பிரார்த்தனையும், பலன்களும்
Page 1 of 1
பிரார்த்தனையும், பலன்களும்
அருணாசலேசுவரரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கேட்கும் வரங்களை எல்லாம் தரும் மூர்த்தியாக அருணாச்சலேசுவரர் உள்ளார். கல்யாண வரம் வேண்டுவோர், குழந்தை வரம் வேண்டுவோர், வியாபாரத்தில் விருத்தியடைய விரும்புவோர், உத்தியோக உயர்வு வேண்டுவோர், வேலை வாய்ப்பு, சுய தொழில் வாய்ப்பு வேண்டுவோர் என்று எந்த வேண்டுதல் என்றாலும் இத்தலத்து ஈசனிடம் முறையிட்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
உடல் ரீதியாக பலம் குன்றியவர்கள், பிணி கண்டவர்கள், பிரிந்து வாழும் தம்பதிகள், அண்ணன் தம்பி பிரச்சினைகள் என்று அனைத்து தரத்து பிரச்சினைகளையும் போக்கும் தலம். மேலும் இந்த ஈசனை வணங்குவோர்க்கு வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கும். குறிப்பாக மனஅமைதி வேண்டுவோர் இத்தலத்தில் லட்சக்கணக்கில் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் ஈசனை வழிபட்டால் முக்தி கிடைக்கும். அண்ணாமலையாரிடம் வேண்டிக் கொள்வோர் தங்கள் நேர்த்தி கடனாக மொட்டைபோட்டு முடிக் காணிக்கை செலுத்துகின்றனர். குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி போடுகின்றனர். இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. தானியங்கள், (துலாபாரம்) எடைக்கு எடை நாணயம், பழங்கள், காய்கனிகள், வெல்லம் ஆகியவையும் பக்தர்களால் நேர்த்தி கடனாகத் தரப்படுகின்றன.
சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்துகின்றனர். சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மா பொடி, பால், தயிர், பழ வகைகள், கரும்பு சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர், ஆகியவற்றால் அபிஷேகம் செய்கிறார்கள். உலர்ந்த தூய புத்தாடை சாத்துகிறார்கள்.
நெய் தீபம் ஏற்றலாம். சுவாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்கிறார்கள். சுவாமி அம்பாளுக்கு கல்யாண உற்சவம் செய்து வைப்பதையும் நேர்த்தி கடனாக நிறைய பக்தர்கள் செய்கிறார்கள்.
பிரம ஞானம்....
கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலை திருக்கோவிலுக்குள் சிவகங்கை தீர்த்தத்தில் புறஅழுக்குப்போக புனிதநீராடி பிரம்ம தீர்த்தத்தில் நீராடினால் பிரமஞானம் பெறலாம்.
கார்த்திகை தீபத்திற்கு `நெய்குடம்' கட்டுதல்....
பக்தர்களின் பிரார்த்தனை உச்சகட்டமாக அமைவது கார்த்திகை தீபத்திற்கு `நெய்குடம்' கட்டுதலாகும். இதற்கு திருக்கோவில் மூலம் தரமான நெய் `ஆவின்' நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு குறைந்த விலையில் சேவர்த்திகளுக்கு நெய்குடம் செலுத்த சப்ளை செய்யப்பட்டு மலைஉச்சிக்கு கார்த்திகை தீபத்திற்காக அனுப்பப்படுகிறது.
அண்ணாமலையார் மை.....
கார்த்திகை தீபத்திற்குப் பிறகும் மலைமேல் உள்ள தீபமானது 10 நாட்களுக்கு குறையாமல் ஏற்றி வைக்கப்படும். அதற்குப்பின் தீபம் ஏற்றி வைக்க பயன்படுத்தப்பட்ட பாத்திரம் திருக்கோவிலுக்கு எடுத்துவரப்படும். அப்பாத்திரத்தில் எஞ்சியுள்ள கருமை நிறமுள்ள சாம்பல் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. பக்தர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த மை அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மோட்ச தீபம்....
திருக்கோவிலில் கிழக்கு ராஜகோபுரத்தின் உச்சியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள அகல் விளக்குகளில் இறந்தவர்கள் மோட்சம் சென்றடைய வேண்டுதல் செய்து, இறந்தவர்கள் பெயரில் உடல்அடக்கம் செய்யப்படும் நாள் அல்லது திதி அன்று அவரவர்களின் பிரார்த்தனைக்கு ஏற்றவாறு நல்லெண்ணெய் (அல்) இலுப்பை எண்ணெயில் மோட்சதீபம் போடப்பட்டு வருகிறது. இது எந்த திருக்கோவிலிலும் இல்லாத பிரார்த்தனை சிறப்பாகும்.
கரும்பு தொட்டில் கட்டுதல்.....
பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் அண்ணாமலையாரை வேண்டி குழந்தை பிறந்ததும் திருக்கோவிலுக்கு வந்து அர்ச்சனை ஆராதனை செய்து கரும்பு கட்டுகள் கொண்டு வந்து புதிய புடவையினால் தொட்டில் கட்டி அதில் குழந்தையை படுக்க வைத்து மாடவீதி வலம் வந்து பிரார்த்தனை செலுத்துவது எந்த திருக்கோவிலிலும் இல்லாத பிரார்த்தனை சிறப்பாகும்.
தல விருட்சம் (மகிழ மரம்)......
மூன்றாம் பிரகாரத்தில் தலவிருட்சமான மகிழ மரம் உள்ளது. குழந்தை பாக்கியமற்றவர்கள் இறைவனை வேண்டிக் கொண்டு துணியால் செய்யப்பட்ட சிறிய தொட்டில்களை இம்மரத்தின் கிளைகளில் கட்டுவார்கள். அவர்களுடைய வேண்டுதல் நிறைவேறியவுடன் தங்கள் குழந்தைகளுடன் இத்திருக்கோவிலுக்கு வந்து தாங்கள் கட்டியிருந்த துணித்தொட்டில்களை நீக்கி விட்டு காணிக்கை செலுத்துவது வழக்கமாக உள்ளது. *
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» பூக்களும் பலன்களும்
» பூக்களும் பலன்களும்
» கனவுகளும் பலன்களும்
» பூக்களும் பலன்களும்
» கனவுகளும் பலன்களும்
» பூக்களும் பலன்களும்
» கனவுகளும் பலன்களும்
» பூக்களும் பலன்களும்
» கனவுகளும் பலன்களும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum