ஜோதி வடிவில் பெருமாள்
Page 1 of 1
ஜோதி வடிவில் பெருமாள்
ஜோதி வடிவில் பெருமாள்
பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கும் போது சுவாமி அவ்வாசல் வழியாக வெளியே வருவது வழக்கம். ஆனால், சிவத்தலமான திருவண்ணாமலையில் ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்க வாசல் கடக்கிறார். சிவன் சன்னதிக்கு பின்புறம் பாமா, ருக்மணியுடன் வேணு கோபாலர் சன்னதி இருக்கிறது.
இவர் அருகில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் இருக்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில், இவரது சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி பூஜிக்கின்றனர். அதன் பின்பு, அத்தீபத்தைப் பெருமாளாக கருதி, பிரகாரத்திலுள்ள "வைகுண்ட வாசல்'' வழியே கொண்டு வருவர், பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.
ஆஞ்ச நேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது வழக்கம். ஆனால், இத்தலத்திலுள்ள விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை விநாயகர், வதம் செய்த போது அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக் கொண்டார்.
இதன் அடிப்படையில் சித்திரை மாதப்பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்தும் வைபவம் நடக்கும். இவரைத் தவிர யானை திறை கொண்ட விநாயகர் தனி சன்னதில் இருக்கிறார்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» வாழை வடிவில் சப்த கன்னிகள்
» பெண் வடிவில் விநாயகர்
» தெருக்கூத்து வடிவில் ஷேக்ஸ்பியரின் மேக்பத்
» கவிதை வடிவில் காமராஜர் வரலாறு
» சிறுகதை வடிவில் கம்ப்யூட்டர் பிரச்னைகளுக்குத் தீர்வு
» பெண் வடிவில் விநாயகர்
» தெருக்கூத்து வடிவில் ஷேக்ஸ்பியரின் மேக்பத்
» கவிதை வடிவில் காமராஜர் வரலாறு
» சிறுகதை வடிவில் கம்ப்யூட்டர் பிரச்னைகளுக்குத் தீர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum