வாழ்க்கையை பாதிக்கும் பாய்பிரண்டுகள்
Page 1 of 1
வாழ்க்கையை பாதிக்கும் பாய்பிரண்டுகள்
குடும்ப வாழ்க்கையில் தம்பதிகளுக்குள் ஏற்படும் பலவீனங்களைப் புரிந்து கொண்டு `ப்ளாக் மெயில்' செய்யும் பாய்பிரண்டுகளும் இருக்கவே செய்கிறார்கள். பணத்தை வாரி இறைத்து பெண்களை வளைக்கும் பாய்பிரண்டுகளும் பெருகி வருகிறார்கள். வெறும் பொழுதுபோக்கிற்காக பழகும் பாய்பிரண்டுகளும் அனேகம்.
நல்ல நட்புடன் இருப்பவர்கள் கொஞ்சமே கொஞ்சப்பேர் தான். மனைவி இயல்பாகவே தன் பாய்பிரண்டை கணவனிடம் அறிமுகப்படுத்தினாலும், அவர்களுடன் பழகநேர்ந்த தருணங்களை நினைவுபடுத்தினாலும் கணவருக்கு உள்ளுர சந்தேகம் வலுத்துக் கொண்டே போகிறது.
இதற்குப்பிறகு கணவன்-மனைவிக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், முதலில் கணவன் ஆரம்பிப்பது பாய்பிரண்ட் பற்றிய பேச்சைத்தான். அடிக்கடி நடக்கும் இதுபோன்ற பிரச்சினை நேரங்களில் எல்லாம் கூசாமல் மனைவி மீது சந்தேகஅம்பை வீசி விடுகிறான் கணவன். இதனால் ஏராளமான பெண்களின் வாழ்க்கை பாழாகி இருக்கிறது. இப்படிப்பட்ட சந்தேகப் பிரச்சினைகளால் தகராறு ஏற்பட்டு விவாகரத்துக்குச் செல்பவர்கள்தான் ஏராளம்.
எனவே ஆண்-பெண் நட்பு என்பது நிச்சயம் எல்லைக்குட்பட்டது என்பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும். அந்த எல்லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சினைகளையும், தொல்லைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இதயத்தை பாதிக்கும் காரணிகள் மூளையையும் பாதிக்கும்!
» இல்லற வாழ்க்கையை உற்சாகப்படுத்தும் யோகாசனங்கள்!
» வாழ்க்கையை வளமாக்கும் சிறுகதைகள்-2
» வாழ்க்கையை வளமாக்கும் எண்ணங்கள்
» கசந்த வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா?
» இல்லற வாழ்க்கையை உற்சாகப்படுத்தும் யோகாசனங்கள்!
» வாழ்க்கையை வளமாக்கும் சிறுகதைகள்-2
» வாழ்க்கையை வளமாக்கும் எண்ணங்கள்
» கசந்த வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum