கார்த்திகை தீபத்தின் கதை
Page 1 of 1
கார்த்திகை தீபத்தின் கதை
முன்னொரு காலத்தில் ஒரு கார்த்திகை பவுர்ணமியன்று ஒரு சிவாலயத்தில் தீபம் ஒன்று நீண்ட நேரம் எரிந்து திரி கருகி அணையும் தருவாயில் மெல்லியதாக எரிந்து கொண்டிருந்தது. அந்த சமயம் அங்கு வந்த எலி ஒன்று விளக்கிலிருந்த திரியை இழுத்துப் போகும் நோக்கத்தோடு அணைந்து போகும் நிலையிலிருந்த அத்திரியை இழுத்தது.
எலியினால் தூண்டப்பட்ட திரி பிரகாசமாக எரியத் துவங்கியதும் எலி பயந்து ஓடி விட்டது. கார்த்திகை பவுர்ணமியன்று சிவன் ஆலயத்தில் விளக்கை பிரகாசமாக எரிய வைத்து புண்ணியத்தைச் செய்ததால் அந்த எலி அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்து சிவ பக்தராக விளங்கினார்.
இறைவனின் கருணையால் தன் முற்பிறவியினை அறிந்த மகாபாலி தன் ஆட்சி காலத்தில் கார்த்திகை தீப விழாவை சிறப்பாக கொண்டாடி வந்தார். பின்னர் அவர் இறைவனின் திருவடியைச் சேரும் காலத்தில், இறைவனை நோக்கி `மக்கள் அனைவரும் இக்கார்த்திகை பவுர்ணமியன்று தீபமேற்றி வழிபட்டு நன்மை அடைய வேண்டும்' என்று வேண்டினார். அவ்வாறே ஈசனும் வரமளிக்க இன்றும் மக்கள் அனைவரும் இல்லந்தோறும் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள்
» கார்த்திகை தீபத்தின் சிறப்பு!
» திருவண்ணாமலை தீபத்தின் மகிமையும் வரலாற்றுச் சுவடுகளும்
» கார்த்திகை சோமவார விரதம்
» கார்த்திகை தீப தத்துவம்
» கார்த்திகை தீபத்தின் சிறப்பு!
» திருவண்ணாமலை தீபத்தின் மகிமையும் வரலாற்றுச் சுவடுகளும்
» கார்த்திகை சோமவார விரதம்
» கார்த்திகை தீப தத்துவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum