வம்பு பேசுவது உடலுக்கு நல்லது!
Page 1 of 1
வம்பு பேசுவது உடலுக்கு நல்லது!
தலைப்பைப் பார்த்ததுமே சட்டென ஒரு ஆச்சரிய அதிர்ச்சி உங்களைத் தாக்கும். ஆனால் விஞ்ஞான ரீதியாக இது உண்மைதான் என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள். வாய் இருப்பது பேசுவதற்கு மட்டுமே என்று நினைப்பவர்கள் எதையாவது பேசிக் கொண்டே இருப்பது வழக்கம்.
வம்பு பேசுவதில் அப்படி என்ன தான் சுவாரசியம் இருக்க முடியும்? உலகெங்கிலும் உள்ள வம்பு பேசுவோர் கணக்கெடுப்பில் ஆண்களைக் காட்டிலும் அதிக வம்பு பேசுபவர்கள் பெண்கள் தான் என பட்டவர்த்தனமாக அறிவித்து விட்டார்கள். ஆண்கள் வம்பு பேசுவதில்லையா? அவர்களும் தான் பேசுகிறார்கள்.
ஆனால் அதை சிறிது நேரத்தில் விட்டு விடுகிறார்கள். பெண்கள் விஷயம்அப்படியல்ல. அவர்கள் பேசுவதோடு நில்லாமல் விஷயத்தை வேகமாக வெளியிடுவதிலும் கில்லாடிகள். ஒருவர் பேசும் விஷயம் வேறு ஒருவரிடம் வரும் போது அது அவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் மாற்றப்பட்டு வேறு வடிவத்தில் வெளிவருகிறது.
முடிவில் உண்மைக்கு முற்றிலும் புறம்பான ஒரு விஷயத்தை ஆளாளுக்கு பகிர்ந்து கொண்டு வம்பை வளர்க்கிறார்கள். வம்பு என்பது ஒருவரோடு முடிந்து விடும் சமாசாரம் அல்ல. அது சம்பந்தப்பட்ட அனைவரையும் பாதிக்கிறது என்ற உண்மை மெதுவாகத் தான் புரிய வரும். சில நேரங்களில் விளையாட்டாக பேசும் விஷயம் கூட விபரீதமாக மாறிவிடுவதும் உண்டு.
ஒரு சிறு விஷயத்தை அதீத கற்பனைகளுடன் இணைத்து அதை நிஜம் போல உருவகப்படுத்தி பேசுவதும், பேச்சின் தீவிரம் தெரியாமல் பேசுவதும், வம்பு பேசுவோரின் குணம். அவர்களுக்கு இது ஒரு வழக்கமாகவே மாறிவிடுவதால், இதன் விளைவும் புரியாது.
விஞ்ஞானரீதியாக பார்க்கும்போது மனிதர்கள் உடலில் உற்பத்தியாகும் "என்டோர்பின்'' என்ற ரசாயனம் இவர்களுடைய இந்த செயலுக்கு காரணமாகிறது. இது அவர்களை மூளையைத் தூண்டி, விஷயங்களை வெளியே கொட்ட வைக்கிறது. அதனால் மற்றவர்களுக்கு ஏற்படும் உணர்வு மாற்றத்தை கண்டு ரசிக்கிறது.
இது ஓர் ஆர்வக் கோளாறு. இந்த ரசாயனம் பெண்களிடமே அதிகம் சுரப்பதால் அவர்கள் ரகசியம் பேசவும், வம்பு வளர்க்கவும் ஆசைப்படுகிறார்கள். வெளிப்படையாக பார்க்கும் போது இது ஒரு தவறான விஷயமாகப்பட்டாலும், இந்த ரசாயனம் பெண்களுக்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறதாம்.
அது மட்டுமல்ல, வம்பு பேசுபவர்கள் மற்றவர்களை விட அதிக விழிப்புணர்வுடன் இருப்பதாகவும் ஆய்வு கூறுகிறது. அக்கம்பக்கத்தை கூர்ந்து கவனிப்பவராகவும், சுற்றி நடப்பதை புரிந்து கொள்பவராகவும் இருக்கிறார்கள். பெண்கள் தங்கள் அறிவை வளப்படுத்திக் கொள்ள எடுத்துக் கொள்ளும் முயற்சியே வம்பு.
இதன் ஆரம்பம் சரியாக இருந்தாலும் முடிவு விபரீதமாகி விடுகிறது. பொதுவாக நமக்குத் தெரிந்த விஷயங்களை மற்றவரிடம் விவரிப்பது அறிவு வளர்ச்சியை பெருக்கும். அந்த வகையில் பெண்கள் அறிவு வளர்ச்சிக்கு இந்த ரசாயனம் பயன்படுகிறது. இதை முறைப்படுத்துவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.
ஒரு பெண் ஒரு நாளைக்கு இருபதாயிரம் சொற்களை பேசினால், ஆண்கள் ஏழாயிரம் சொற்களை தான் பேசுகிறார்கள். பெண்கள் அதிகம் பேசுவது அவர்களுடைய ஹார்மோன்களை அதிகரிக்கும் வாய்ப்பாக இருக்கிறது. இது அவர்களுடைய குரல் வளத்தையும் மொழிவளத்தையும் பெருக்குகிறது. இது தவறாக திசை மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
கூடுமான வரை மற்றவரைப் பற்றி பேசுவதை தவிர்க்கலாம். வீட்டு விஷயங்களை மற்றவர்களிடம் பேசுவது ஆபத்து என பெரும்பாலான பெண்கள் உணர்வதில்லை. அதுவும் பொது இடத்தில் பேசுவது அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பது அவர்களுக்கு தெரியாததல்ல.
இருந்தாலும் பேச்சின் சுவாரசியத்தில் இதையெல்லாம் சிந்திக்க மறந்து விடுகிறார்கள். பெண்கள் பேசும் வம்பிற்கும் ஆண்கள் பேசும் வம்பிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஆண்கள் அரசியல் வம்புகளையே அதிகம் பேசுவார்கள். உடன் பணிபுரியும் பெண்களை பற்றியும், டெக்னிகலான விஷயங்களை குறித்து பேசுவதிலும் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.
பெண்கள், சுற்றியிருக்கும் நபர்களைப் பற்றியும் தங்கள் குடும்பத்தைப் பற்றியும் பிள்ளைகள் பற்றியும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நகைகள், ஆபரணங்கள் உடைகளைப் பற்றியும் அதிகம் பேசுகிறார்கள். இது தான் அவர்களுக்கு சுவாரசியம். ஆண்கள் எப்போதும் பெண்களை விட மேதாவிகள் என்று காட்டிக் கொள்வதில் பிரியம் கொண்டவர்கள்.
அவர்களுடைய பேச்சு முழுவதும் பெண்களுக்கு புரியாத விதத்தில் அமைய வேண்டும் என்று சிரத்தை எடுத்துக் கொண்டு பேசுவார்கள். நல்ல விஷயங்களை அதிகம் பேசுவதால் சமூகத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் சேவை செய்பவர்களாக மாறுகிறார்கள். மனிதன் பேசும் பிராணி என்கிறார், அறிஞர் ஒருவர். பேசாமல் இருக்க முடியாது.
இருக்கவும் கூடாது. வம்பு பேசுவதை மட்டும் தவிர்த்து வளமான விஷயங்களை பேச பழகிக் கொள்ள வேண்டும். அது அவனை மற்றவர்கள் மதிக்க வைக்கும். பெண்களுக்கு பேசும் சக்தியை இறைவன் கொடுத்திருக்கிறான் அப்படி பேசுவது அவர்களுடைய மனபாரத்தை குறைக்கும் என்று கூறுகிறார்கள்.
அதிகம் பேசும் விருப்பமுள்ள பெண்கள் அதற்கு தகுந்த உத்தியோகத்தை தேர்வு செய்து பயிற்சி பெறலாம். டூரிஸ்ட் கைடுகளாக பணிபுரிபவர்கள் நிறைய விஷயங்களை கற்றும் கேட்டும் அறிவை வளர்த்துக் கொள்கிறார்கள்.
அதனை மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்லும் ஆற்றலை பெற்று, பயணிகளை வழிநடத்தும் போது, அது அவர்களுக்கு ஒரு ஆத்ம திருப்தியைத் தருகிறது. அதே போல பள்ளி ஆசிரியர்கள் தாங்கள் கற்ற கல்வியை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறும் போது அவர்கள் சமூகத்தில் மேன்மை பெறுகிறார்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சைவம் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?
» சைவம் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?
» பியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா?
» பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?
» பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?
» சைவம் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?
» பியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா?
» பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?
» பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum