படைக்க வேண்டிய பிரசாதங்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
படைக்க வேண்டிய பிரசாதங்கள்
நவராத்திரியின் 9 நாட்களும் ஒவ்வொரு விதமான பிரசாதங்களை வைத்து படைக்க வேண்டும்.
முதல் நாள்:-
காலை: பலவிதக்காய்களும், பருப்பும் கலந்த கதம்ப சாதத்தை பிரசாதமாக கொடுக்கலாம். இதனால் பகை விலகும். எதிர்ப்புகள் அகலும், இன்னல்கள் தீர்ந்து இன்பம் சேரும்.
மாலை: செவ்வாய்க்கிழமையாக அமைந்துள்ளதால் செவ்வாயான அங்காரகனுக்கும், துர்க்கைக்கும் உகந்த தான சிவப்பு காராமணி சுண்டலை வினியோ கிக்கலாம்.
இரண்டாம் நாள்:-
காலை: தயிர் சாதம் பிரசாதம், இதன் மூலம் விரும்பிய செல்வங்களைப் பெறலாம்.
மாலை: புதன் கிழமையாதலால் புத பகவானுக்குகந்த பாசிப்பருப்பை சுண்டலாக நிவேதனம் செய்து தாம்பூலத்துடன் அளிக்கலாம்.
மூன்றாம் நாள்:-
காலை: தேங்காய் சாதத்தை பிரசாதமாக வழங்குவது சிறந்தது. இதனால் கவலைகள் நீங்கி செல்வம் பெருகும். எதிர்ப்புகள் விலகும்.
மாலை: வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்தது. கொண்டைக்கடலை சுண்டல் விநியோகிக்கலாம்.
நான்காம் நாள்:-
காலை: எலுமிச்சை சாதத்தை பிரசாதமாக அளிக்கலாம். இதனால் கல்வி வளர்ச்சியும், ஞான விருத்தியும் உண்டாகும்.
மாலை: வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானுக்காக அரிசியுடன் வெல்லம், தேங்காய் சேர்த்து அரிசிப்புட்டு செய்து தாம்பூலத்துடன் அளிக்கலாம்.
ஐந்தாம் நாள்:-
காலை: வெண்பொங்கலை பிரசாதமாகக் கொடுப்பது உகந்தது. இதன் மூலம் வறுமை நீங்கி, வளம் பெருகும். ஆயுள் விருத்தி உண்டாகும்.
மாலை: இது தவிர நவக்கிரக பலன்களைக் கருதி, அந்தந்த கிழமைக்கேற்ப நவதானியங்களில் ஏதேனும் ஒன்றைச் சுண்டலாகச் செய்து, வெற்றிலை பாக்குடன் கொடுப்பது நல்லது. ஐந்தாம் நாள் சனிக்கிழமையாக அமைவதால் சனிபகவானுக்கு கருப்பு கொண்டைக் கடலை சுண்டல் செய்யலாம்.
ஆறாம் நாள்:-
காலை: புளியோதரையை பிரசாதமாகக் கொடுக்கலாம். இதன் மூலம் நோய்கள் நீங்கும். உள்ளத்தில் அமைதி கிடைக்கும்.
மாலை: ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரியபகவானுக்காக கோதுமையால் செய்யப்பட்ட இனிப்பு, போன்றவற்றை தாம்பூலத்துடன் கொடுக்கலாம்.
ஏழாம் நாள்:-
காலை: சர்க்கரைப் பொங்கல், இதனால் தானிய விருத்தி உண்டாகும். வாழ்வு சிறப்படையும், பொருளாதார முன்னேற்றம் ஏற்பாடும்.
மாலை: சந்திர பகவானுக்காக அரிசி கலந்த தேன் குழல், தட்டை முதலியவற்றை தாம்பூலத்துடன் கொடுக்கலாம்.
எட்டாம் நாள்:-
காலை: பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, ஆகியவை சேர்ந்த பருப்பு பாயசத்தை, உடையுடன் நிவேதனம் செய்ய வேண்டும். கேட்கும் வரங்கள் எளிதில் கிடைத்து நலம் பெறலாம்.
மாலை: மாலையில் நவதானியம் சுண்டல் கொடுக்கலாம்.
ஒன்பதாம் நாள்:-
காலை: சர்க்கரைப் பொங்கலில் நெய் அதிகம் சேர்த்த அக்கார வடிசலை நிவேதனம் செய்யலாம்.
மாலை: கருப்பு கொண்டைக்கடலை சுண் டலுடன் தாம்பூலத்துடன் கொடுக்கலாம். *
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» படைக்க வேண்டிய பிரசாதங்கள்
» நவராத்திரியில் படைக்க வேண்டிய பிரசாத முறைகள்
» சிவபூஜையின்போது படைக்க வேண்டிய மலர், இலை மற்றும் நைவேத்யங்கள்
» பல்வேறு புகார்களை எழுத வேண்டிய முறையும், அனுப்ப வேண்டிய முகவரிகளும்
» பிரசாதங்கள்
» நவராத்திரியில் படைக்க வேண்டிய பிரசாத முறைகள்
» சிவபூஜையின்போது படைக்க வேண்டிய மலர், இலை மற்றும் நைவேத்யங்கள்
» பல்வேறு புகார்களை எழுத வேண்டிய முறையும், அனுப்ப வேண்டிய முகவரிகளும்
» பிரசாதங்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum