திரையுலகின் பட்டத்து ராஜாக்களும், ராணிக்களும்!
Page 1 of 1

உள்நாக்கில் வளையம் மாட்டுவதற்கும், பெயருக்கு முன்னால் பட்டத்தைச் சேர்த்துக்கொள்வதற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. புதிதாக வளையம் மாட்டிக்கொண்ட நபர், அதன் மூலம் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். சதா வாயைப் பிளந்து வைத்து, நாக்கை வெளியில் துருத்திக் காட்டி தனது வளையத்தை மற்றவர்களின் நினைவில் ஏற்றுவது கொஞ்சம் கடினமான பணிதான்.
பக்கத்தில் இருப்பவர் துவங்கி, பத்து, நூறு, ஆயிரம், லட்சம் என கணக்கிலடங்கா நபர்களின் கவனத்தை ஈர்க்க பொறுமை அவசியம். ஒரு கட்டத்தில், சம்பந்தப்பட்ட ஆளின் முகம் மறந்துபோய், அவரது வளையமே அடையாளப் பொருளாகிவிடும். அதனால்தானா என்னவோ, திரைப்பட நட்சத்திரங்கள், தங்களுக்கான பட்டத்தை, “பப்ளிசிட்டி’ செய்வதில் அதீத தீவிரம் காட்டி வருகின்றனர்.
இளைய தளபதி என்ற கிளைப் பெயரில் இருந்து துவங்கிய இந்தப் பட்டம், சின்னத் தளபதி, புரட்சித் தளபதி, வீரத் தளபதி எனத் தொடர்கிறது. அதேபோலத்தான் “புரட்சி’யும். நாக்கில் தேன் தடவினால், வெளியாகும் அனைத்து வார்த்தைகளும் இனிப்பாகிவிடாது என்பதை உணர்ந்த அஜித், தனது வளையத்தை கழட்டி வைத்து விட்டார்.
“வெறும் வாயில் பேசினாலே புரிய மாட்டேங்குது… இதுல எதுக்கு வெத்தல பாக்கு…’ என்பதை பட்டுணர்ந்த பரத், தனது சின்னத் தளபதி பட்டத்தை தூர வைத்துவிட்டார்.
அதேநேரத்தில், இதுவரை வெறும் பெயரோடு இருந்த சினேகா, “பவானி’ படத்தின் மூலம் “புரட்சி நாயகி’யாக உருவெடுத்து உள்ளார்.
பழகுவதற்கு இனியவரான இசையமைப்பாளர் பரத்வாஜ், “நந்தி’ மூலம் “இசைச் சர்வாதிகாரி’யாக உருமாறியிருக்கிறார்.
“செவிப்பறை பத்திரம்…’ வேறென்ன சொல்ல…!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மதுரையில் வளரும் பட்டத்து யானை
» விஷாலின் பட்டத்து யானை பூஜை
» தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் நினைவுநாள்: திரையுலகினர் புறக்கணித்த பரிதாபம்…!
» பட்டத்து யானையின் பவனி
» பணிப்பெண்ணான பட்டத்து ராணி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum