – தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத்
» கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்
» வழி விடுங்கள்
» மொட்டுக்களை மலர விடுங்கள்
» கோபத்தை மறந்து விடுங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum