தூசி.. ஒரு நிஜ போலீஸ் ஸ்டோரி!
Page 1 of 1
தூசி.. ஒரு நிஜ போலீஸ் ஸ்டோரி!
காஞ்சிபுரத்துக்குப் பக்கத்திலிருக்கிறது தூசி என்ற கிராமம். திருவண்ணாமலை மாவட்ட எல்லைக்குள் வருகிறது.
இந்த கிராமத்துப் போலீஸ் ஸ்டேஷனில் 12 ஆண்டுகளுக்கு முன் ஒரு சம்பவம் நடந்தது. இன்னும் கூட மக்களால் மறக்க முடியாத சம்பவம் அது.
அந்தக் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வந்தார் ஒருவர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். மிகவும் கண்டிப்பான அதிகாரி. லஞ்சம் வாங்காதவர். மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்தவர். கள்ளச் சாராயத்தை ஒழிப்பதில் பக்கத்து மாவட்ட எஸ்பியாக இருந்த ஷைலேந்திரபாபுவே அசந்து போகும் அளவுக்கு துடிப்பாகச் செயல்பட்டார். தூசி கிராமத்தையொட்டி ஏரிகளும், பாலாறும் இருப்பதால், சாராய ஊறல் போடுபவர்களுக்கு அது மிக வசதியாக இருந்தது. இந்த இன்ஸ்பெக்டரோ இரவோடு இரவாக ஊறல் வேட்டையாடி கதிகலக்கிவிடுவார்.
இவரது இந்த துடிப்பான செயலை விரும்பாத அந்தப் பகுதி சாராய வியாபாரிகள் முதலில் சாதிரீதியாக இந்த இன்ஸ்பெக்டருக்கு தலைவலி கொடுத்தனர். அதற்கெல்லாம் மசியாததால், அரசியல் பலத்துடன் அவரை மெண்டல் என்று பட்டம் சூட்டி பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கே அனுப்பி விட்டார்கள்.
கூடவே லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. ஆனால் பள்ளிக்கரணையில் இருந்த அந்த அதிகாரியின் வீடோ குடிசையாக இருந்தது. சோதனை செய்ததில் ஒன்றும் தேறவில்லை. இருந்தாலும் மனநிலை பாதிக்கப்பட்டவராகவே அவர் பார்க்கப்பட்டார். சஸ்பென்ஷன் பின்னர் டிஸ்மிஸாகிவிட்டது. அந்த அதிகாரியின் பெயர் ஹரிபாபு.
இந்தக் கதையைத்தான் இப்போது படமாக எடுக்கிறார்கள், தூசி எனும் பெயரில்.
ஷாம் தயாரித்து இயக்கும் படம் இது. இந்தக் கதை தன்னை அழுத்தமான ஒரு ஹீரோவாக நிலை நிறுத்தும் என நம்புகிறார் ஷாம். இவரது மற்றொரு படமான அகம் புறம் இயக்குநர் திருமலை இயக்குகிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» போலீஸ் வேடத்தில் ஆர்யா!
» நந்தா நந்திதா படத்தின் ஒன் லைன் ஸ்டோரி!
» ‘லவ் ஸ்டோரி’ படத்தில் மீண்டும் நீச்சலுடையில் நயன்!
» ‘லஜ்ஜோ’… தூசி தட்டும் மணிரத்னம்… அமீர்கான் இணைவரா?
» கலர்புல் போலீஸ்!
» நந்தா நந்திதா படத்தின் ஒன் லைன் ஸ்டோரி!
» ‘லவ் ஸ்டோரி’ படத்தில் மீண்டும் நீச்சலுடையில் நயன்!
» ‘லஜ்ஜோ’… தூசி தட்டும் மணிரத்னம்… அமீர்கான் இணைவரா?
» கலர்புல் போலீஸ்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum