காலம் மாறினால் காதலும் மாறுமா?
Page 1 of 1
காலம் மாறினால் காதலும் மாறுமா?
கண்ணோடு காண்பதெல்லாம் காதலாகி விடாது. பார்த்த மாத்திரத்தில் வந்து விடுவது காதலும் இல்லை. `சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை, தந்துவிட்டேன் என்னை...' என்று கவிஞர்கள் உருகி உருகிப் பாடியதெல்லாம் இன்றைய காதலர்களுக்குப் பொருந்தவே பொருந்தாது.
இன்றைய தலைமுறை முதல் பார்வையை பெரும்பாலும் `இவர் எப்படி' என்பதை எடை போட மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். அடுத்தடுத்த தற்செயலான, அல்லது தற்செயல் மாதிரியான திட்டமிட்ட சந்திப்புகள் அவர்களிடம் ஒருவித பிடிப்பை ஏற்படுத்தலாம்.
இதில் பிடித்தாலும், பிடிக்காத மாதிரி நடிப்பவர்கள் ஆண்கள் தான். இதனால் தான் பெண்கள் தங்கள் காதலை சொல்ல அத்தனை அலைச்சல்களுக்கு ஆளாகிறார்கள். அதற்குள் பல இரவுகள் தூக்கம் தொலைக்கிறார்கள். பாலிருந்தும் பழமிருந்தும் பசியாற மறக்கிறார்கள். சரி, இருக்கட்டும்.
இப்படியெல்லாம் போராடி ஒருவழியாக காதல் மகுடத்தை கைப்பற்றி விட்டார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இந்தக் காதலை கல்யாணம் வரை கொண்டு போக எத்தனை பேரால் முடிகிறது? சின்னச் சின்ன ஊடல்கள், கொஞ்சம் கோபம் என்று காதல் காலத்தை கார்காலமாய் நகர்த்துகிறவர்களுக்கு மத்தியில், நிஜமாகவே சண்டை போட்டு காதலை அவசரமாய் கல்லறைக்கு அனுப்பி விட்டு அதேவேகத்தில் இன்னொரு வரை தங்கள் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்கிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
அதுவரை எதுவுமே நடக்காதது போல் புது வாழ்வு காணத் தொடங்கி விடுகிறார்கள். தேவதாஸ் கால காதல்கள் அப்போதெல்லாம் `அடைந்தால் மகாதேவி... இல்லையேல் மரணதேவி' என்பதாக மட்டுமே இருந்தன. இதனால் தான் `உலகே மாயம் வாழ்வே மாயம்' பாட்டு அன்றைய காதலர்களின் அமுதகீதமாக தொடர்ந்தது. ஆனால் இன்று? பார்க்கிறார்கள். பழகுகிறார்கள்.
காதலாகிறார்கள். கல்யாணம் வரை வருவதற்குள் கருத்து வேறுபாடு வந்து விட்டால் காதலுக்கு `பை...பை...' சொல்லிப் போய் விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் காதலைப் பொறுத்தவரையில் `அடைந்தால் மகாதேவி, இல்லையேல் மல்லிகாதேவி' ரகம்.
`இன்னொரு பெண்ணே இல்லாத உலகில்தானே இருந்த ஒரே ஒரு காதலிக்காக நீ வாட வேண்டும்' என்று யாரோ ஒரு சந்தர்ப்பக் காதலன் எப்போதோ சொன்னதை தங்களுக்காகவே சொன்னதாக எடுத்துக்கொண்டு அடுத்த காதல் அல்லது கல்யாணத்திற்குள் போய் விடுகிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள் மறுபடியும் பழைய காதலி எங்காவது சந்திக்க நேர்ந்தால் கூட `ஹாய்' சொல்லி இரண்டொரு வார்த்தை பேசும் அளவுக்கும் தங்கள் இயல்பாக்கிக் கொண்டிருப்பார்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» காலம் மாறினால் என்ன!
» பிறவிக்குணம் மாறுமா?
» வறுமையால் கள்ளி பால் கொடுப்பது அந்த காலம்… கள்ள காதல் உல்லாசத்துக்காக விஷம் கொடுப்பது இந்த காலம்!
» காதலும், கல்யாணமும்
» காதலும் வாழ்வும்
» பிறவிக்குணம் மாறுமா?
» வறுமையால் கள்ளி பால் கொடுப்பது அந்த காலம்… கள்ள காதல் உல்லாசத்துக்காக விஷம் கொடுப்பது இந்த காலம்!
» காதலும், கல்யாணமும்
» காதலும் வாழ்வும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum